தோனி 2 சிக்ஸ் அடிச்சா போதுமா.. எனக்கு 2 புள்ளிகள் வேண்டும்.. சிஎஸ்கே ரசிகர்களை திட்டிய ஸ்ரீகாந்த்!
சென்னை: சிஎஸ்கே அணியின் ஜாம்பவான் வீரரான தோனி 2 சிக்ஸ் அடித்ததை பார்த்ததே திருப்தி என்று கூறி வரும் ரசிகர்களுக்கு முன்னாள் வீரரான கிறிஸ் ஸ்ரீகாந்த் தரமான பதிலடியை கொடுத்துள்ளார். எனக்கு தோனி 2 சிக்ஸ் அடிப்பதை பார்ப்பதோடு, சிஎஸ்கே அணி 2 புள்ளிகளை பெறுவதை பார்ப்பதே மகிழ்ச்சி என்றும் கூறியுள்ளார். சிஎஸ்கே அணி அணிதான் முக்கியமே தவிர, தனியொரு வீரர் பெரிது கிடையாது என்றும் ஸ்ரீகாந்த் பாடம் எடுத்துள்ளார்.
ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்துள்ளது. இந்த போட்டியில் நம்பர் 9ல் களமிறங்கிய ஜாம்பவான் வீரரான தோனி, கடைசி ஓவரில் 2 சிக்சர்களை விளாசினார். கடைசியில் வந்து அதிரடியாக ஆடிய தோனி 16 பந்துகளில் 2 சிக்ஸ், 3 பவுண்டரி உட்பட 30 ரன்களை விளாசி தள்ளினார்.

சிஎஸ்கே அணி தோல்வி அடைந்தாலும், தோனி அடித்த 2 சிக்சர் அந்த அணி ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியது. இதனால் மைதானத்தில் இருந்த ரசிகர்கள் தோனி.. தோனி.. என்று கோஷம் எழுப்பி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இதனால் சிஎஸ்கே அணியின் ரசிகர்களை முன்னாள் வீரரான கிறிஸ் ஸ்ரீகாந்த் வெளுத்து வாங்கி இருக்கிறார்.
இதுகுறித்து கிறிஸ் ஸ்ரீகாந்த் போட்டிக்கு பின் பேசுகையில், தோனி எதற்காக நம்பர் 9ல் களமிறங்க வேண்டும். அதற்கு அவர் பேட்டிங் செய்ய வந்திருக்காமலேயே இருக்கலாம். ஜடேஜாவுக்கு பின் தோனி வந்து சில சிக்சர்களை விளாசி இருந்தால், போட்டி கொஞ்சம் நெருக்கமாக சென்றிருக்கும். கடைசியில் ரன்கள் அடிப்பதால் எந்த மாற்றமும் நடக்கவில்லை.
அதேபோல் தோனியின் சிக்ஸ் என்பது தொலைக்காட்சி டிஆர்பி-க்கும், சில சாதாரண ரசிகர்களுக்கும் சரியாக இருக்கும். என்னை பொறுத்தவரை தோனி சிக்ஸ் அடிப்பதை பார்ப்பதை விடவும் சிஎஸ்கே அணி 2 புள்ளிகளை பெறுவதே மகிழ்ச்சியாக இருக்கும். அதனை எப்படி செய்வது என்று சிஎஸ்கே வீரர்கள் சிந்திக்க வேண்டும்.
சிஎஸ்கே அணியின் வெற்றியை கொண்டாடுபவர்களே ரியல் ரசிகர்கள். சிஎஸ்கே அணியில் உள்ள சாம் கரண், தீபக் ஹூடா போன்ற வீரர்களை நீக்கிவிட்டு கான்வே, அன்சுல் கம்போஜ் போன்ற வீரர்களை கொண்டு வர வேண்டும் என்று காட்டமாக தெரிவித்துள்ளார். தொடர்ச்சியாக 2 சீசன்களில் சிஎஸ்கே அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறாமல் இருந்ததில்லை. அதனால் இம்முறை பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற வேண்டும் என்று ரியல் சிஎஸ்கே ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
-
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications