100% அவர் தான் காரணம்! ஷமியை Boycott செய்ய சொன்னாங்களே? இப்போ எப்படி? ரஜினி கூறிய தரமான பதில்
சென்னை: 2021ல் முகமது ஷமியை இந்திய அணியில் இருந்து புறக்கணிக்க வேண்டும் எனக்கூறினார்களே? என்ற கேள்விக்கு நடிகர் ரஜினிகாந்த் பரபரப்பான பதிலடியை கொடுத்துள்ளார். நேற்றைய போட்டியில் இந்திய அணி வெற்றி பெற முகமது ஷமி தான் 100 சதவீதம் காரணம் என ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் 10 50 ஓவர் உலககோப்பை கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது. தற்போது இந்த போட்டி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. லீக் சுற்றுகள் முடிவடைந்த நிலையில் இன்றுடன் அரையிறுதி போட்டிகள் முடிவுக்கு வர உள்ளன.

அதாவது லீக் சுற்று முடிவில் இந்தியா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, தென்ஆப்பிரிக்கா ஆகிய அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின. குறிப்பாக இந்தியா 9 போட்டிகளிலும் வென்று புள்ளிபட்டியலில் 18 புள்ளிகள் பெற்று அரையிறுதி போட்டிக்கு முன்னேறியது.
இதையடுத்து நேற்று அரையிறுதி போட்டி தொடங்கியது. மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடந்த போட்டியில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதின. இதில் முதலில் பேட் செய்த இந்திய அணி 50 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 397 ரன்கள் எடுத்தது. விராட் கோலி, ஸ்ரேயாஸ் அய்யர் ஆகியோர் சதமடித்தனர். விராட் கோலி ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 50 சதத்தை பூர்த்தி செய்து சச்சின் சாதனையை முறியடித்தார். அவர் 117 ரன் குவித்தார். ஸ்ரேயாஸ் அய்யர் 105 ரன்கள் எடுத்து இருந்தார்.
அதன்பிறகு களமிறங்கிய நியூசிலாந்து அணி 48.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 327 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் இந்தியா 70 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முதல் அணியாக நுழைந்தது. இந்திய அணியை பொறுத்தமட்டில் 9.5 ஓவர்கள் வீசிய முகமது ஷமி 57 ரன்கள் விட்டுக்கொடுத்து 7 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இந்த போட்டியை நடிகர் ரஜினிகாந்த மும்பை வான்கடே மைதானத்தில் தனது மனைவி லதாவுடன் சேர்ந்து நேரில் பார்த்தார். இந்நிலையில் தான் இந்தியா-நியூசிலாந்து போட்டியை பார்த்த பிறகு நடிகர் ரஜினிகாந்த் இன்று சென்னை திரும்பினார். சென்னையில் அவர் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.
இந்த வேளையில் நடிகர் ரஜினிகாந்திடம், ‛‛கடந்த 2021ம் ஆண்டில் போட்டியில் இந்தியா தோற்றபோது முகமது ஷமியை புறக்கணிக்க (Boycott) வேண்டும் என கூறினார்கள். ஆனால் இந்த போட்டி ஜெயித்ததற்கு முகமது ஷமி முக்கியமான காரணமாக இருந்துள்ளார். இதை எப்படி பார்க்கிறீர்கள்?'' என கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு நடிகர் ரஜினிகாந்த், ‛‛ 100 சதவீதம் அவர் தான் காரணம்'' எனக்கூறிவிட்டு சென்றார்.
அதாவது 2021 டி20 உலககோப்பை போட்டியில் துபாயில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதியது. இதில் இந்திய அணியை 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வென்றது. இந்திய அணி 151 ரன்கள் எடுத்திருந்த நிலையில் பாகிஸ்தான் விக்கெட் இழப்பின்றி 152 ரன்கள் எடுத்தது. தொடக்க ஆட்டக்காரர்களான முகமது ரிஸ்வான் 79 ரன்களும், பாபர் ஆசம் 68 ரன்களும் எடுத்து வெற்றியை உறுதி செய்தனர்.
இந்த போட்டியில் இந்திய பவுலர்களின் பவுலிங் சுத்தமாக எடுபடவில்லை. குறிப்பாக இந்திய பவுலர்களில் முகமது ஷமி அதிக ரன்களை விட்டு கொடுத்து இருந்தார். இதையடுத்து சிலர் சமூக வலைதளங்களில் முகமது ஷமியை விமர்சிக்க தொடங்கினர். முகமது ஷமி இஸ்லாமியர் என்பதால் பாகிஸ்தான் அணிக்காக விட்டு கொடுத்து இருந்ததாக தெரிவித்தனர்.
இது பெரிய அளவில் அப்போது சர்ச்சையான நிலையில் நடப்பு உலககோப்பை தொடரில் அதிக விக்கெட் வீழ்த்தியோர் பட்டியலில் 22 விக்கெட்டுகளுடன் முகமது ஷமி முதலிடத்தில் உள்ளார். மேலும் இந்தியா தற்போது இறுதி போட்டிக்குள் நுழைந்ததில் இவரது பங்கு என்பது மிகப்பெரிய அளவில் உள்ளது என்பதை யாராலும் மறக்க முடியாது. இந்நிலையில் தான் நடிகர் ரஜினிகாந்திடம் அப்படியாக கேள்வி எழுப்பப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications
