கவனம் ஈர்த்த கோலியின் ‛எனர்ஜி பார்’ உணவு.. ‛கூலிங் கிளாஸ்’.. இவ்வளவு விலையா? ரசிகர்கள் பிரமிப்பு
லண்டன்: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் விராட் கோலி எடுத்து கொண்ட ‛எனர்ஜி பார்' மற்றும் அவர் அணிந்திருந்த ‛கூலிங் கிளாஸ்' ஆகியவை ரசிகர்களை கவர்ந்தது. இந்நிலையில் தான் அதன் விலைகள் தொடர்பான விபரம் வெளியாகி ரசிகர்களை ஆச்சரியத்தில் வியக்க வைத்துள்ளது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்து வருகிறது. இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் விளையாடி வரும் இந்த போட்டியில் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி 469 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தது. இந்திய அணி முதல் இன்னிங்சில் 296 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. ரஹானே 89 ரன்களும், ஷர்துல் தாக்குர் 51 ரன்களும் எடுத்தனர்.

இதையடுத்து 173 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட் இழப்புக்கு 270 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளேர் செய்தது. இதன்மூலம் இந்தியாவுக்கு 444 ரன்கள் இலக்காக ஆஸ்திரேலியாக நிர்ணயித்துள்ளது. இதையடுத்து இந்தியா 2வது இன்னிங்ஸை தொடங்கியது. இந்திய அணி 40 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் எடுத்த நிலையில் 4வது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.
விராட்கோலி 60 பந்துகளில் 7 பவுண்டரியுடன் 44 ரன்களும், அஜிங்கியா ரஹானே 59 பந்துகளில் 3 பவுண்டரிகளுடன் 20 ரன்களும் எடுத்து களத்தில் உள்ளனர். இன்று கடைசி மற்றும் 5வது நாள் ஆட்டம் மாலை 3 மணிக்கு துவங்கி நடைபெற உள்ளது. இந்தியாவின் வெற்றிக்கு 280 ரன்கள் தேவைப்படுகிறது. கைவசம் 7 விக்கெட்டுகள் உள்ளது. இதனால் இன்றைய போட்டி விறுவிறுப்பாக இருக்கும். ஏனென்றால் இந்திய அணி இலக்கை எட்டி வரலாறு படைக்குமா? அல்லது ஆஸ்திரேலிய அணி வாகை சூடுமா என்ற எதிர்பார்ப்பு எகிறி உள்ளது.

இந்நிலையில் தான் இந்திய அணியின் ‛ரன் மெஷின்' விராட் கோலி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் அணிந்த ‛கூலிங் கிளாஸ்' அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. கிரிக்கெட் விளையாடும் இந்தியா உள்பட பிற அணியினர் பலரும் ‛கூலிங் கிளாஸ்' அணிவதை வழக்கமாக கொண்டுள்ளனர். சூரிய ஒளியில் இருந்து தப்பித்து பந்துகளை சரியாக பார்த்து பீல்டிங் செய்யும் வகையில் வீரர்களுக்கு ‛கூலிங் கிளாஸ்' உதவுகிறது. வீரர்கள் ஒவ்வொருவரும் தங்களின் பொருளாதார நிலைமைக்கு ஏற்ற வகையில் ‛கூலிங் கிளாஸ்' வாங்கி பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் தான் விராட் கோலி இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலக டெஸ்ட் சாம்பியன் போட்டியில் அணிந்த ‛கூலிங் கிளாஸின்' விலை என்ன? என்பது உள்ளிட்டி சில தகவல்கள் கசிந்துள்ளன. அதாவது விராட் கோலி அணியும் ‛கூலிக் கிளாஸ்' புகழ்பெற்ற ஓக்லி பிராண்ட்டை சேர்ந்தது. இதன் விலை என்பது 173 அமெரிக்க டாலர் முதல் 200 அமெரிக்க டாலராகும். இந்திய மதிப்பில் கூற வேண்டும் என்றால் அதன் விலை ரூ.15 ஆயிரம் முதல் ரூ.16,509 என்ற அளவில் உள்ளது. இந்த ‛கூலிங் கிளாஸை' ரசிகர்களும் வாங்கி பயன்படுத்தலாம். இது தற்போதும் இணையதளங்கள் வாயிலாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அதேபோல் விராட் கோலி பீல்டிங் செய்யும்போது உடலுக்கு ஆற்றலை கொடுக்கும் ‛எனர்ஜி பார்'களை எடுத்து கொண்டார். அந்த பாக்கெட்டில் ‛கோ எனர்ஜி பார்' என எழுதப்பட்டு இருந்தது. எனர்ஜி பார் என்பது உடலுக்கு சக்தி கொடுக்கும் வகையிலான உணவு வகையாகும். இது உடலுக்கு தேவையான கொழுப்பு, கார்போஹைட்ரேட்டுகள், புரதங்கள், வைட்டமின்கள், தாது பொருட்கள் அடங்கிய கலவையாகும். இந்த விராட் கோலி சாப்பிட்ட ‛எனர்ஜி பார்' பற்றியும் பலரும் இணையதளங்களில் தேட தொடங்கி உள்ளனர்.
இந்நிலையில் தான் அதுபற்றிய விபரமும் வெளியாகி உள்ளது. அதாவது விராட் கோலி எடுத்து கொண்ட ‛எனர்ஜி பார்' சயின்ஸ் இன் ஸ்போர்ட்ஸ் என்ற நிறுவனத்தில் தயாரிக்கப்பட்டது. இந்த நிறுவனம் வீரர், வீராங்கனைகளுக்கான சிறப்பு உணவுகளை தயாரிப்பதில் புகழ் பெற்று விளங்குகிறது. இதன் 30 Go எனும் எனர்ஜி மினி பார்களின் ஒரு பாக்கெட் 45 யூரோக்களாக உள்ளன. இதன் இந்திய மதிப்பு என்பது ரூ.3,979 ரூபாயாகும். இது இந்தியாவில் எளிதில் கிடைக்காவிட்டாலும் கூட பல விளையாட்டு வீரர்கள் வாங்கி பயன்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி












Click it and Unblock the Notifications