Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆர்சிபி அணி விற்பனை.. காரணமே விராட் கோலி தான்.. 2022ல் மிஸ்ஸான கனவை பிடிக்க தயாரான அதானி!

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: ஐபிஎல் தொடரில் 18 ஆண்டுகளில் ஆர்சிபி அணி முதல் முறையாக கோப்பையை வென்று சாதனை படைத்தது. இதனால் ஆர்சிபி அணி ரசிகர்கள் உற்சாகம் அடைந்தனர். 18 ஆண்டுகளாக விராட் கோலி காத்திருப்புக்கு ஒரு பலன் கிடைத்ததாக கொண்டாட்டங்கள் அரங்கேறியது. அதற்கேற்ப விராட் கோலியின் மைதானத்திலேயே கண்ணீருடன் நின்ற காட்சி பலரையும் நெகிழ்ச்சி அடைய வைத்தது.

இதனைத் தொடர்ந்து பெங்களூரில் நடந்த கொண்டாட்டத்தில் 11 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக பல்வேறு விசாரணை நடந்து வரும் நிலையில், ஆர்சிபி அணியை விற்பனை செய்ய அந்த அணியின் உரிமையாளர் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளி வந்துள்ளது. தற்போது ஆர்சிபி அணியை யுனைடெட் ஸ்பிரிட்ஸ் லிமிடெட் நிறுவனம் தன்வசம் வைத்துள்ளது.

Adani Group Eyes RCB IPL Team in Potential Franchise Takeover

ஆர்சிபி ஸ்பான்சர் வருவாய்

பிரிட்டனைச் சேர்ந்த இந்த நிறுவனம் 2016ஆம் ஆண்டு ஆர்சிபி அணியை வாங்கியது. இந்த உரிமையாளருடன் ஏற்பட்ட தொடர்பு காரணமாக விராட் கோலி லண்டனில் செட்டிலாக முடிவு எடுத்தார். அதேபோல் ஆர்சிபி அணிக்கு கிடைக்கும் வருவாயின் முகமாக விராட் கோலி மட்டுமே இருக்கிறார். ஒவ்வொரு ஆண்டும் ரூ.150 கோடி ஸ்பான்சர் வருவாயை விராட் கோலி மூலமாக ஆர்சிபி அணி பெற்று வருகிறது.

ஆர்சிபி தொடக்க விலை?

தற்போது விராட் கோலி டெஸ்ட் மற்றும் டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்துள்ள நிலையில், இன்னும் 2 சீசன்களில் ஐபிஎல் தொடரில் இருந்தும் விலகுவார் என்று கூறப்படுகிறது. இதனால் ஆர்சிபி அணியை விற்பனை செய்ய முடிவு எடுத்திருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. இதற்காக ரூ.17 ஆயிரம் கோடியை ஆரம்ப விலையாக நிர்ணயித்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

பங்குகள் விற்பனை

ஐபிஎல் தொடரில் ஒவ்வொரு அணியின் உரிமையாளர்கள் மாற்றம் அடைவது வழக்கமாக நடப்பதுதான். கடந்த சீசனில் கூட குஜராத் அணியின் பெரும்பான்மை பங்குகளை டோரண்ட் நிறுவனம் கைப்பற்றியது. பஞ்சாப், டெல்லி, ராஜஸ்தான் உள்ளிட்ட அணிகளின் பங்குகள் பல்வேறு தரப்பினர் கைகளில் இருப்பதும் அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.

அதானி ஆர்வம்

அந்த வகையில் ஆர்சிபி அணியின் பங்குகள் விற்பனைக்கு வந்தால், அதனை வாங்குவதற்கு கவுதம் அதானி ஆர்வமாக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஏனென்றால் அதானி நிறுவனம் ஏற்கனவே டபிள்யூபிஎல், ஐஎல்டி20 ஆகிய லீக்குகளில் அணிகளை வாங்கி இருக்கிறது. 2022ஆம் ஆண்டு குஜராத் அணியை வாங்க அதானி தீவிரமாக இருந்தார்.

ஐபிஎல் தொடர்

அதுமட்டுமல்லாமல் கபடி, கோ-கோ உள்ளிட்ட அணிகளிலும் அதானி நிறுவனம் முதலீடு செய்துள்ளது. இதனால் ஆர்சிபி அணி எவ்வளவு பெரிய தொகைக்கு விற்பனைக்கு வந்தாலும், ஐபிஎல் தொடரில் கால் பதிக்க அதானி நிறுவனம் நிச்சயம் மிகப்பெரிய தொகையை செலவு செய்ய முன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+