இந்தியா vs நியூசிலாந்து.. கடற்கரைகளில் சாம்பியன்ஸ் டிராபி பைனல் "லைவ்".. சென்னை ரசிகர்கள் ஹேப்பி!
சென்னை: சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் நாளை மோதவுள்ளது. இந்த ஆட்டத்தை நேரலையில் பார்ப்பதற்கு சென்னை மெரினா கடற்கரை மற்றும் பெசண்ட் நகர் கடற்கரை ஆகிய இடங்களில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது.
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப் போட்டி நாளை நடக்கவுள்ளது. இந்த போட்டியில் வெல்வதற்காக இரு அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன. இதுவரை ஐசிசி தொடர்களில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் ஆடிய ஆட்டம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

அதுமட்டுமல்லாமல் 2000ஆம் ஆண்டு நடந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணியை வீழ்த்தி நியூசிலாந்து பட்டம் வென்றது. தொடர்ந்து 2021ஆம் ஆண்டு நடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியிலும் இந்திய அணியை வீழ்த்தி நியூசிலாந்து அணி கோப்பையை வென்றது. இதனால் இம்முறை நியூசிலாந்து அணிக்கு பதிலடி கொடுக்க இந்திய அணி தயாராகி வருகிறது.
இந்தியா vs நியூசிலாந்து
இந்த போட்டி நாளை மதியம் 2 மணிக்கு டாஸ் போடப்பட்டு 2.30 மணிக்கு தொடங்கப்படவுள்ளது. இந்த ஆட்டத்தை ரசிகர்கள் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் நேரலையில் காண முடியும். அதேபோல் ஓடிடி-யை பொறுத்தவரை ஜியோ ஹாட்ஸ்டார் செயலியில் நேரலையில் பார்க்க முடியும். கலர்ஸ் தொலைக்காட்சியிலும் தமிழ் வர்ணனையில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

நேரடி ஒளிபரப்பு
என்னதான் தொலைக்காட்சி மற்றும் செயலியில் கிரிக்கெட் போட்டியை பார்த்தாலும், தீவிர கிரிக்கெட் ரசிகர்கள், நண்பர்களுடன் மைதானத்தில் அமர்ந்து பார்க்கும் உணர்வே தனித்துவமானது. பயம், பதற்றம், கொண்டாட்டம், சோகம், கண்ணீர் என்று அனைத்து வகையான உணர்வுகளுடன் ரசிகர்கள் இருப்பார்கள். இதற்காக ரசிகர்கள் துபாய் செல்ல தேவையில்லை.
சென்னை மெரினாவில் ஸ்க்ரீனிங்
சென்னையிலேயே பார்ப்பதற்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் தரப்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. சென்னை மெரினா கடற்கரையில் உள்ள விவேகானந்தர் நினைவு இல்லத்திற்கு எதிரில் இந்தியா - நியூசிலாந்து போட்டியை எல்இடி ஸ்க்ரீனில் கண்டுகளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் பெசண்ட் நகர் நகர் போலீஸ் பூத் அருகிலும் எல்இடி ஸ்க்ரீன் வாயிலாக நேரலை செய்யப்படுகிறது.

ரசிகர்கள் எதிர்பார்ப்பு
இதனால் கிரிக்கெட் ரசிகர்கள் வெயில் குறைந்தபின் மாலை நேரங்களில் அங்கு சென்று போட்டியை பார்க்கலாம். கடந்த முறை இந்தியா - பாகிஸ்தான் ஆட்டம் இதேபோல் ஒளிபரப்பு செய்யப்பட்டது. அப்போது எடுக்கப்பட்ட வீடியோக்களும் சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகின. இதனால் இம்முறை ரசிகர்களின் வரவு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா?












Click it and Unblock the Notifications