CSK Playoff: ஏழு கடல் தாண்டி.. ஏழு மலை தாண்டி! சிஎஸ்கே உயிர் யார் கையில்? இது நடந்தால் மட்டுமே ப்ளேஆஃப் வாய்ப்பு!
சென்னை: ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது சொந்த மைதானமான சேப்பாக்கத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியிடம் தோல்வி அடைந்ததால், சிஎஸ்கே ரசிகர்கள் கவலையில் உள்ளனர். நல்வாய்ப்பாக, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயணம் இன்னும் முடிவுக்கு வரவில்லை என்றாலும், பிளே ஆஃப் வாய்ப்பு தற்போது மிகவும் சிக்கலான நிலையில் உள்ளது. சென்னை அணி ப்ளே ஆஃப்-க்கு செல்லும் வாய்ப்பை பிற அணிகளின் வெற்றி - தோல்விகளே நிர்ணயிக்கும். எனவே சிஎஸ்கே-வின் தலையெழுத்தை நிர்ணயிக்கப் போகும் அணிகள் என்ன? அவை என்ன செய்ய வேண்டும்? என்பது குறித்து பார்க்கலாம்..
ஐபிஎல் 2026 சீசனில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி 13 போட்டிகளில் விளையாடி 6 வெற்றிகள் மட்டுமே பெற்றுள்ளது. 12 புள்ளிகளுடன் தற்போது புள்ளிப்பட்டியலில் ஆறாவது இடத்தில் உள்ளது.
இதனால் அடுத்த சுற்றுக்கு செல்ல வேண்டுமெனில் கடைசி போட்டியில் வெற்றி பெறுவது மட்டும் போதாது; மற்ற அணிகளின் முடிவுகளும் சாதகமாக அமைய வேண்டும். ஏற்கனவே குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன.

ஐபிஎல் 2026
மீதமுள்ள ஒரு இடத்திற்காக தற்போது சென்னை, ராஜஸ்தான், பஞ்சாப், கொல்கத்தா மற்றும் டெல்லி அணிகள் போட்டியிட்டு வருகின்றன. சிஎஸ்கே அணி தனது கடைசி லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்கொள்ள உள்ளது. இந்த போட்டியில் சென்னை வெற்றி பெற்றால் 14 புள்ளிகளை எட்டும். ஆனால் அதற்குப் பிறகும் நேரடியாக ப்ளே ஆஃப்-க்கு தகுதி பெற முடியாது. ஏனெனில் மற்ற போட்டிகளின் முடிவும் மிக முக்கியமானதாக உள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ்
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு இன்னும் இரண்டு போட்டிகள் உள்ளன. அந்த இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றால் அவர்கள் 16 புள்ளிகளை எட்டிவிடுவார்கள். அப்படியானால் சென்னை அணியின் வாய்ப்பு மிகவும் குறைந்து விடும். அதேபோல் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு இன்னும் ஒரு போட்டி உள்ளது. அதில் வெற்றி பெற்றால் அவர்கள் 15 புள்ளிகளை பெறுவார்கள். கொல்கத்தா அணிக்கும் இன்னும் இரண்டு போட்டிகள் உள்ளன. இரண்டிலும் வென்றால் 15 புள்ளிகளை எட்டும்.
ப்ளேஆஃப் வாய்ப்பு
இதனால் சிஎஸ்கே அணிக்கு சாதகமாக சில முடிவுகள் அமைய வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது. குறிப்பாக ராஜஸ்தான் அணி தனது மீதமுள்ள போட்டிகளில் தோல்வி அடைய வேண்டும். பஞ்சாப் அணியும் வெற்றி பெறக்கூடாது. மேலும் கொல்கத்தா மற்றும் டெல்லி அணிகளின் போட்டிகளும் சென்னை அணியின் எதிர்காலத்தை தீர்மானிக்கக்கூடியதாக உள்ளது.
நெட் ரன் ரேட்
கொல்கத்தா அணி டெல்லியை வெல்ல வேண்டும். ஆனால் அதன் பிறகு மும்பைக்கு எதிரான போட்டியில் தோல்வி அடைய வேண்டும். இப்படியான முடிவுகள் வந்தால் மட்டுமே சென்னை அணிக்கு வாய்ப்பு உருவாகும். டெல்லி அணிக்கும் இன்னும் வாய்ப்பு உள்ளது. ஆனால் அந்த அணியின் நெட் ரன் ரேட் மிகவும் மோசமான நிலையில் இருப்பதால், மற்ற அணிகள் தோல்வி அடைந்தால் தான் டெல்லிக்கு வாய்ப்பு கிடைக்கும்.
வாழ்வா? சாவா?
இதனால் இந்த சீசனில் பிளே ஆஃப் சுற்றுக்கான கடைசி இடத்திற்கான போட்டி கடுமையாக மாறியுள்ளது. சிஎஸ்கே ரசிகர்கள் தற்போது குஜராத் அணிக்கு எதிரான வெற்றியை மட்டுமல்லாமல், மற்ற அணிகளின் தோல்விகளையும் எதிர்பார்த்து காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஒருவேளை குஜராத் அணிக்கு எதிரான கடைசி போட்டியில் சென்னை தோல்வி அடைந்தால், இந்த சீசனில் முதல் சுற்றோடு சிஎஸ்கே வெளியேற வேண்டிய நிலை ஏற்படும். அதனால் அந்த போட்டி சென்னை அணிக்குப் "வாழ்வா? சாவா?" என்ற நிலையை உருவாக்கியுள்ளது.















Click it and Unblock the Notifications