22 வயதாகும் வன்ஷ் பேடி.. சிஎஸ்கே மிடில் ஆர்டர் பிரச்சனைக்கு சரியான தீர்வு.. செய்வாரா ருதுராஜ்?
சென்னை: ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி அடுத்தடுத்து 2 போட்டிகளில் தோல்வியை சந்தித்திருப்பது அந்த அணி ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமல்லாமல் சிஎஸ்கே அணியின் பேட்டிங் முழுக்க முழுக்க ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் சிவம் துபே ஆகிய இருவரையும் மட்டுமே சார்ந்து இருப்பது அந்த அணியின் தோல்விகளுக்கு முக்கிய காரணமாக மாறி இருக்கிறது. இதனால் சிஎஸ்கே அணியின் பேட்டிங் ஆர்டரில் இளம் வீரரான வன்ஷ் பேடிக்கு வாய்ப்பு அளித்தால், அந்த அணியின் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும் என்று விமர்சகர்கள் கூறியுள்ளனர்.
18வது சீசனுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. அனைத்து அணிகளும் கிட்டத்தட்ட 3 போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில், சிஎஸ்கே அணி தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வருகிறது. மும்பை அணிக்கு எதிரான முதல் போட்டியில் மட்டுமே சிஎஸ்கே அணி வென்ற நிலையில், ஆர்சிபி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சிஎஸ்கே அணி படுதோல்வியை சந்தித்தது.

சிஎஸ்கே சொதப்பல்
அதேபோல் கவுஹாத்தியில் நடைபெற்ற ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியிலும் 6 ரன்கள் வித்தியாசத்தில் சிஎஸ்கே அணி தோல்வியடைந்தது. இதனால் புள்ளிப்பட்டியலில் 7வது இடத்திற்கு சிஎஸ்கே அணி தள்ளப்பட்டுள்ளது. 5 முறை சாம்பியனான சிஎஸ்கே அணி பேப்பரில் பலம் வாய்ந்த அணியாக கருதப்பட்டாலும், களத்தில் சாதாரண அணியை போலவே விளையாடி வருகிறது.
மிடில் ஆர்டர் பிரச்சனை
அதுமட்டுமல்லாமல் 2021ஆம் ஆண்டுக்கு பின் சிஎஸ்கே அணி ஒருமுறை கூட 175 ரன்களுக்கு மேல் சேஸிங் செய்து வென்றதில்லை. இம்முறை ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் சிவம் துபேவை தவிர்த்து வேறு யாரும் அதிரடியாக விளையாடக் கூடிய பேட்ஸ்மேன்களே இல்லை. ரச்சின் ரவீந்திரா, ராகுல் திரிப்பாட்டி, தீபக் ஹூடா, விஜய் சங்கர் ஆகியோர் எதிர்பார்த்த அளவிற்கு ஃபார்மில் இல்லை.
பாவம் ருதுராஜ்
அதேபோல் சாம் கரண் பேட்டிங் மற்றும் பவுலிங் இரண்டிலும் பங்களிப்பதில்லை. சிஎஸ்கே அணி வாங்கிய வீரர்களில் நூர் அஹ்மத், கலீல் அஹ்மத், ஜேமி ஓவர்டன் ஆகிய வீரர்கள் மட்டுமே நம்பிக்கை அளிக்கின்றனர். இதனால் சிஎஸ்கே அணியை ருதுராஜ் கெய்க்வாட் தனியாக தாங்கி வருவதாகவே பார்க்கப்படுகிறது.
இளம் வீரர்கள்
அதுமட்டுமல்லாமல் ஐதராபாத் அணிக்காக அனிகித் வர்மா, பஞ்சாப் அணிக்காக நேஹல் வதேரா, மும்பை அணிக்காக விக்னேஷ் புத்தூர், அஸ்வனி குமார், டெல்லி அணிக்காக விப்ராஜ் நிகம், அஷுதோஷ் சர்மா, லக்னோ அணிக்காக திக்வேஷ், ஆர்சிபி அணிக்காக சுயாஷ் சர்மா என்று இளம் வீரர்கள் அந்தந்த அணிகளுக்காக பட்டையை கிளப்பி வருகிறார்கள்.
