தினேஷ் கார்த்திக் இருக்காரு.. அந்த ஒரு வீரர் களத்தில் நின்றால் போதும்.. சிஎஸ்கே அணியின் தோல்வி உறுதி
சென்னை: ஐபிஎல் தொடரில் நாளை நடக்கவுள்ள ஆட்டத்தில் ஆர்சிபி அணியை எதிர்த்து சிஎஸ்கே அணி விளையாடவுள்ளது. சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடவுள்ளதால், ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த ஆண்டு மே 18ஆம் தேதியன்று நடந்த போட்டியில் சிஎஸ்கே அணியை வீழ்த்தி ஆர்சிபி அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது.
இதனால் கடந்த 10 ஆண்டுகளாகவே ஆர்சிபி அணியின் ரசிகர்கள் மே 18ஆம் தேதி போட்டியை நினைவுபடுத்தி சிஎஸ்கே அணியின் ரசிகர்களை வம்புக்கு இழுத்து வந்தனர். இதனால் சேப்பாக்கம் மைதானத்தில் வைத்து ஆர்சிபி அணிக்கு தரமான பதிலடியை சிஎஸ்கே அணிக்கு கொடுக்க வேண்டும் என்று விவாதித்து வருகிறார்கள்.

ஆர்சிபி வரலாறு
இந்த நிலையில் சேப்பாக்கம் மைதானத்தில் ஆர்சிபி அணி வெற்றிபெற்று 17 ஆண்டுகளாகிவிட்டது. கடைசியாக 2008ஆம் ஆண்டு நடந்த போட்டியில்தான் ஆர்சிபி அணி சிஎஸ்கே அணியை சேப்பாக்கம் மைதானத்தில் வீழ்த்தியது. அதனால் சிஎஸ்கே அணி அந்த வரலாற்றை தொடர வேண்டும் என்று ரசிகர்கள் தீவிரமாக இருக்கிறார்கள்.
நல்ல ஸ்பின்னர்கள்
அதேபோல் சேப்பாக்கம் மைதானத்தில் வெற்றிபெற வேண்டுமென்றால், அந்த அணியில் பலமான ஸ்பின்னர்கள் இருக்க வேண்டும். கடந்த சில சீசன்களாக ராஜஸ்தான் அணி சேப்பாக்கம் மைதானத்தில் சிறப்பாக விளையாடி வெற்றிபெற்றதற்கு அஸ்வின், சாஹல் மற்றும் ஆடம் ஜாம்பா ஆகிய 3 தரமான ஸ்பின்னர்களே காரணமாக இருந்தனர்.
ஆர்சிபி ஸ்பின்னர்கள்
ஆனால் ஆர்சிபி அணியின் ஸ்பின்னர்கள் என்றால் சுயாஷ் சர்மா, க்ருணால் பாண்டியா, லிவிங்ஸ்டன், ஸ்வப்னில் சிங் ஆகிய 4 வீரர்களே இருக்கிறார்கள். இவர்களில் முழுமையான ஸ்பின்னராக சுயாஷ் சர்மா மட்டுமே இருக்கிறார். அவருன் அதிக ரன்களை விட்டுக் கொடுத்து பவுலிங் செய்து வருகிறார். விக்கெட்டுகளை வீழ்த்தினாலும், சேப்பாக்கம் மைதானத்தில் ரன்களையும் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும்.
விராட் கோலி முக்கியம்
அதற்காகதான் இம்முறை சிஎஸ்கே அணி அஸ்வின், ஜடேஜா மற்றும் நூர் அஹ்மத் என்று 3 தரமான ஸ்பின்னர்களை வைத்திருக்கிறது. கடந்த போட்டியிலேயே 3 ஸ்பின்னர்களும் சேர்ந்து 11 ஓவர்கள் வீசி 5 விக்கெட்டுகளை வீழ்த்தி வெறும் 70 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்தனர். பேட்டிங் வரிசையில் ரஜத் பட்டிதர் நல்ல ஸ்பின் ஹிட்டராக இருந்தாலும், விராட் கோலியின் கைகளில் தான் ஆட்டமே இருக்கிறது.
தினேஷ் கார்த்திக்
ஆர்சிபி அணிக்காக 20 ஓவர்களிலும் விராட் கோலி களத்தில் இருந்தால் மட்டுமே அந்த அணியின் ஸ்கோர் சீராக முன்னேற்றம் அடையும். இல்லையென்றால் மும்பை அணியை போல் 160 ரன்களுக்கு ஆல் அவுட்டாகிவிடுவார்கள். அதேபோல் சேப்பாக்கம் மைதானத்தில் அனைத்து நுணுக்கங்களையும் அறிந்த தினேஷ் கார்த்திக் ஆலோசகராக இருக்கிறார்.
திட்டம்
சேப்பாக்கம் மைதானத்தில் எப்படி விளையாட என்பதை நன்றாக அறிந்தவர். அதற்கேற்ப பேட்ஸ்மேன்களுக்கான திட்டங்களையும், பவுலர்களுக்கான திட்டங்களையும் தினேஷ் கார்த்திக்கால் எளிதாக கொடுக்க முடியும். அதனால் இம்முறை ஆர்சிபி அணி கடுமையான சவால் அளிக்கும் என்று பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications