சிஎஸ்கே அணி செய்யும் ஸ்கேம்.. தோனியும் உடந்தையா இருக்காரு.. எல்லாமே அந்த ஒரு விஷயத்துக்குதான்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சிஎஸ்கே அணியின் ஜாம்பவான் வீரரான தோனி 9வது இடத்தில் பேட்டிங் செய்ய களமிறங்கியது ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் தோனியின் பெயரை சொல்லிக் கொண்டு சிஎஸ்கே அணி நிர்வாகம் டிக்கெட் விற்பனை மற்றும் ஸ்பான்சர்ஷிப் பணத்திற்காக ஸ்கேம் செய்வதாக ரசிகர்கள் கொந்தளித்து வருகின்றனர். அதற்கு தோனியும் உடந்தையாக இருப்பதாகவும் ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.

ஐபிஎல் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் ஆர்சிபி அணியிடம் 50 ரன்கள் வித்தியாசத்தில் சிஎஸ்கே அணி படுதோல்வியை சந்தித்தது. சேப்பாக்கம் மைதானத்திலேயே சிஎஸ்கே அணி மோசமான தோல்வியை தழுவி இருப்பதால், அந்த அணியின் ரசிகர்கள் கொந்தளித்து வருகின்றனர். அதிலும் ரன் ரேட் பற்றி கொஞ்சமும் கவலையின்றி தோனி நம்பர் 9 வரிசையில் பேட்டிங் செய்ய களமிறங்கினார்.

CSK vs RCB CSK administration is doing a Scam by using MS Dhoni name for the sponsorship and Ticket Sales

நம்பர் 9ல் வந்த தோனி

அஸ்வினை நம்பர் 8ல் அனுப்பிவிட்டு நம்பர் 9ல் தோனி களமிறங்கியதால், அவர் இப்படி ஆடுவதற்கு ஓய்வு பெற்றுவிடலாம் என்று கூறி வருகின்றனர். 43 வயதாகும் தோனி, நேற்றைய ஆட்டத்தில் 16 பந்துகளை எதிர்கொண்டு 2 சிக்ஸ், ஒரு பவுண்டரி உட்பட 30 ரன்களை விளாசி தள்ளினார். அதனை முன் கூட்டியே களமிறங்கி கூடுதலாக 20 ரன்கள் அடித்திருந்தால், சிஎஸ்கே அணியின் ரன் ரேட் பாதிப்பு குறைந்திருக்கும்.

ஸ்பான்சர்ஷிப் ஒப்பந்தம்

இதனால் தோனியின் பெயரில் சிஎஸ்கே அணியும், அதன் நிர்வாகமும் ஸ்கேம் செய்து வருவதாக ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். ஏனென்றால் தோனி சிஎஸ்கே அணிக்கு விளையாடுவதன் மூலமாக ரூ.130 கோடிக்கும் அதிகமான ஸ்பான்சர்ஷிப் ஒப்பந்தங்கள் அந்த அணிக்கு கிடைத்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் தோனியை பார்க்க ரசிகர்கள் விரும்புவதால், டிக்கெட் விற்பனை உச்சத்தில் இருக்கிறது.

டிக்கெட் விற்பனை

38 ஆயிரம் ரசிகர்கள் அமர்ந்து பார்க்கும் சேப்பாக்கம் மைதானத்தில் ஆன்லைனில் டிக்கெட்டை பெறுவதற்கு 3 லட்சத்திற்கும் அதிகமானோர் காத்திருக்கிறார்கள். தோனிக்கு பின் சிஎஸ்கே அணியில் நட்சத்திர வீரர்கள் கிடையாது. சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்-ம் இதுவரை இந்திய அணியில் நிரந்தர இடத்தை பிடிக்கவில்லை.

தோனியும் உடந்தை

இதனால் சிஎஸ்கே அணியின் முகமாக தோனியையே அந்த அணி நிர்வாகம் முன்னிறுத்தி வருகிறது. பணத்திற்காக சிஎஸ்கே அணி நிர்வாகம் அவரை தொடர்ந்து விளையாட வைப்பதாகவும், அதனை வைத்து சிஎஸ்கே அணி நிர்வாகம் ஸ்பான்சர்ஷிப் ஒப்பந்தங்களை பெறுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அதற்கு தோனியும் உடந்தையாக இருப்பதாக ரசிகர்கள் கொந்தளித்து வருகின்றனர்.

Take a Poll

டிக்கெட் விற்பனையில் மோசடி

அதுமட்டுமல்லாமல் டிக்கெட் விற்பனைக்கான ஃபீவரை ரசிகர்கள் மத்தியில் குறையாமல் வைத்திருக்க இன்ஸ்டாகிராம் இன்ஃபுளூயன்சர்கள், நட்சத்திரங்கள், சினிமா பிரபலங்களுக்கு சிஎஸ்கே அணி நிர்வாகம் இலவசமாக டிக்கெட்டுகளை கொடுத்து வருவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. அதேபோல் ரசிகர்கள் ஆன்லைனில் டிக்கெட் கிடைக்காமல் அல்லாட, பிரபலங்களுக்கு மட்டும் இலவச டிக்கெட்டுகளை கொடுத்து சிஎஸ்கே நிர்வாகம் மோசமான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+