குடும்பத்தையே விட மாட்டோம்.. டிராவிஸ் ஹெட் குடும்பத்திற்கு போன மிரட்டல்.. வேலையை காட்டிய விஷமிகள்
சென்னை: இந்தியாவிற்கு எதிரான உலகக் கோப்பை போட்டியில் ஆஸ்திரேலியா வென்ற நிலையில் டிராவிஸ் ஹெட் மீது இந்தியாவை சேர்ந்த நெட்டிசன்கள் சிலர் கடுமையாக விமர்சனங்களை வைத்து வருகின்றனர்.
இந்தியாவின் உலகக் கோப்பை கனவை டிராவிஸ் ஹெட் தட்டி பறித்து இருக்கிறார். 3வது முறையாக இந்தியா வெல்லும் வாய்ப்பை இழந்துள்ளது. இந்தியாவை வீழ்த்தி 6வது முறையாக இந்தியா கோப்பையை வென்றுள்ளது.
2003ல் ரிக்கி பாண்டிங் ஆடியது போல நேற்று டிராவிஸ் ஹெட் ஆடி உள்ளார். ஆஸ்திரேலியா அணி 3 விக்கெட்டுகளை இழந்து திணறிக்கொண்டு இருந்த போதும் விக்கெட்டை இழக்காமல் டிராவிஸ் ஹெட் கடைசி வரை ஆடினார்.
டிராவிஸ் ஹெட்: தொடக்கத்தில் டிராவிஸ் ஹெட் நிதானமாக ஆடினார். பவுண்டரி கூட அடிக்க முடியாமல் திணறினார். ஆனால் 7.30 மணி ஆன பின் பனிபொழிவு தொடங்கியது. அப்போதுதான் இந்திய அணிக்கும் ஏழரை தொடங்கியது.

அவர் களத்தில் இருந்த காரணத்தால்தான் ஆட்டம் ஆஸ்திரேலியாவிற்கு ஆதரவாக போனது. முக்கியமாக பனிப்பொழிவு வந்ததும் மேட்ச் அப்படியே ஆஸ்திரேலியாவிற்கு சாதகமாக சென்றது. சிக்ஸ், பவுண்டரி என்று அவர் கடைசி கட்டத்தில் ஆடியது இந்திய அணிக்கு எதிராக திரும்பியது. நேற்று 120 பந்துகள் பிடித்த அவர் 15 பவுண்டரிகள், 4 சிக்ஸர்களை அடித்தனர். இதன் மூலம் 137 ரன்கள் எடுத்தார்.
ரிக்கி பாண்டிங் ஆட்டம்: 2003ல் ஆஸ்திரேலியா ஆடியதை போல 20 வருடங்களுக்கு பின் மீண்டும் ஆஸ்திரேலியா இந்தியாவை அடித்து வீழ்த்தி உள்ளது. 2003 உலகக் கோப்பையில் இந்தியா ஆஸ்திரேலியாவிடம் பைனலில் தோல்வி அடைந்தது.முதலில் இறங்கிய ஆஸ்திரேலிய அணி வெறும் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து.. 359/2 ரன்களை எடுத்தது. ரிக்கி பாண்டிங் 140* (121) ரன்கள் எடுத்து இந்திய அணியை துவம்சம் செய்தார்.
( மேடம்.. எல்லாம் நடிப்பு.. இவன் சூர்ய குமார் யாதவ் இல்லை.. தினேஷ் கார்த்திக்.. டிரெண்டான மீம்ஸ்!)
அதன்பின் இறங்கிய இந்திய அணியில் சேவாக் மட்டும் 82 ரன்கள் எடுத்தார். சச்சின் 4 , கங்குலி 24 எடுத்து சொதப்பினர். அதன்பின் ராகுல் டிராவிட் 47 எடுத்தார். அதன்பின் யுவராஜ் சிங் 24 ரன்கள் எடுத்து அவுட் ஆக இந்திய அணியின் அடுத்த விக்கெட்டுகள் சீட்டு கட்டு போல சரிந்தது. 39.2 ஓவருக்கு 234 ரன்களை மட்டும் எடுத்து இந்தியா ஆல் அவுட் ஆகி கோப்பையை இழந்தது.
அதே ரிக்கி பாண்டிங் ஆட்டத்தை இன்று டிராவிஸ் ஹெட் கண் முன் நிறுத்தினார். இந்தியாவிற்கு எதிரான உலகக் கோப்பை போட்டியில் ஆஸ்திரேலியா வென்ற நிலையில் டிராவிஸ் ஹெட் மீது இந்தியாவை சேர்ந்த நெட்டிசன்கள் சிலர் கடுமையாக விமர்சனங்களை வைத்து வருகின்றனர்.

விமர்சனம்: அந்த வகையில் டிராவிஸ் ஹெட்டிற்கு எதிராக.. அவரின் இன்ஸ்டாகிராமில் கடுமையான புகார்களை அடுக்க தொடங்கி உள்ளனர். அதிலும் அவரின் குடும்பத்தை தாக்கி எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். அவரின் குடும்பத்திற்கு பாலியல் ரீதியாகவும் மிரட்டல் விடுத்து வருகின்றனர்.
பாலியல் ரீதியாக ஹெட் மனைவி மற்றும் அவரின் குழந்தைகளுக்கும் மிரட்டல் விடுத்து வருகின்றனர் . சில விஷமமான இந்தியர்களின் இந்த வேலை கடுமையான விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது, விமர்சனங்களையும் சந்தித்து உள்ளது.












Click it and Unblock the Notifications