Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கவனிச்சீங்களா! பாகிஸ்தானை துவம்சம் பண்ணதை விடுங்க.. இந்திய அணிக்கு கிடைத்த 4 வேற குட் நியூஸ்.. செம

Subscribe to Oneindia Tamil

சென்னை: உலகக் கோப்பை 2023 தொடரில் இந்திய அணிக்கு அடுத்தடுத்து 4 நல்ல செய்திகள் கிடைத்துள்ளன.

2023 உலகக் கோப்பை 50 ஓவர் தொடரில் அடுத்தடுத்து வென்று வருகிறது. வரிசையாக 3 உலகக் கோப்பை போட்டிகளில் இந்திய அணி வென்றுவிட்டது. ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் ஆகிய அணிகளை இந்தியா வீழ்த்தி உள்ளது. இனி வங்கதேசம், நியூசிலாந்து உள்ளிட்ட அணிகளை இந்தியா எதிர்கொள்ள வேண்டும். இந்த தொடரில் இந்தியா செமி பைனல் செல்லும் வாய்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது புள்ளிகள் பட்டியலிலும் முதல் இடத்தில் உள்ளது.

4 Major things sorted out for Team India in the World Cup 2023

குட் நியூஸ் 1: ஷ்ரேயாஸ் ஐயர் பார்ம் - இந்திய அணியில் மிடில் ஆர்டர் வீரர் மிகவும் முக்கியம். 2011 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி வெற்றிபெற மிடில் ஆர்டரில் ஆடிய யுவராஜ் சிங்தான் முக்கிய காரணமாக இருந்தார். அதேபோல் இந்த முறையும் இந்திய அணியில் மிடில் ஆர்டர் வீரர் நன்றாக ஆட வேண்டும் என்று எதிர்பார்ப்பு இருந்தது. முதல் போட்டியில் ஷ்ரேயாஸ் ஐயர் டக் அவுட் ஆனார். அடுத்த மேட்சிலும் 25 ரன்கள் மட்டும் அடிக்க முடிந்தது. ஆனால் நேற்று மிடில் ஓவர்களில் அரைசதம் அடித்து அசத்தி பார்மிற்கு திரும்பி உள்ளார் .

குட் நியூஸ் 2: அணியில் மீண்டும் சிராஜ் பார்மிற்கு வந்துள்ளார். ஆப்கானிஸ்தானுக்கு எதிரான மேட்சில் சிராஜ் 9 ஓவர் போட்டு ஒரு விக்கெட் கூட எடுக்கவில்லை. 76 ரன்கள் கொடுத்த அவர்.. 8.40 எக்கனாமியில் பவுலிங் செய்தார். ஆஸ்திரேலியாவிற்கு எதிரான மேட்சிலும் தொடக்கம் முதலே சரியாக பவுலிங் செய்யாத அவர் கடைசி ஓவரில் மட்டுமே ஒரே ஒரு விக்கெட் எடுத்தார். இரண்டு மேட்சிலும் லூஸ் பந்துகளை போட்டு இவர் ரன் கொடுத்தார். இந்த நிலையில் பாகிஸ்தான் மேட்சில் அவர் இருப்பதே சந்தேகமாக இருந்தது. ஆனாலும் பாகிஸ்தான் மேட்சில் பாபர் ஆஸம் உட்பட 2 பேரின் விக்கெட்டுகளை எடுத்து அசத்தி உள்ளார்.

குட் நியூஸ் 3: பும்ராவின் பார்ம் தொடர்ந்து சிறப்பாக உள்ளது. வரிசையாக இந்திய அணி 3 போட்டிகளில் வென்றுள்ளது. இந்த மூன்று போட்டியிலும் இந்திய அணிக்கு சாதகமாக இருந்தது பும்ராவின் பவுலிங்தான். மூன்று மேட்சிலும் பும்ரா மிக சிறப்பாக பவுலிங் செய்து இதுவரை 8 விக்கெட்டுகளை எடுத்தார்.
ஆஸ்திரேலியாவிற்கு எதிராக 10-0-35-2
ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 10-0-39-4
நேற்று பாகிஸ்தானுக்கு எதிராக 7-1-19-2 விக்கெட்டுகளை எடுத்தனர். இந்தியா இப்படியே அதிரடியாக சென்று தொடரை வென்றால், அப்போது பும்ரா இந்த பார்மில் அப்படியே இருந்தால் கண்டிப்பாக இந்த தொடரின் தொடர் ஆட்ட நாயகன் விருதை பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குட் நியூஸ் 4: ஜடேஜா பவுலிங்கில் நல்ல பார்மில் உள்ளார். ஹர்திகே பாண்டியாவும் சிறப்பாக பவுலிங் செய்து வருகிறது. இவர்கள் இருவரும் பேட்டிங்கும் செய்ய சான்ஸ் கிடைத்தால் கண்டிப்பாக சிறப்பாக ஆடுவார்கள் என்று எதிர்பார்ப்படுகிறது. இதன் மூலம் இந்திய அணிக்கு 4 முக்கியமான டிபார்மென்டுகள் சரி செய்யப்பட்டு உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+