பயிற்சியில் ஈடுபடாத ருதுராஜ்.. தொடக்க வீரராக வரும் கான்வே.. சிஎஸ்கே சந்திக்கப் போகும் சிக்கல்கள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கும் டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி விளையாடவுள்ளது. இந்த போட்டியில் சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் காயம் காரணமாக விலகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் சிஎஸ்கே அணியின் பிளேயிங் லெவன் மாற்றம் மற்றும் அணிக்கு நேரப்போகும் சிக்கல் தொடர்பாக பார்க்கலாம்.

ஐபிஎல் தொடரின் 17வது லீக் போட்டியில் டெல்லி அணியை எதிர்த்து சிஎஸ்கே அணி களமிறங்கவுள்ளது. இந்த போட்டிக்கு முன்பாக நேற்றிரவு செய்தியாளர்களை சந்தித்து மைக் ஹசி பேசுகையில், ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட் முழங்கையில் காயம் ஏற்பட்டது. அந்த காயத்தில் இருந்து ருதுராஜ் இன்னும் முழுமையாக குணமடையவில்லை.

IPL 2025 CSK Ruturaj Gaikwad MS Dhoni

இன்று அவர் பயிற்சியில் ஈடுபட முடிவு செய்யப்பட்டுள்ளது. ஒருவேளை அவரால் நாளைய ஆட்டத்தில் விளையாட முடியவில்லை என்றால், எங்கள் அணியின் இளம் விக்கெட் கீப்பர் கேப்டன்சியை மேற்கொள்வார் என்று நினைக்கிறேன் என தெரிவித்தார். இதனால் தோனி கேப்டன்சி செய்யப் போவது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதேபோல் நேற்றிரவு சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் பேட்டிங் பயிற்சியில் ஈடுபடவில்லை. மற்ற வீரர்களின் பயிற்சியை வேடிக்கை மட்டுமே பார்த்தார் என்பது தெரிய வந்துள்ளது. இதனால் இன்றைய ஆட்டத்தில் தோனி கேப்டனாக களமிறங்குவது கிட்டத்தட்ட உறுதியாகி இருக்கிறது. ஆனால் ருதுராஜ் காயத்தால் சிஎஸ்கே அணி ஏராளமான சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டிய நிலை உருவாகி இருக்கிறது.

ஏனென்றால் சிஎஸ்கே அணியில் ஃபார்மில் இருக்கும் ஒரே பேட்ஸ்மேன் ருதுராஜ் கெய்க்வாட் மட்டும்தான். அவர் இல்லாத பட்சத்தில் டெவான் கான்வே பேட்டிங் செய்ய வாய்ப்புகள் உள்ளது. நேற்றிரவும் கூட கான்வே தீவிர பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டார். ஆனால் அவரால் ருதுராஜை போல் நம்பர் 3 பேட்டிங் வரிசையில் களமிறங்க முடியாது. அவர் தொடக்கம் முதலே ஓபனிங் விளையாடி வந்தவர்.

இதனால் வேறு வழியின்றி ரச்சின் ரவீந்திரா - கான்வே அல்லது கான்வே - ராகுல் திரிப்பாட்டி கூட்டணி தொடக்கம் கொடுக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் மற்றொரு சிக்கல் என்னவென்றால், கான்வே வெளிநாட்டு வீரர். இதனால் கடந்த போட்டியில் ஆடிய ஜேமி ஓவர்டனை நீக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.

பதிரானா, ரச்சின், நூர் அஹ்மத் ஆகிய மூன்று வீரர்களையும் மாற்ற முடியாது என்பதால், வேறு வழியின்றி ஜேமி ஓவர்டனை தான் மாற்ற முடியும். இதனால் பவுலிங்கில் கூடுதலாக ஒரு இந்திய பவுலர் இடம்பெற வாய்ப்புகள் இருப்பதாக பார்க்கப்படுகிறது. இருந்தாலும் கான்வே கடந்த சில மாதங்களாகவே ஃபார்மில் இல்லை.

அவர் ருதுராஜ் கெய்க்வாட்-க்கு நிகரான அளவிற்கு ரன்களை அடிக்கவில்லை என்றாலும், நல்ல தொடக்கம் கொடுத்தால் மட்டுமே சிஎஸ்கே அணி வெற்றிபெறுவதை பற்றி சிந்திக்க முடியும். இதனால் சிஎஸ்கே அணிக்கு ருதுராஜ் கெய்க்வாட் காயம் மிகப்பெரிய பின்னடைவு மட்டுமல்லாமல் சிக்கலையும் உருவாக்கி இருப்பதாக பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+