மஞ்சள் ஜெர்சியில் களமிறங்கும் பொல்லார்ட்.. இனி நீங்க சூப்பர் கிங்ஸ் பட்டறை சார்! புலம்பும் பல்தான்ஸ்

Subscribe to Oneindia Tamil

மும்பை: எஸ்ஏ20 லீக் தொடரில் ஜேஎஸ்கே அணிக்காக நட்சத்திர வீரர் பொல்லார்ட் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது மும்பை இந்தியன்ஸ் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரின் பெயரை ஏலத்தில் சொன்ன போது உடனடியாக ஜேஎஸ்கே அணி கையை தூக்கியது. அப்போதும் கூட மும்பை நிர்வாகம் எந்தவித சலனமும் காட்டவில்லை.

ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியின் பரம எதிரி யாரென்று கேட்டால், அது மும்பை இந்தியன்ஸ் அணி தான். மும்பை இந்தியன்ஸ் அணியில் பிடிக்காத வீரர் யாரென்று கேட்டால், அதில் பெரும்பாலான சிஎஸ்கே ரசிகர்கள் பொல்லார்ட் பெயரை தான் கூறுவார்கள். அந்த அளவிற்கு சிஎஸ்கே அணிக்கு எதிராக பொல்லார்ட் பிரம்மாண்ட சம்பவங்களை செய்துள்ளார்.

CSK

அதேபோல் பொல்லார்ட் ஓய்வை அறிவித்த போது, மும்பை அணி நிர்வாகம் அவரை கைவிட விரும்பவில்லை. உடனடியாக பேட்டிங் பயிற்சியாளராக பொல்லார்ட் கொண்டு வரப்பட்டார். அதேபோல் மும்பை அணியின் சிஸ்டர் பிரான்சைஸான எம்ஐ நியூ யார்க் அணியிலும் பொல்லார்ட் விளையாடினார். மறுபக்கம் ஐஎல்டி20 அணியிலும் பொல்லார்ட் விளையாடி இருந்தார்.

இதனால் மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து பொல்லார்ட் வெளியில் வர வாய்ப்பில்லை என்று பார்க்கப்பட்டது. இந்த நிலையில் டி20 கிரிக்கெட் உலகையே அதிர்ச்சியாக்கும் ஒரு சம்பவம் அரங்கேறி இருக்கிறது. எஸ்ஏ20 லீக் தொடருக்கான ஏலம் இன்று நடைபெற்றது. இந்த ஏலத்தில் பொல்லார்ட் தன்னுடைய பெயரை பதிவு செய்திருந்தார்.

பொல்லார்ட்டை வாங்கும் அளவிற்கு எம்ஐ கேப்டவுன் அணி நிர்வாகம் கையில் பணம் இல்லை. இதனால் பொல்லார்ட் காயம் காரணமாக விலக வேண்டும் என்று மும்பை ரசிகர்கள் பலரும் கூறி வந்தனர். இந்த நிலையில் ஏலத்தில் அதிக தொகையுடன் பங்கேற்ற சிஎஸ்கே அணியின் சிஸ்டர் பிரான்சைஸான ஜேஎஸ்கே அணி நிர்வாகம் பொல்லார்ட்டை வாங்கி இருக்கிறது.

பொல்லார்ட் பெயரை ஏலதாரர் கூறிய உடனே ஜேஎஸ்கே அணி நிர்வாகிகள் கைகளை உயர்த்தினர். இதன்பின் எந்த அணியும் பொல்லார்ட்டை வாங்க முன் வரவில்லை. மும்பை அணி நிர்வாகிகளும் அமைதியாகவே இருந்தனர். இதனால் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடக்கும் எஸ்ஏ20 லீக் தொடரில் பொல்லார்ட் மஞ்சள் ஜெர்சியுடன் களமிறங்க உள்ளது சிஎஸ்கே ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+