நீயெல்லாம் மனுஷனே கிடையாது.. சிக்ஸ், பவுண்டரியில் மட்டும் 100 ரன்கள்.. அபிஷேக் சர்மாவின் வெறித்தனம்!
ஐதராபாத்: டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணியின் அதிரடி வீரர் அபிஷேக் சர்மா 68 பந்துகளில் 10 சிக்ஸ், 10 பவுண்டரி உட்பட 135 ரன்களை விளாசி இருக்கிறார். இதன் மூலமாக டி20 கிரிக்கெட்டில் 184 இன்னிங்ஸில் 9 சதங்களை விளாசிய இந்திய வீரர் என்ற புதிய வரலாற்றையும் படைத்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணி விளையாடி வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் அக்சர் படேல் பவுலிங்கை தேர்வு செய்தார். இதன்பின் ஐதராபாத் அணிக்காக அபிஷேக் சர்மா - டிராவிஸ் ஹெட் கூட்டணி தொடக்கம் கொடுத்தது. முதல் 2 ஓவர்கள் நிதானம் காட்டிய அபிஷேக் சர்மா, 3வது ஓவரில் இருந்து பவுண்டரிகளை விளாச தொடங்கினார்.

அபிஷேக் சர்மாவை வீழ்த்த நிதிஷ் ராணாவை டெல்லி அணி கொண்டு வந்தது. ஆனால் அவர் வீசிய 3வது ஓவரில் மட்டும் 3 சிக்சர்களை விளாசினார். தொடர்ந்து அதிரடியாக ஆடிய அபிஷேக் சர்மா 25 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். நீண்ட நேரமாக இடதுகை ஸ்பின்னரான அக்சர் படேல் பவுலிங் செய்யவே வரவில்லை. வழக்கமாக பவர் பிளேவிலேயே அவர் அட்டாக்கில் வந்துவிடுவார்.
ஒரு பக்கம் டிராவிஸ் ஹெட் ஆட்டமிழக்க, கேப்டன் இஷான் கிஷன் வந்து அதிரடியில் விளாசி தள்ளினார். அவருடன் அபிஷேக் சர்மாவும் சேர்ந்து கொள்ள ஐதராபாத் அணியின் ஸ்கோர் உச்சத்திற்கு சென்றது. 45 பந்துகளில் அபிஷேக் சர்மா 90 ரன்களை கடந்தார். அப்போது ராணா வீசிய ஓவரில் அடுத்தடுத்து 2 சிக்சரை விளாசி தனது 2வது ஐபிஎல் சதத்தை எட்டினார்.
தொடர்ந்து அதிரடியாக ஆடிய அபிஷேக் சர்மா 68 பந்துகளில் 10 சிக்ஸ், 10 பவுண்டரி உட்பட 135 ரன்களை விளாசியதோடு, கடைசி வரை களத்தில் இருந்தார். இதனால் ஐதராபாத் அணி 20 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 242 ரன்களை குவித்தது. அபிஷேக் சர்மா பவுண்டரி மற்றும் சிக்ஸ் மூலமாக மட்டுமே 100 ரன்களை விளாசி இருப்பது ரசிகர்களிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதேபோல் டி20 கிரிக்கெட்டில் அபிஷேக் சர்மா அடிக்கும் 9வது சதம் இதுவாகும். ஏற்கனவே இந்திய அணிக்காகவும், ஐபிஎல் தொடரில் ஐதராபாத் அணிக்காக தலா 2 சதங்களை விளாசி இருக்கிறார். சையத் முஷ்டாக் அலி தொடரில் 5 சதங்களை விளாசியதால், இந்திய ஜாம்பவான் விராட் கோலியின் சாதனையை சமன் செய்துள்ளார்.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications