5வது முறையாக சொதப்பல்.. 7 ரன்களில் அவுட்டான ருதுராஜ் கெய்க்வாட்.. ஃபார்ம் அவுட்டில் சிஎஸ்கே கேப்டன்!
சென்னை: சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் தொடர்ந்து 5வது முறையாக சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். சேப்பாக்கம் மைதானத்தில் நடந்து வரும் கேகேஆர் அணிக்கு எதிரான போட்டியிலும் ருதுராஜ் கெய்க்வாட் 7 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறி இருப்பது ரசிகர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
ஐபிஎல் தொடரில் கேகேஆர் அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி விளையாடி வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற கேகேஆர் அணியின் கேப்டன் ரஹானே பவுலிங்கை தேர்வு செய்தார். இதன்பின் சிஎஸ்கே அணி தரப்பில் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் - சஞ்சு சாம்சன் கூட்டணி தொடக்கம் கொடுத்தது. வைபவ் அரோரா வீசிய முதல் ஓவரிலேயே ஹாட்ரிக் பவுண்டரியுடன் சஞ்சு சாம்சன் கணக்கை தொடங்கினார்.

தொடர்ந்து 2வது ஓவரை வீசிய கேமரூன் க்ரீன் பந்தில் ருதுராஜ் கெய்க்வாட் ஒரு பவுண்டரியை விளாசி தள்ளினார். இதன்பின் 3வது ஓவரில் ரஹானே ஸ்பின்னரான அனுகுல் ராய்யை அட்டாக்கில் கொண்டு வந்தார். அந்த ஓவரின் 2வது பந்திலேயே அட்டாக் செய்ய முயற்சித்த ருதுராஜ் கெய்க்வாட், ஸ்லாக் ஸ்வீப்பை ஆடினார். அது நேராக மிட் விக்கெட்டில் நின்றிருந்த பவல் கைகளில் சென்று விழுந்தது.
இதனால் ருதுராஜ் கெய்க்வாட் 6 பந்துகளில் 7 ரன்கள் எடுத்து வெளியேறினார். இது ரசிகர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஏனென்றால் ருதுராஜ் கெய்க்வாட் தொடர்ச்சியாக 5வது போட்டியிலும் சொதப்பி இருக்கிறார். ஏற்கனவே ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 6 ரன்களிலும், பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் 28 ரன்களிலும் ருதுராஜ் வெளியேறினார்.
தொடர்ந்து ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் 7 ரன்களிலும், டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் 15 ரன்களிலும் ஆட்டமிழந்தார். ஐபிஎல் தொடரில் ருதுராஜ் கெய்க்வாட் பெரிதாக அவுட் ஃபார்மில் இருந்ததே கிடையாது. எந்த பேட்டிங் வரிசையில் களமிறங்கி ஆடினாலும், ருதுராஜ் கெய்க்வாட் கிளாசிக் ஷாட்கள் மூலமாக விரைவாக ரன்களை குவிப்பார்.
இந்த சீசனில் 5 போட்டிகளாக தொடர்ந்து சொதப்பி இருப்பது பேசுபொருளாகி இருக்கிறது. இதனால் ருதுராஜ் கெய்க்வாட் விரைவில் ஃபார்முக்கு திரும்ப வேண்டும் என்று ரசிகர்கள் அறிவுறுத்தி வருகின்றனர். ருதுராஜ் கெய்க்வாட் அதிரடி தொடக்கம் கொடுக்கும் பட்சத்தில், அவரால் கேப்டன்சியிலும் அழுத்தம் இல்லாமல் செயல்பட முடியும் என்றும் பார்க்கப்படுகிறது.
-
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்! -
கஜானாவை நிரப்ப விஜய் அதிரடி நடவடிக்கை.. டாஸ்மாக் விதித்த கூடுதல் கட்டணம்.. மதுபான விலை உயர்வு?












Click it and Unblock the Notifications