17 பந்துகளில் தரமான ஆட்டத்தை காட்டிய உர்வில் படேல்.. டிரேட் பண்ணாதீங்க.. சிஎஸ்கே அணிக்கு கோரிக்கை!

Subscribe to Oneindia Tamil

கொல்கத்தா: சையத் முஷ்டாக் அலி தொடரில் ஒடிசா அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் அணிக்காக ஆடிய நட்சத்திர வீரர் உர்வில் படேல் 17 பந்துகளில் அரைசதம் அடித்து வெளுத்து கட்டி இருக்கிறார். சிறப்பாக ஆடிய அவர் 30 பந்துகளில் 4 சிக்ஸ், 6 பவுண்டரி உட்பட 62 ரன்களை குவித்துள்ளார்.

சையத் முஷ்டாக் அலி தொடரில் ஒடிசா அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் அணி களமிறங்கியது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய குஜராத் அணி உர்வில் படேல் மற்றும் கில்லன் படேல் ஆகியோரின் அதிரடியான ஆட்டத்தால் 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 250 ரன்களை குவித்தது. சிறப்பாக ஆடிய உர்வில் படேல் டாப் ஆர்டர் வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்த போது கொஞ்சமும் தளராமல் அதிரடியாக விளாசினர்.

CSK

17 பந்துகளில் அரைசதம் அடித்த உர்வில் படேல், 30 பந்துகளில் 4 சிக்ஸ், 6 பவுண்டரி உட்பட 62 ரன்கள் குவித்தார். இதன்பின் களமிறங்கிய ஒடிசா அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 229 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது. இந்தப் போட்டியில் உர்வில் படேலின் ஆட்டம் ரசிகர்களிடையே பாராட்டுக்களை பெற்று வருகிறது.

அதேபோல் சிஎஸ்கே அணி நிர்வாகத்திற்கு ரசிகர்கள் ஒரு கோரிக்கையையும் வைத்து வருகின்றனர். உர்வில் படேலை டிரேட் செய்ய வேண்டாம் என்று பதிவுகளை வெளியிட தொடங்கி இருக்கின்றனர். சிஎஸ்கே மற்றும் ஐதராபாத் அணிகளுக்கு இடையில் ஒரு டிரேட் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. அதிலும் சிஎஸ்கே அணியின் விக்கெட் கீப்பர் பெயர் அடிபடுவதாக சொல்லப்படுகிறது.

சிஎஸ்கே அணியின் விக்கெட் கீப்பர்களாக தோனி, சஞ்சு சாம்சன், கார்த்திக் சர்மா மற்றும் உர்வில் படேல் ஆகியோர் இருக்கின்றனர். இதில் தோனி, சஞ்சு சாம்சன் மற்றும் கார்த்திக் சர்மா ஆகியோரை சிஎஸ்கே அணி விட்டுக் கொடுக்க வாய்ப்புகள் இல்லை. இதனால் உர்வில் படேலை டிரேட் செய்ய சிஎஸ்கே அணி நிர்வாகம் பேசி வருவதாக புரிந்து கொள்ள முடிகிறது.

அவருக்கு சிஎஸ்கே அணியின் பிளேயிங் லெவனில் தொடர்ச்சியாக வாய்ப்புகளை வழங்க முடியவில்லை. டாப் ஆர்டர் வீரர் என்பதால், யாரேனும் காயம் அடைந்தால் மாற்று வீரராக மட்டுமே உர்வில் படேல் களமிறங்க முடியும். ஆனால் ஐதராபாத் அணி டிராவிஸ் ஹெட் இடத்தில் உர்வில் படேலை இறக்க திட்டமிட்டு வருகிறது. இதனால் உர்வில் படேலை சிஎஸ்கே நிர்வாகம் டிரேட் செய்ய கூடாது என்று ரசிகர்கள் பேசி தொடங்கியுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+