சிஎஸ்கே மட்டுமல்ல.. பங்காளி மும்பைக்கும் ஆப்பு உறுதி.. 2 அணிகளின் தோல்விக்கு காரணம் ஒன்றுதான்!
சென்னை: ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே மற்றும் மும்பை ஆகிய இரு அணிகளும் தலா 5 முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளன. ஆனால் இந்த சீசனில் இரு அணிகளும் மோசமான தோல்விகளை அடைந்து வரும் நிலையில், பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதே கடினம் என்று பார்க்கப்படுகிறது. அதற்கான காரணங்கள் குறித்து பார்க்கலாம்.
ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி ஆடிய 6 போட்டிகளில் இதுவரை ஒரு வெற்றி, 5 தோல்வி என்று புள்ளிப் பட்டியலில் 9வது இடத்தில் இருக்கிறது. தோனி கேப்டனாக பொறுப்பேற்ற பின்னரும் சிஎஸ்கே அணியின் தோல்வியை தடுக்க முடியவில்லை. இன்னும் சொல்லப் போனால் சிஎஸ்கே அணியின் கோட்டை என்று கருதப்பட்ட சேப்பாக்கம் மைதானத்தையே அடுத்தடுத்து 3 அணிகள் சிதறடித்துவிட்டன.

பங்காளி பல்தான்ஸ்
ஐபிஎல் வரலாற்றிலேயே சிஎஸ்கே அணி இப்படியான ஒரு தோல்வியை பெற்றதில்லை. இன்னொரு பக்கம் மும்பை அணி இதுவரை ஆடியுள்ள 5 போட்டிகளில் ஒரு வெற்றி, 4 தோல்வியுடன் புள்ளிப் பட்டியலில் 8வது இடத்தில் இருக்கிறது. அடுத்ததாக பலம் வாய்ந்த டெல்லி அணியை எதிர்கொள்வதால், மும்பை அணிக்கும் சிஎஸ்கே அணியின் நிலைமை வரலாம் என்று பார்க்கப்படுகிறது.
2022க்கு பின் வந்த மாற்றம்
2 அணிகளிலும் சிறந்த வீரர்கள் இருந்த போதும், அடுத்தடுத்து தோல்வியடைவது ரசிகர்களிடையே புரியாத புரிதாக இருக்கிறது. தோல்விகளை ஏற்றுக் கொள்ள முடியாமல் இரு அணிகளின் ரசிகர்களும் தங்களின் அணிகளை திட்ட தொடங்கி இருக்கிறார்கள். இதற்கு 2022ஆம் ஆண்டு புதிதாக இணைந்த புதிய அணிகளும், அந்தந்த அணிகளின் உரிமையாளர்களின் மனமாற்றங்களுமே காரணமாக அமைந்துள்ளது.
உரிமையாளர்களின் கட்டுப்பாடு
இதுவரை பஞ்சாப், டெல்லி, ஐதராபாத், லக்னோ ஆகிய அணிகளிடம் கன்சிஸ்டன்சி என்பது கொஞ்சமும் இருந்ததில்லை. ஒவ்வொரு சீசனுக்கும் ஒரு கேப்டன், ஒரு பயிற்சியாளர் என்று பந்தாடி வந்திருக்கிறார்கள். வெற்றியை போல் தோல்விகளையும் ஏற்றுக் கொள்ள மறுத்து வந்துள்ளனர். அதேபோல் அணி மொத்தமாக உரிமையாளர்களின் கட்டுப்பாட்டில் இருந்திருக்கிறது.
பயிற்சியாளர்கள் ஆதிக்கம்
ஆனால் இப்போது பயிற்சியாளர்களின் கட்டுப்பாட்டுக்கு வந்துள்ளது. கடந்த 3 ஆண்டுகளாக டெல்லி, பஞ்சாப், ஐதராபாத், ஆர்சிபி உள்ளிட்ட அணிகளிடம் நல்ல கன்சிஸ்டன்சியை பார்க்க முடியும். பெரிதாக பயிற்சியாளர் மாற்றத்தையோ, கேப்டன்சி மாற்றத்தையோ பார்க்க முடியாது. அதேபோல் ஸ்கட்டிங் குழுவையும் பலப்படுத்தி இருக்கிறார்கள்.
மாற்று வீரர்கள் பிரச்சனை
மும்பை மற்றும் சிஎஸ்கே அணிகள் பழைய வீரர்களை வைத்தே ஒப்பேற்றி வருகிறது. இதுநாள் வரை மும்பை அணி பொல்லார்ட் மற்றும் மலிங்காவுக்கு மாற்றாக ஒரு பவுலரை தேடி கொண்டே தான் இருக்கிறது. சிஎஸ்கே அணியோ அனுபவ வீரர்கள் பக்கம் நம்பிக்கை வைத்து இளம் வீரர்களை நம்ப மறுக்கிறது.
அதிகரிக்கும் முதலீடு
இதனால் பழைய காலத்தை போல் மோசமான 2 அணிகள் விளையாடும் போது, எளிதாக 4 முதல் 6 புள்ளிகளை பெற முடியாத நிலை உள்ளது. இதன் காரணமாகவே சிஎஸ்கே மற்றும் மும்பை அணிகள் அடுத்தடுத்து தோல்வியை சந்தித்து வருகிறது. உலகம் முழுவதும் நடக்கும் லீக் தொடர்களில் டெல்லி, ஐதராபாத், லக்னோ உள்ளிட்ட அணிகளின் உரிமையாளர்கள் முதலீடுகளை செய்ய தொடங்கியுள்ளனர். அதன் மூலமாக கிடைக்கும் அனுபவத்தில் ஐபிஎல் தொடரில் சாதித்து வருவதாக பார்க்கப்படுகிறது.
-
ஒரு போட்டிக்கு ரூ.20,000.. ஐபிஎல் சியர் லீடர்ஸ்க்கு எவ்வளவு சம்பளம்? 2 மாதங்களுக்கு பணமழை தான்! -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்!












Click it and Unblock the Notifications