மும்பை அணியில் ஆயுஷ் மாத்ரே, கம்போஜ்.. சிஎஸ்கே அணியில் ஹர்திக் பாண்டியா? அம்பானி போடும் திட்டம்!
மும்பை: ஐபிஎல் 2026 சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் இடையே மிகப்பெரிய 'டிரேடு' (Trade) நடைபெறப்போவதாக வெளியாகி வரும் செய்திகள் கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா சிஎஸ்கே அணிக்கு டிரேட் செய்யப் போவதாக கூறப்படுகிறது.
தமிழக அரசியல் சூழல் கொஞ்சம் இயல்பு நிலைக்கு திரும்பி இருப்பதால், கிரிக்கெட் ரசிகர்கள் ஐபிஎல் பக்கம் கவனத்தை திருப்பி இருக்கின்றனர். இந்த சீசனிலும் மும்பை அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியாமல் வெளியேறி இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா காயம் காரணமாக ஓய்வில் இருக்கிறார்.

மும்பை அணி வெளியேற்றம் உறுதியான பின், ஹர்திக் பாண்டியா அந்த அணியுடன் பயணம் செய்யவில்லை. அவரை மும்பை அணியின் சோசியல் மீடியா பக்கத்திலும் எந்த போஸ்ட்டிலும் டேக் செய்வதில்லை. இதனால் ஹர்திக் பாண்டியா மற்றும் மும்பை அணி உரிமையாளர்கள் மத்தியில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
இதனிடையே சிஎஸ்கே மற்றும் மும்பை அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது, சிஎஸ்கே சிஇஓ காசி விஸ்வநாதன் ஹர்திக் பாண்டியா உடன் நீண்ட நேரம் உரையாடினார். கடந்த சீசனில் இப்படிதான் சஞ்சு சாம்சனுடன் காசி விஸ்வநாதன் உரையாடி கொண்டிருந்தார். இதனால் சிஎஸ்கே அணிக்கு ஹர்திக் பாண்டியா டிரேட் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
அதற்கு பதிலாக சிஎஸ்கே அணியின் இரு இளம் வீரர்களை மும்பை அணி கேட்க உள்ளதாக கூறப்படுகிறது. சிஎஸ்கே அணியின் இளம் வீரர் ஆயுஷ் மாத்ரே மற்றும் இளம் வேகப்பந்துவீச்சாளர் அன்சுல் கம்போஜ் ஆகிய இருவரையும் மும்பை அணி கேட்க முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இவர்கள் இருவருமே இந்த சீசனில் சிஎஸ்கே அணியின் மிகச்சிறந்த வீரர்களாக உருவெடுத்துள்ளனர்.
ஆயுஷ் மாத்ரே நம்பர் 3ல் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அன்சுல் கம்போஜ் பர்பிள் கேப் ரேஸில் முன்னிலையில் இருக்கிறார். இதனால் சிஎஸ்கே அணி இந்த இரு வீரர்களையும் இழக்கமும் வருமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால் சிஎஸ்கே அணிக்கு மிடில் ஆர்டரில் ஒரு அனுபவம் வாய்ந்த ஆல்ரவுண்டர் அவசியமாக இருக்கிறார்.
இதனால் இந்த டிரேடு தொடர்பான பேச்சுவார்த்தைகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாகவும், விரைவில் இரு அணிகளின் நிர்வாகங்களும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடும் என்றும் சொல்லப்படுகிறது. ஒருவேளை இது நடந்தால், தோனியின் வழிகாட்டுதலில் ஹர்திக் பாண்டியா மஞ்சள் ஜெர்சியில் விளையாடுவதைப் பார்ப்பது ரசிகர்களுக்குப் பெரும் விருந்தாக அமையும்.












Click it and Unblock the Notifications