வேலையை காட்டிய மும்பை லாபி.. ஒதுக்கப்பட்ட "தமிழக" வீரர்கள்.. ஆசிய கோப்பை இந்திய அணி.. பார்த்தீங்களா?
சென்னை: ஆசிய கோப்பைக்கான இந்திய அணியில் ஒரே ஒரு தமிழ் வீரர் கூட இடம்பெறவில்லை. தமிழர்கள் மொத்தமாக இந்த தொடரில் புறக்கணிக்கப்பட்டு உள்ளனர்.
ஆசிய கோப்பை 2023 தொடர் இந்த வருடம் பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் நடைபெறுகிறது. கான்டினென்டல் நாடுகளில் நடக்கும் இந்த தொடர் இந்தியாவில் நடக்க உள்ள உலகக் கோப்பை 50 ஓவர் தொடருக்கு முன் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

முக்கியமாக ஆசிய கோப்பை தொடர் இந்த முறை 50 ஓவர் பார்மெட்டில் நடக்கிறது. இதனால் 50 ஓவர் உலகக் கோப்பை தொடருக்கு இந்த ஆட்டம் நல்ல பயிற்சியாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அணி தொடர்ந்து ஐசிசி கோப்பை போட்டிகளில் தோல்வி அடைந்து வரும் நிலையில் இந்த ஆசிய கோப்பையை வெல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
இந்த நிலையில்தான் ஆசிய கோப்பை தொடருக்காக அறிவிக்கப்பட்ட இந்திய அணியில் இந்த முறை பல சொதப்பல்கள் நடந்து உள்ளன. இந்திய அணி தேர்வு மீது கடும் விமர்சனங்களும் வைக்கப்பட்டு உள்ளன.
இந்த தொடர் இலங்கை மற்றும் பாகிஸ்தானில் மாறி மாறி நடக்க உள்ளது. இந்திய அணி ஆடும் போட்டிகள் எல்லாம் இலங்கையில்தான் நடக்க உள்ளது. இந்த நிலையில்தான் 2023 ஆசியக் கோப்பைக்கான 17 பேர் கொண்ட இந்திய அணி குழுவை இன்று பிசிசிஐ அறிவித்தது.
அதன்படி இந்திய அணியில் ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, கே.எல். ராகுல், இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியா (விசி), ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், அக்சர் படேல், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, மொஹத். ஷமி, முகமது. சிராஜ், பிரசித் கிருஷ்ணா ஆகியோர் இடம்பெறுவார்கள் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த இந்திய அணியில் ஸ்டான்ட் பை வீரராக சஞ்சு சாம்சன் அறிவிக்கப்பட்டு உள்ளார். இந்திய அணியின் இந்த அறிவிப்பு பல்வேறு விவாதங்களை விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.
முக்கியமாக திலக் வர்மா, ஷ்ரேயாஸ், பும்ரா, ஷ்ரேயாஸ் ஐயர், இஷான் கிஷன், உள்ளிட்ட மும்பை வீரரக்ள், ரோஹித் சர்மா, ஹர்திக் பாண்டியா போன்ற மும்பை அணிக்காக ஆடிய வீரரக்ள் அணியில் இடம்பெற்றுள்ளனர். ஆனால் நன்றாக ஆடும் சஞ்சு சாம்சன் ஸ்டான்ட் பை வீரராக இறக்கப்பட்டு உள்ளார். அகர்கர்தான் அணியின் தேர்வாளர். அவர் மும்பை என்பதால் மும்பை வீரர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளார்.
ராகுல் டிராவிட் பயிற்சியாளர் என்பதால் காயத்தில் இருந்து முழுமையாக விடுபடாத கே. எல் ராகுல் அணியில் சேர்க்கப்பட்டு உள்ளார். இந்திய அணியில் எந்த பார்மட்டிலும் சரியாக ஆடாத கே. எல் ராகுலை அணியில் இருந்தே நீக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வலுவாக வைக்கப்பட்டு வருகின்றன.
. இவரை இனியும் ஓப்பனிங் இறக்க கூடாது. போதுமான அளவு வாய்ப்பு இவருக்கு கொடுக்கப்பட்டு விட்டது என்று அவருக்கு எதிராக விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றன. கர்நாடகாவை சேர்ந்த ராகுல் டிராவிட் பயிற்சியாளர் என்பதால் கே. எல் ராகுல் அணியில் சேர்க்கப்பட்டு உள்ளார் என்று விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன. மும்பை, பெங்களூர் லாபி மட்டுமே அணியில் உள்ளது என்றும் விமர்சனங்கள் வைக்கப்பட்டு உள்ளன.
அணியில் அஸ்வின் சேர்க்கப்படவில்லை. ஆசிய கோப்பைக்கான இந்திய அணியில் ஒரே ஒரு தமிழ் வீரர் கூட இடம்பெறவில்லை. தமிழர்கள் மொத்தமாக இந்த தொடரில் புறக்கணிக்கப்பட்டு உள்ளனர் என்பதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
-
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications