தோல்வியே சந்திக்காத ஆஸ்திரேலியா கூட சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இருந்து வெளியேறலாம்! எப்படி தெரியுமா?
துபாய்: சாம்பியன்ஸ் டிராபி தொடர் இப்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இருப்பினும் பி பிரிவில் யார் அரையிறுதிக்குச் சொல்வார்கள் என்பதில் இன்னும் தெளிவற்ற சூழலே நிலவி வருகிறது. தற்போதுள்ள சூழலை வைத்துப் பார்க்கும் போது இதுவரை தோல்வியையே சந்திக்காத ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா கூட தொடரில் இருந்து வெளியேறும் வாய்ப்பு இருக்கிறது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
சாம்பியன்ஸ் டிராபி தொடர் இப்போது பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடந்து வருகிறது. பாதுகாப்பு காரணங்களால் பாகிஸ்தான் செல்ல இந்தியா சம்மதிக்காத நிலையில், இந்தியாவின் போட்டிகள் மட்டும் துபாயில் நடந்து வருகிறது.

சாம்பியன்ஸ் டிராபியில் அணிகள் இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ள நிலையில், இதில் குரூப் ஏ பிரிவில் யார் அரையிறுதிக்குச் செல்கிறார்கள் என்பது தெளிவாகிவிட்டது. நியூசிலாந்து, இந்தியா அடுத்த சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ள நிலையில், வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான் அணிகள் எலிமினேட் ஆகியுள்ளன.
சாம்பியன்ஸ் டிராபி
அதேநேரம் குரூப் ஏ பிரிவில் இன்னும் தெளிவு இல்லாத சூழலே நிலவி வருகிறது. ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா இடையேயான போட்டி மழையால் ரத்தானது இந்த குழப்பத்திற்குக் காரணமாக இருக்கிறது. இப்போது குருப் பி பிரிவில் இங்கிலாந்து வெளியேறியுள்ளது. அதேநேரம் ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் என மூன்று ஆணிகளும் அரையிறுதி ரேஸில் உள்ளது.
தற்போதைய சூழலில் பி பிரிவில் தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா 3 புள்ளிகளைப் பெற்றுள்ளன. இரு அணிகளும் ஒரு போட்டியில் வென்றுள்ள நிலையில், மற்றொரு போட்டி மழையால் ரத்தானது. நெட் ரன் ரேட் அடிப்படையில் தென் ஆப்பிரிக்கா முதலிடத்திலும் ஆஸ்திரேலியா இரண்டாவது இடத்திலும் இருக்கிறது. ஆப்கானிஸ்தான் ஒரு வெற்றி, ஒரு தோல்வியுடன் 2 புள்ளிகளுடன் 3வது இடத்தில் உள்ளது.
ஆஸ்திரேலியா வெளியேறலாம்
இதில் விஷயம் என்னவென்றால் இதுவரை ஒரு தோல்வியைக் கூடப் பெறாத ஆஸ்திரேலியா கூட தொடரில் இருந்து வெளியேற வாய்ப்பு இருக்கிறது. அதாவது ஆஸ்திரேலியா அணி நாளை ஆப்கானிஸ்தானை எதிர்கொள்ளும் நிலையில், அதில் வென்றால் யார் வெல்கிறார்களோ அந்த அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறிவிடும்.
ஆஸ்திரேலியா தோல்வி அடைந்தாலும் இன்னொரு வாய்ப்பு இருக்கிறது. அதாவது ஆஸ்திரேலியா தோல்வி அடைந்தால் அவர்கள் 3 புள்ளிகளிலேயே இருப்பார்கள். தொடர்ந்து மார்ச் 1ம் தேதி நடக்கும் தென் ஆப்பிரிக்கா vs இங்கிலாந்து போட்டியில் தென் ஆப்பிரிக்கா தோல்வி அடைந்தால் அவர்களும் 3 புள்ளிகளிலேயே தொடர்வார்கள். அப்போது நெட் ரன் ரேட் அடிப்பையில் ஒரு அணி தேர்வாகும். தற்போதுள்ள சூழலில் நெட் ரன் ரேட்டில் தென் ஆப்பிரிக்கா அதிகம் உள்ள நிலையில், இதுபோன்ற சூழல் நடந்தால் ஆஸ்திரேலியா சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இருந்து மொத்தமாக வெளியேறும்.
ஆப்கானிஸ்தான் என்னவாகும்
ஆஸ்திரேலியாவைப் பார்த்துவிட்டோம். மீதமுள்ள இரு அணிகளுக்கும் என்ன சான்ஸ் இருக்கிறது என்பதையும் பார்க்கலாம். நாளை நடக்கும் போட்டியில் ஆப்கானிஸ்தான் வென்றால் அவர்கள் அரையிறுதிக்குச் செல்வார்கள். தோல்வி அடைந்தால் ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா என இரு அணிகளும் அடுத்த சுற்றுக்குப் போய்விடும்.
தென் ஆப்ரிக்காவுக்கு உள்ள வாய்ப்பு
தென் ஆப்ரிக்காவைப் பொறுத்தவரை நாளை போட்டியில் ஆஸ்திரேலியா ஆப்கானை வீழ்த்தினாலே தென் ஆப்ரிக்கா அடுத்த சுற்றுக்குப் போய்விடும். ஒருவேளை ஆஸ்திரேலியா நாளை தோல்வி அடைந்தால் தென் ஆப்ரிக்கா நிச்சயம் இங்கிலாந்தை வீழ்த்தியாக வேண்டும். அல்லது ஆஸ்திரேலியாவை விட நெட் ரன் ரேட்டை நல்ல நிலையில் வைத்திருக்க வேண்டும்.
சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால் நாளைய போட்டியை வைத்தே யார் அரையிறுதிக்கு முன்னேறுவார்கள் என்பது தெரிய வரும். ஏற்கனவே இங்கிலாந்தை வீழ்த்தி அதிர்ச்சி கொடுத்த ஆப்கானிஸ்தான் அதே மேஜிக்கை ஆஸ்திரேலியாவிடமும் செய்ய முடியுமா என்பதை நாம் பொறுத்து இருந்தே பார்க்க வேண்டும்.












Click it and Unblock the Notifications