சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்தில் சிக்கி 7 பேர் பலி.. தொழிலாளர்களை மீட்கும் பணி தீவிரம்
சிவகாசி: சிவகாசி அருகே உள்ள சின்னகாமன்பட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி 2 பெண்கள் உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 4 பேரில் 2 பேர் உயிரிழந்துள்ளதால் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிவாகசி அருகே உள்ள சின்னகாமன்பட்டியில் கோகுலேஸ் ஃபயர் வொர்க்ஸ் என்ற தனியாருக்குச் சொந்தமான பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. இந்த ஆலையில் வழக்கம்போல தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்த நிலையில், திடீரென இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அருகிலிருந்தவர்கள் தீயணைப்பு நிலையத்துக்கு உடனடியாக தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்த தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த விபத்தில் 2 பெண்கள் உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். பலத்த காயமடைந்த 4 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிந்தனர். அவர்களில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், உயிரிழப்பு எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.
பட்டாசு ஆலையில் வேறு யாரேனும் தொழிலாளர்கள் சிக்கியுள்ளனரா என தேடும் பணியிலும், தீயை அணைக்கும் பயணியிலும் தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வெடி விபத்தின்போது தொழிலாளர் உள்ளே பணியாற்றிக் கொண்டிருந்தால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications