அந்த 2 வீரர்களை உள்ளே கொண்டு வாங்க.. சிஎஸ்கே செய்ய வேண்டிய மாற்றம் என்ன? முடிவு எடுப்பாரா ருதுராஜ்?
சென்னை: ஆர்சிபி அணிக்கு எதிராக 50 ரன்கள் வித்தியாசத்தில் சிஎஸ்கே அணி அடைந்துள்ள தோல்வி ரசிகர்களை விரக்தியடைய வைத்துள்ளது. இதனால் சிஎஸ்கே அணியின் பிளேயிங் 12ல் இரு மாற்றங்களை கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் பயிற்சியாளர் ஃபிளமிங் செய்ய வேண்டும் என்று பார்க்கப்பட்டு வருகிறது.
சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் 50 ரன்கள் வித்தியாசத்தில் சிஎஸ்கே அணி தோல்வியை சந்தித்துள்ளது. இதன் மூலமாக 17 ஆண்டுகளுக்கு பின் ஆர்சிபி அணி சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே அணியை வீழ்த்தி புதிய வரலாறு படைத்துள்ளது. இதன் காரணமாக ஆர்சிபி அணியின் ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கின்றனர்.

பேட்ஸ்மேன்கள் ஏமாற்றம்
ஆனால் சிஎஸ்கே அணியின் ரசிகர்கள் சோகத்தின் உச்சத்திற்கே சென்றுள்ளனர். ஏனென்றால் பவுலிங், ஃபீல்டிங், பேட்டிங் என்று 3 துறைகளிலும் சிஎஸ்கே மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறது. அதிகம் நம்பியிருந்த ருதுராஜ், சிவம் துபே, ராகுல் திரிப்பாட்டி, சாம் கரண் என்று அத்தனை பேட்ஸ்மேன்களும் ஏமாற்றத்தை அளித்துள்ளனர்.
சிஎஸ்கே கதை முடிந்ததா?
ஸ்பின் கோட்டையான சேப்பாக்கம் மைதானத்தில் அஸ்வின் மற்றும் ஜடேஜா இருவருமே தங்களின் ஓவர்களை முழுமையாக வீசவில்லை. இதன் மூலமாக சிஎஸ்கே அணி எப்படியான ஆட்டத்தை விளையாடி இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடியும். இதனால் சிஎஸ்கே அணிக்கு இந்த ஐபிஎல் சீசனில் கதை முடிந்தது என்றும் கூட ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.
சிக்கல் என்ன?
ஆனால் சிஎஸ்கே அணி ரசிகர்கள் விமர்சிக்கும் அளவிற்கு அவ்வளவு மோசமான அணி கிடையாது. சில மாற்றங்களை செய்தாலே, சிஎஸ்கே அணி எளிதாக கம்பேக் கொடுத்து பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி விட முடியும். அதற்கு பிளேயிங் 12ல் சில மாற்றங்களை செய்ய வேண்டும் என்று பார்க்கப்படுகிறது. சிஎஸ்கே அணியில் ஒரே மாதிரியான பேட்டிங்கை ஆடக் கூடிய பேட்ஸ்மேன்கள் அதிகளவில் இருக்கிறார்கள்.
என்ன மாற்றம்?
அதாவது ராகுல் திரிப்பாட்டி, ருதுராஜ், ரச்சின் மற்றும் தீபக் ஹூடா என்று டாப் 4 வீரர்களும் ஒரே மாதிரியான பேட்ஸ்மேன்கள். இதில் ரச்சின் - ருதுராஜ் கூட்டணி தொடக்க வீரர்களாக களமிறங்கிய பின், ராகுல் திரிப்பாட்டியை நம்பர் 3ல் களமிறக்கலாம். அவர் ஏற்கனவே நம்பர் 3ல் களமிறங்கி சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.
மாற்று வீரர்கள் யார்?
ஆனால் தீபக் ஹூடாவிற்கு பதிலாக மாற்று வீரரை பிளேயிங் லெவனில் சேர்க்க வேண்டும். அவர் கடந்த சில சீசன்களாகவே மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதோடு, களத்திலும் நம்பிக்கை இல்லாமல் காணப்படுகிறார். இதனால் மீண்டும் வாய்ப்பளித்து சிஎஸ்கே அணி ரிஸ்க் எடுக்க முடியாது. அவரது இடத்தில் ஷேக் ரஷீத் அல்லது விஜய் சங்கரை களமிறக்கி முயற்சிக்கலாம்.
சாம் கரணை நீக்க வேண்டும்
அதேபோல் சாம் கரணுக்கு பதிலாக ஜேமி ஓவர்டனை களமிறங்க சிஎஸ்கே பரிசீலிக்கலாம். ஏனென்றால் மெகா ஏலத்திலேயே ஜேமி ஓவர்டனை வாங்க வேண்டும் என்பதில் சிஎஸ்கே தீவிரமாக இருந்தது. அவரை வாங்குவதற்காக கூடுதல் பணத்தை கையில் வைத்திருந்தது. அவர் அதிரடியான ஃபினிஷர் என்பதோடு, நன்றாக பவுலிங் செய்யக் கூடியவர்.
இளம் பவுலருக்கு வாய்ப்பு
ஏனென்றால் சாம் கரணால் ஸ்பின்னர்களை அடிக்க முடியும் என்று நம்புவதில் எந்த பிரயோஜனமும் இல்லை. அவர் கிரிக்கெட் வாழ்க்கையிலேயே ஸ்பின்னர்களை பெரிதாக அட்டாக் செய்ததில்லை. அதேபோல் பிளேயிங் 12ல் இளம் வேகப்பந்துவீச்சாளரான அன்சுல் கம்போஜை சேர்க்க சிஎஸ்கே அணி ஆலோசித்தால், அது மிகப்பெரிய பலனை கொடுக்கும்.












Click it and Unblock the Notifications