சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து - ஒருவர் காயம்
சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் இன்று வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. ஆலைக்குள் தொழிலாளர்கள் சிக்கியுள்ளதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
சிவகாசி : விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே காக்கிவாடன் பட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் இன்று வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. நேற்று சாத்தூரில் நிகழ்ந்த வெடி விபத்தில் 19 பேர் உயிரிழந்த நிலையில் இன்று சிவகாசி அருகே விபத்து நிகழ்ந்துள்ளது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video

காக்கிவாடன் பட்டியில் கிருஷ்ணசாமி என்பவருக்கு சொந்தமான கேஆர் பட்டாசு ஆலையில் இன்று காலையில் பேன்சி ரக பட்டாசுகள் தயாரிக்கும் ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. தீயணைப்பு வாகனங்கள் ஆலையை நோக்கி விரைந்துள்ளன. பட்டாசுகள் வெடித்து சிதறிக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆலைக்குள் தொழிலாளர்கள் சிக்கியுள்ளதால் பதற்றம் உருவாகியுள்ளது.

சாத்தூர் அருகே அச்சங்குளத்தில் உள்ள மாரியம்மாள் பட்டாசு ஆலையில் நேற்று நிகழ்ந்த விபத்தில் 19 பேர் உயிரிழந்தனர். 30க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வரும் நிலையில் இன்றும் விபத்து ஏற்பட்டுள்ளது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
அந்த ஆலையில் பட்டாசுகள் தொடர்ந்து வெடித்து சிதறி வருவதால் யாரும் அருகில் நெருங்க முடியாத நிலையில் உள்ளதாக தவல் வெளியாகியுள்ளது. வெடி விபத்து நிகழ்ந்துள்ள ஆலை அருகே ஏராளமானோர் குவிந்துள்ளதால் பதற்றம் அதிகரித்துள்ளது.
இதே ஆலையில் கடந்த 2018 ஆம் ஆண்டு ஏற்பட்ட வெடி விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். இரண்டாவது முறையாக இன்றும் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இன்று நிகழ்ந்த விபத்தில் ஒரு தொழிலாளி காயமடைந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications