ரிக்கி பாண்டிங்கின் ஸ்பிரிங் பேட் தெரியுமா.. இந்திய வீரர்களுக்கே ஷாக் கொடுத்த இலங்கை வீரர்!
மும்பை: இந்திய அணி வீரர்களின் பேட்டில் ரப்பர் அடுக்கு இணைக்கப்பட்டது போல் உள்ளதாக பேசிய இலங்கை அணியின் பனுகா ராஜபட்ச, 90ஸ் கிட்ஸின் ரிக்கி பாண்டிங் ஸ்பிரிங் பேட் வதந்திக்கு உயிர் கொடுத்துள்ளார். இதன் காரணமாக பனுகா ராஜபட்சவை ரசிகர்கள் பலரும் கிண்டல் செய்ய தொடங்கினர்.
2003 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா அணியிடம் 125 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி கொடூரமான தோல்வியை அடைந்தது. அந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலியா கேப்டன் ரிக்கி பாண்டிங் 121 பந்துகளில் 8 சிக்ஸ், 4 பவுண்டரி உட்பட 140 ரன்களை விளாசி தள்ளினார். 90ஸ் கிட்ஸ் மனதில் இந்த இன்னிங்ஸ் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.

2023 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் அடைந்த தோல்வியை விடவும், 2003 தோல்வி இன்னும் பலருக்கும் ஆறாத வடுவாக உள்ளது. அந்தப் போட்டிக்கு பின் இந்திய ரசிகர்கள் மத்தியில் ஒரு புரளி கிளம்பியது. அதாவது ஆஸ்திரேலியா கேப்டன் ரிக்கி பாண்டிங் ஸ்பிரிங் பேட் பயன்படுத்தி தான் சதத்தை விளாசினார்.. இதனால் உலகக்கோப்பை பைனல் மீண்டும் நடத்தப்பட உள்ளதாக பேசினர்.
ஆனால் சோசியல் மீடியா கொஞ்சம் வளரத் தொடங்கிய பின், இது புரளி என்பது உறுதியானது. இதனிடையே ரிக்கி பாண்டிங்கும் அவ்வப்போது தனது உலகக்கோப்பை பைனல் பேட்டின் புகைப்படத்தை பகிர்ந்து ஜாலியாக கிண்டல் செய்வார். இந்த நிலையில் ரிக்கி பாண்டிங்கின் ஸ்பிரிங் பேட் புரளிக்கு இணையாக இலங்கை வீரர் பனுகா ராஜபட்ச ஒரு தகவலை வெளியிட்டுள்ளார்.
இலங்கை அணியின் அதிரடி பேட்ஸ்மேனான பனுகா ராஜபட்ச பேசுகையில், இந்திய வீரர்கள் பயன்படுத்தும் பேட்களில் ரப்பர் அடுக்கு இணைக்கப்பட்டதை போல் உள்ளது. மற்ற நாட்டு வீரர்கள் பயன்படுத்துவதைவிட இது சிறப்பானது. இது எப்படி சாத்தியம் என்பது என்னால் கற்பனை கூட செய்ய முடியவில்லை என்று தெரிவித்துள்ளார்.
இதனால் ரிக்கி பாண்டிங்கின் ஸ்பிரிங் பேட் கதையை அப்படியே இந்திய வீரர்களுக்கு இலங்கை வீரர் பனுகா ராஜபட்ச பொறுத்திவிட்டதாக இந்திய ரசிகர்கள் கிண்டல் செய்து வருகின்றனர். பனுகா ராஜபட்சவின் கருத்து இந்திய ரசிகர்கள் மட்டுமல்லாமல், இலங்கை ரசிகர்கள் மத்தியிலும் புலம்ப வைத்திருக்கிறது.
-
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு?












Click it and Unblock the Notifications