அன்சுல் கம்போஜ்
ஆனால் சிஎஸ்கே அணியில் அன்சுல் கம்பேஜ் தனது திறமையை நிரூபித்த பின்னரும் கூட இதுவரை வாய்ப்பு கிடைக்கவில்லை. இத்தனைக்கும் அன்சுல் கம்போஜை சிஎஸ்கே அணி ரூ.3.40 கோடிக்கு போட்டி போட்டு வாங்கியது. பவர்பிளேவில் கலீல் அஹ்மத்-க்கு பார்ட்னர் இல்லாதது ரசிகர்களுக்கே வெளிப்படையாக தெரிந்தும் கூட சிஎஸ்கே அணி அன்சுல் கம்போஜை கொண்டு வர மறுக்கிறது.
வன்ஷ் பேடிக்கு வாய்ப்பு?
அதேபோல் நம்பர் 4 பேட்ஸ்மேனாக 22 வயதாகும் இளம் வீரர் வன்ஷ் பேடி இருக்கிறார். அவரை சிஎஸ்கே அணி மெகா ஏலத்தில் ரூ.55 லட்சத்திற்கு வாங்கியது. டெல்லி பிரீமியர் லீக் தொடரில் ரிஷப் பண்ட் தலைமையின் கீழ் விளையாடியவர். விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான இவர், தாராளமான ஓவருக்கு 15 முதல் 20 ரன்களை விளாசக் கூடிய வீரர்.
யார் இந்த வன்ஷ் பேடி?
டெல்லி பிரீமியர் லீக் தொடரில் 9 போட்டிகளில் விளையாடி 221 ரன்களை 185 ஸ்ட்ரைக் ரேட்டில் விளாசி இருக்கிறார். அறிமுகப் போட்டியிலேயே 19 பந்துகளில் 47 ரன்களை விளாசிய அவர், ஈஸ்ட் டெல்லி ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 41 பந்துகளில் 96 ரன்களை விளாசி இருக்கிறார். வேகப்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக 174 ஸ்ட்ரைக் ரேட்டிலும், ஸ்பின்னர்களுக்கு எதிராக 193 ஸ்ட்ரைக் ரேட்டிலும் ஆடி இருக்கிறார்.
சிஎஸ்கேவுக்கு வாய்ப்பு
வன்ஷ் பேடி மற்றும் அன்சுல் கம்போஜ் ஆகியோரை சிஎஸ்கே அணியின் பிளேயிங் லெவனுக்கு வாய்ப்பு வழங்குவதன் மூலமாக, தேவையென்றால் கான்வேவையும் சேர்க்க முடியும். அதேபோல் தோனிக்கான மாற்று வீரரை இந்த சீசனிலேயே சிஎஸ்கே அணி நிர்வாகம் தயார் செய்ய முடியும். கடந்த சீசனில் சமீர் ரிஸ்விக்கு வாய்ப்பு அளித்ததை போல் இந்த சீசனில் வன்ஷ் பேடிக்கு வாய்ப்பளிக்கலாம்.
ஸ்கவுட்டிங் குழு
ஒருவேளை வன்ஷ் பேடி சிறப்பாக விளையாடும் பட்சத்தில், சிஎஸ்கே அணிக்கான அடுத்த தலைமுறை வீரர்கள் தயாராகிவிடுவார்கள். அதுமட்டுமல்லாமல் மற்ற அணிகளுக்கான சிறப்பாக விளையாடி வரும் அனிகித் வர்மா, பிரியன்ஷ் ஆர்யா, நேஹல் வதேரா, விப்ராஜ் நிகம் உள்ளிட்ட வீரர்களை சிஎஸ்கே அணியின் ஸ்கவுட்டிங் குழு பயிற்சியாளர் ஃபிளம்மிங்கிடம் பரிந்துரை செய்துள்ளது.
சிஎஸ்கேவின் திண்டாட்டம்
ஆனால் சிஎஸ்கே அணி நிர்வாகம் இளம் வீரர்களை பெரிதாக வாங்கவே விரும்பவில்லை என்று தெரிய வந்துள்ளது. இதனால் வரும் காலங்களிலாவது கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் சமாளிக்கக் கூடிய இளம் வீரர்களை சிஎஸ்கே அணி நிர்வாகம் அடையாளம் காண வேண்டும் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
-
கடைசி 4 போட்டிகளில் 3ல் சேப்பாக்கம் மண்ணில் ஆடும் சிஎஸ்கே.. சென்னை அணியின் அட்டவணை.. முழு விவரம்! -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்!












Click it and Unblock the Notifications