CSK Vs MI: சிஎஸ்கே உக்கிரத்தை காணும் ஆவலில் சென்னை- இலவச பயணங்கள், சிங்கம் IPL QR குறியீடு!
சென்னை: நடப்பு ஐபிஎல் சீசனில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் CSK மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் இன்று மோதுகின்றன. இதனால் சென்னை மாநகரமே பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறது. ஐபிஎல் போட்டிகளை காண சேப்பாக்கம் மைதானத்துக்கு வரும் ரசிகர்கள், டிக்கெட்டுகளை காண்பித்தால் மாநகர பேருந்துகளில் இலவச பயணம் மேற்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் சென்னை மாநகரில் போக்குவரத்து மாற்றங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. ஐபிஎல் போட்டியை காண வரும் ரசிகர்களுக்கு உதவ சென்னை மாநகர போலீசார் சென்னை சிங்கம் கியூஆர் குறியீட்டையும் அறிமுகப்படுத்தி உள்ளனர்.
நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் சீசன் போட்டியில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று முதல் போட்டிகள் நடைபெற உள்ளன. சென்னையில் இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன. இரு அணிகளுமே சம வலுவானவை; இரு அணிகளும் மோதும் போட்டியை காண சென்னை ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

சென்னை சேப்பக்காம் மைதானத்தில் நடைபெறும் போட்டியை காண வரும் ரசிகர்களுக்காக சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் சிறப்பு பேருந்துகளை இயக்குகிறது. மேலும் ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட்டுகளை வைத்திருக்கும் ரசிகர்கள், மாநகரப் பேருந்துகளில் இலவசமாக பயணம் மேற்கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சென்னை மாநகரப் போக்குவரத்து கழகம் வெளியிட்ட அறிக்கையில், சென்னை சூப்பர் கிங்க்ஸ் கிரிக்கெட் லிமிடெட் நிறுவனத்திடம் பயண கட்டணம் பெற்றுக் கொண்டதால், பயணிகள் கிரிக்கெட் போட்டிக்கான நுழைவுச் சீட்டு வைத்திருந்தால் அதை நடத்துனரிடம் காண்பித்து பேருந்துகளில் (குளிர்சாதன பேருந்து நீங்கலாக) போட்டி நடைபெறும் நேரத்திற்கு மூன்று மணி நேரத்திற்கு முன்பும், போட்டி முடிந்த பின்னர் மூன்று மணி நேரத்திற்கும் மாநகரப் பேருந்துகளில் கட்டணமின்றி பயணிக்க அனுமதிக்கப்படுவர் என தெரிவித்துள்ளது.
இதேபோல சென்னை மாநகரத்தின் பல பகுதிகளில் போக்குவரத்தும் இன்று மட்டும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதாவது சேப்பாக்கம் மைதானத்துக்கு செல்ல கார் பாஸ் இல்லாதவர்கள், கத்தீட்ரல் சாலையில் இருந்து ஆர்.கே. சாலை வழியாக சென்று காமராஜர் சாலையை அடைந்து, மெரினா கடற்கரை சாலையில் வாகனங்களை நிறுத்திக் கொள்ளலாம். அதன் பின்னர், சுரங்க வழிப்பாதையை பயன்படுத்தி நடந்து மைதானத்துக்கு செல்லலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
🚔🏏 சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் 23.03.2025 முதல் நடைபெறும் IPL போட்டிகளை காண வரும் பொதுமக்களின் பாதுகாப்புக்காக, ‘‘சென்னை சிங்கம் IPL QR குறியீடு’’ என்ற நவீன வசதி சென்னை பெருநகர காவல்துறையால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 📲🔒 இந்த வசதி மூலம் பொதுமக்கள் கிரிக்கெட்… pic.twitter.com/azzhxtCZ44
— GREATER CHENNAI POLICE -GCP (@chennaipolice_) March 22, 2025
அத்துடன் சென்னை மெட்ரோ ரயிலில் டிக்கெட்டில் உள்ள கியூஆர் குறியீட்டை பயன்படுத்தி இலவச பயணம் மேற்கொள்ளலாம்.
ஐபிஎல் போட்டிகளைக் காண வரும் ரசிகர்கள், போலீசாரிடம் உதவி கேட்பதற்கான தனி கியூஆர் கோடும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சென்னை மாநகர காவல்துறை வெளியிட்ட அறிவிப்பில், சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் 23.03.2025 முதல் நடைபெறும் IPL போட்டிகளை காண வரும் பொதுமக்களின் பாதுகாப்புக்காக, ''சென்னை சிங்கம் IPL QR குறியீடு'' என்ற நவீன வசதி சென்னை பெருநகர காவல்துறையால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த வசதி மூலம் பொதுமக்கள் கிரிக்கெட் போட்டியை காணவரும்போது, தங்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை இந்த QR குறியீடு மூலம் காவல்துறைக்கு தெரிவிக்கலாம். காவல்துறை உடனடியாக பிரச்சனைகளுக்கு நடவடிக்கை எடுப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
AirTrunk: 3 லட்சம் கோடி மெகா முதலீடு.. சென்னை அம்பத்தூரில் ரூ.10,000 கோடியில் அஸ்திவாரம்! -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ!












Click it and Unblock the Notifications