CSK vs KKR: சிஎஸ்கே வரலாற்றிலேயே.. தோனியால் கூட காப்பாற்ற முடியாது போல.. பிளே ஆஃப் சான்ஸ் எப்படி?
சென்னை: ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றிலேயே சிஎஸ்கே அணி இதுவரை பெற்றிடாத மோசமான தோல்விகளை தொடர்ந்து பெற்று வருகிறது. சேப்பாக்கம் மைதானத்தில் முதல்முறையாக ஹாட்ரிக் தோல்வியை பெற்றதோடு, ஐபிஎல் வரலாற்றில் முதல்முறையாக தொடர்ந்து 5 தோல்விகளை சிஎஸ்கே அணி பெற்றிருப்பது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி படுதோல்வியை சந்தித்திருக்கிறது. இந்த போட்டியில் சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் வெறும் 103 ரன்களை மட்டுமே சேர்த்திருக்கிறது. சேப்பாக்கம் மண்ணில் சிஎஸ்கே அணி சேர்த்துள்ள குறைந்தபட்ச ஸ்கோர் இதுதான். இதனைத் தொடர்ந்து கொல்கத்தா அணி 59 பந்துகள் மீதம் வைத்து வெற்றியை பெற்றுள்ளது.

சிஎஸ்கே அணியின் வரலாற்றில் எதிரணி இவ்வளவு விரைவாக ஒரு போட்டியில் வென்றதே இல்லை. அதேபோல் ஆர்சிபி, கொல்கத்தா மற்றும் டெல்லி ஆகிய அணிகளுடன் சிஎஸ்கே அணி சேப்பாக்கம் மைதானத்தில் தோல்வியடைந்திருக்கிறது. இதன் மூலமாக சேப்பாக்கம் மண்ணில் சிஎஸ்கே அணி முதல்முறையாக ஹாட்ரிக் தோல்வியை பெற்று மோசமான சாதனையை பெற்றிருக்கிறது.
ருதுராஜ் கெய்க்வாட் கேப்டன்சியில் தான் சிஎஸ்கே அணி தொடர் தோல்வியை சந்தித்தது என்றால், தோனியின் கேப்டன்சியில் மரண அடியை சிஎஸ்கே அணி பெற்றிருக்கிறது. இதனால் சேப்பாக்கம் மைதானத்திலேயே சிஎஸ்கே அணி ரசிகர்கள் கதற தொடங்கினர். மயான அமைதியுடன் ஒரு போட்டி நடைபெற்றது இதுவே முதல்முறையாகும்.
இருந்தாலும் சில சிஎஸ்கே அணி ரசிகர்கள் அந்த அணியின் பிளே ஆஃப் சான்ஸ் குறித்து விவாதித்து வருகின்றனர். என்னதான் ரசிகர்களுக்கு மன தைரியம் அதிகமிருந்தாலும், சிஎஸ்கே அணியின் பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பு இன்னும் இருக்கிறது. எஞ்சியுள்ள 8 போட்டிகளில் 7ல் வென்றால் எளிதாக எந்த அணியின் உதவியும் இன்றி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியும்.
அதேபோல் 8ல் 6 போட்டிகளில் வென்றால், என்ஆர்ஆர் அடிப்படையில் பிளே ஆஃப் செல்ல வாய்ப்புகள் இருக்கிறது. கடந்த சீசனில் ஆர்சிபி அணி எப்படி 2ஆம் பாதியில் அனைத்து அணிகளையும் வீழ்த்தி அடுத்தடுத்து வெற்றிகளை பெற்றதோ, அப்படியான ஒரு ஆட்டத்தை சிஎஸ்கே அணி விளையாட வேண்டும். ஆனால் சிஎஸ்கே அணியில் அப்படியான அதிரடி வீரர்கள் இல்லை என்பதால், ரசிகர்களே புலம்பி வருகின்றனர்.













Click it and Unblock the Notifications