அந்த 2 பேரும் இல்லை.. மாற்று வீரர்களுக்கு எங்கே போவேன்.. புலம்பி தவிக்கும் மும்பை ஓனர் அம்பானி!
சென்னை: ஐபிஎல் தொடரின் எல்-கிளாசிக்கோ ஆட்டமாக பார்க்கப்படும் சிஎஸ்கே - மும்பை இடையிலான போட்டி மார்ச் 23ஆம் தேதி சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கவுள்ளது. இந்த போட்டியில் மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா விளையாட மாட்டார் என்று கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது பும்ராவும் விளையாட வாய்ப்பில்லை என்பது உறுதியாகியுள்ளது. இதனால் 13வது ஆண்டாக மும்பை அணியின் முதல் போட்டி சாபம் தொடரப் போவதாக ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.
2025ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இன்னும் ஒரு வாரத்தில் தொடங்கவுள்ளது. மார்ச் 22ஆம் தேதி நடக்கும் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா அணியை எதிர்த்து ஆர்சிபி அணி விளையாடவுள்ளது. இதன்பின் மார்ச் 23ஆம் தேதி நடக்கவுள்ள 3வது லீக் போட்டியில் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்த சிஎஸ்கே - மும்பை போட்டி நடக்கவுள்ளது.

சேப்பாக்கம் மைதானத்தில் போட்டி நடப்பதால், சென்னை அணி ரசிகர்கள் டிக்கெட்டுகளை பெற்றுவிட வேண்டும் என்று தீவிரமாக முயற்சித்து வருகின்றனர். இதனிடையே ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு ஒரு வாரம் முன்பே மும்பை அணி மிகப்பெரிய பின்னடைவை சந்தித்துள்ளது. ஏற்கனவே கடந்த சீசனில் ஸ்லோ ஓவர் ரேட் காரணமாக ஹர்திக் பாண்டியா ஒரு போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனால் முதல் போட்டியிலேயே கேப்டன் ஹர்திக் பாண்டியா இல்லாமல் மும்பை அணி களமிறங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஐபிஎல் தொடரில் முதல் பாதி போட்டிகளில் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரிட் பும்ரா விளையாட மாட்டார் என்று தெரிய வந்துள்ளது. ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரின் போது முதுகில் ஏற்பட்ட காயத்தில் இருந்து பும்ரா இதுவரை குணமடையவில்லை.
இதனால் ஏப்ரல் முதல் வாரத்திற்கு பின்னரே மும்பை அணியுடன் பும்ரா இணைவார் என்று கூறப்படுகிறது. இருப்பினும் அவர் எப்போது இணைவார் என்பது தொடர்பாக இதுவரை கூறப்படவில்லை. ஏற்கனவே 2023ம் ஆண்டு சீசனில் பும்ரா காயம் காரணமாக ஐபிஎல் தொடரிலேயே பங்கேற்கவில்லை. இதனால் மும்பை அணி மோசமான தோல்விகளை சந்தித்தது.
தற்போது ஹர்திக் பாண்டியா, பும்ரா இருவருமே விளையாட வாய்ப்பு இல்லாததால், சிஎஸ்கே அணியின் வெற்றி எளிதாக சாத்தியமாகும் என்று கூறப்படுகிறது. ஏனென்றால் இம்முறை மெகா ஏலத்தில் மும்பை அணி நிர்வாகம் அதிகமாக பிளேயிங் லெவனில் விளையாடும் வீரர்களுக்கே பணத்தை செலவு செய்தது. மாற்று வீரர்களுக்கு பெரிய தொகை கொடுத்து வாங்கவில்லை.
இதனால் ஹர்திக் பாண்டியா மற்றும் பும்ரா ஆகியோரின் தாக்கத்தை இளம் வீரர்களால் ஏற்படுத்த முடியுமா என்ற சந்தேகம் உள்ளது. மேலும், 2012ஆம் ஆண்டுக்கு பின் ஒருமுறை கூட மும்பை அணி தங்களின் முதல் ஐபிஎல் போட்டியில் வென்றதில்லை. இதனால் 12 ஆண்டு கால வரலாறு, 13வது ஆண்டாகவும் தொடரும் என்று பார்க்கப்படுகிறது.
இதனால் மும்பை அணியின் ரசிகர்கள் சோகமடைந்து உள்ளனர். அதுமட்டுமல்லாமல் பும்ராவின் காயம் குறித்து முழுமையாக தெரியாததால், அவருக்கான மாற்று வீரரை தேட முடியாமல் மும்பை அணியின் உரிமையாளர் ஆகாஷ் அம்பானி புலம்பி வருகிறார். ஒருவேளை பும்ரா இல்லையென்றால், இம்முறையும் மும்பை அணி கோப்பையை வெல்வது சந்தேகம்தான்.












Click it and Unblock the Notifications