6,4,6,4,6,4.. பேயாட்டம் ஆடிய சர்ஃபராஸ் கான்.. 20 பந்துகளில் 62 ரன்கள்.. சிஎஸ்கேவுக்கு ஜாக்பாட்!
ஜெய்ப்பூர்: விஜய் ஹசாரே தொடரில் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணிக்காக களமிறங்கிய நட்சத்திர வீரர் சர்ஃபராஸ் கான் 20 பந்துகளில் 5 சிக்ஸ், 7 பவுண்டரி உட்பட 62 ரன்களை விளாசி இருக்கிறார். இதனால் சர்ஃபராஸ் கானின் அபார ஃபார்மை ஐபிஎல் தொடரின் போது சிஎஸ்கே அணி பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற குரல்கள் எழுந்துள்ளன.
விஜய் ஹசாரே கிரிக்கெட் தொடரில் சிஎஸ்கே அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்ட வீரர்கள் மிகச்சிறப்பாக விளையாடி வருகிறது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ஏற்கனவே மகாராஷ்டிரா அணிக்காக விளையாடி வரும் ருதுராஜ் கெய்க்வாட் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறார். தற்போது சர்ஃபராஸ் கானும் அதிரடியில் விளாசி தள்ளி வருவது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

பஞ்சாப் அணிக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் நம்பர் 3 பேட்ஸ்மேனாக களமிறங்கிய சர்ஃபராஸ் கான், 20 பந்துகளில் 5 சிக்ஸ், 7 பவுண்டரி உட்பட 62 ரன்களை விளாசி இருக்கிறார். வெறும் 15 பந்துகளில் அரைசதத்தை பூர்த்தி செய்துள்ளார். சர்ஃபராஸ் கான் இந்த அளவிற்கு அதிரடியாக விளையாடும் வகையில் ஆட்டத்தில் முன்னேறி இருப்பது ரசிகர்களிடையே வியப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
அதிலும் அபிஷேக் சர்மா ஓவரில் 6, 4, 6, 4, 6, 4 என்று 30 ரன்களை குவித்துள்ளார். ஏற்கனவே சையத் முஷ்டாக் அலி தொடரில் ஒரு சதம் மற்றும் 3 அரைசதங்களை விளாசி இருந்தார். தற்போது விஜய் ஹசாரே தொடரில் ஒரு சதம், 2 அரைசதங்களுடன் விளையாடி வருகிறார். சர்ஃபராஸ் கானின் இந்த ஆட்டம் சிஎஸ்கே அணியில் தோனியின் இடத்தையே கேள்விக்குறியாக்கி இருக்கிறது. ஏனென்றால் மிடில் ஆர்டரில் சஃப்ராஸ் கான் பக்கவாக பொருந்தி போவார்.
இவரை சிஎஸ்கே அணி எளிதாக ரூ.75 லட்சத்திற்கு வாங்கியது அந்த அணிக்கு ஜாக்பாட் என்று ரசிகர்கள் கருத்து கூறி வருகின்றனர். அதேபோல் ராமகிருஷ்ணா கோஷ்-ம் அசத்தலாக விளையாடி வருகிறார். இதனால் சிஎஸ்கே அணியின் ஆயுஷ் மாத்ரே மற்றும் தோனி இடங்கள் கேள்விக்குறியாகி இருக்கிறது.
இதனால் சிஎஸ்கே அணி முதல் போட்டியிலேயே சரியான பிளேயிங் லெவனை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று ரசிகர்கள் விவாதித்து வருகின்றனர். அதேபோல் சிஎஸ்கே அணி தோனியை இம்பேக்ட் பிளேயராக மட்டுமே விளையாட வைக்கலாம் என்றும், அதையும் கூட சூழலுக்கு ஏற்ப முடிவு செய்து கொள்ள வேண்டும் என்றும் விவாதிக்க தொடங்கியுள்ளனர்.












Click it and Unblock the Notifications