டார்கெட் ஜெர்சி நம்பர் 23.. ரஸல், மேக்ஸ்வெல் கொடுத்த ஷாக்.. ஏமாறும் சிஎஸ்கே.. தோனி முடிவு என்ன?
மும்பை: ஆண்ட்ரே ரஸல், மேக்ஸ்வெல் உள்ளிட்ட நட்சத்திர ஆல்ரவுண்டர்கள் ஐபிஎல் தொடரின் மினி ஏலத்தில் பங்கேற்காமல் விலக முடிவு செய்துள்ள நிலையில், சிஎஸ்கே அணியின் பிரச்சனைகள் அதிகரித்துள்ளதாக பார்க்கப்படுகிறது. இதனால் பெரிய தொகையுடன் ஐபிஎல் மினி ஏலத்திற்கு செல்லும் சிஎஸ்கே, யார் யாரை வாங்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் டிசம்பர் 15ஆம் தேதி அபுதாபியில் நடக்க உள்ளது. இதற்கான ஐபிஎல் தொடரின் 10 அணிகளும் சிறப்பாக தயாராகி வருகின்றன. மும்பை, பஞ்சாப், ஆர்சிபி உள்ளிட்ட அணிகள் பெரிதாக வீரர்களை விடுவிக்கவில்லை. இதனால் அந்த 3 அணிகளும் ஜாலியாக மற்ற அணிகளை டார்ச்சர் செய்வார்கள் என்று பார்க்கப்படுகிறது.

ஆனால் ஐபிஎல் மினி ஏலம் சிஎஸ்கே மற்றும் கேகேஆர் அணிகளுக்கு மிகவும் முக்கியமாக அமைந்துள்ளது. ஏனென்றால் சிஎஸ்கே அணி சுமார் ரூ.43 கோடியையும், கேகேஆர் அணி ரூ.64.3 கோடியுடனும் மினி ஏலத்தில் பங்கேற்க உள்ளன. சிஎஸ்கே அணியை பொறுத்தவரை டாப் ஆர்டர் மற்றும் பவுலர்கள் வரிசை சிறப்பாக அமைந்துள்ளனர்.
ஆனால் சிஎஸ்கே அணியின் அத்தியாவசிய தேவையான ஆல்ரவுண்டர்கள் வாங்க வேண்டிய தேவை உள்ளது. அப்படி பார்த்தால் ஆண்ட்ரே ரஸ்ஸல், மேக்ஸ்வெல், லிவிங்ஸ்டன், வெங்கடேஷ் ஐயர், கேமரூன் க்ரீன், ஜேசன் ஹோல்டர் உள்ளிட்ட சில வீரர்கள் மட்டுமே ஏலத்தில் பங்கேற்க இருந்தனர். தற்போது ஆண்ட்ரே ரஸல் மற்றும் மேக்ஸ்வெல் ஆகியோர் ஐபிஎல் மினி ஏலத்தில் பங்கேற்கவில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ரஸல் கேகேஆர் அணியின் பயிற்சியாளர் குழுவில் இணைந்துவிட்டார். இதனால் கேமரூன் க்ரீன், லிவிங்ஸ்டன் மற்ரும் வெங்கடேஷ் ஐயர் ஆகிய மூவரில் ஒருவரை வாங்க வேண்டிய கட்டாயம் சிஎஸ்கே அணிக்கு ஏற்பட்டுள்ளது. சிஎஸ்கே அணி ஐபிஎல் மெகா ஏலத்திற்கே ரூ.45 கோடியுடன் சென்றது. தற்போது மினி ஏலத்திற்கும் சுமார் ரூ.44 கோடியுடன் செல்கிறது.
இதனால் எந்த வீரரை வாங்கலாம் என்று தெரியாமல் சிஎஸ்கே அணி தடுமாறி வருகிறது. அதிலும் வேகப்பந்து ஆல்ரவுண்டர்களை எப்படி சிஎஸ்கே அணி வாங்கும் என்பது மிகப்பெரிய கேள்வியாகும். அவருக்கு ஃபினிஷர் ரோலில் ஆடுவது மிகப்பெரிய பிரச்சனையாக இருந்திருக்கிறது. இதனால் மீண்டும் சிஎஸ்கே அணி மோசமான மிடில் ஆர்டருடன் களமிறங்க வாய்ப்பு உள்ளதாக பார்க்கப்படுகிறது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications