ரவி சாஸ்திரி, அசாருதீன் முதல் ஹர்திக், சாஹல் வரை.. விவாகரத்தான இந்திய கிரிக்கெட் வீரர்களின் பட்டியல்
டெல்லி: இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளரான யுஸ்வேந்திர சாஹல் - தனஸ்ரீ வர்மா தம்பதியினர் விவாகரத்து செய்துள்ளனர். இந்திய கிரிக்கெட் ரசிகர்களிடையே சோசியல் மீடியாவில் இது விவாதமாகி இருக்கும் நிலையில், இதுவரை மனைவியை விவாகரத்து செய்த இந்திய கிரிக்கெட் வீரர்களின் பட்டியலை பார்க்கலாம்.
இந்தியாவில் கிரிக்கெட் விளையாட்டு மதமாகவும், கிரிக்கெட் வீரர்கள் கடவுளாகவும் பார்க்கப்பட்டு வருகிறார்கள். அந்த வகையில் கிரிக்கெட் வீரர்களின் சொந்த வாழ்க்கையும் ரசிகர்கள் மத்தியில் தொடர்ச்சியாக விவாதிக்கப்படும். களத்தில் எவ்வளவு அழுத்ததுடன் செயல்படுகிறார்களோ, அதே அளவிற்கு சொந்த வாழ்க்கையிலும் கவனமாக செயல்பட வேண்டிய நிலை உள்ளது.

ஏனென்றால் ஒரு சிறிய சர்ச்சை கூட சோசியல் மீடியாவில் பெரிதாக்கி விளக்கம் கொடுக்க வேண்டிய நிலை உருவாகும். அந்த வகையில் சாஹல் - தனஸ்ரீ வர்மா தம்பதி விவாகரத்து பெற்றுள்ளனர். இந்திய கிரிக்கெட் வரலாற்றில் ஏராளமான வீரர்கள் விவாகரத்து பெற்றிருப்பதால், இதுவரை யார் யாருக்கு விவாகரத்து நடந்திருக்கிறது என்பதை ரசிகர்கள் தேடி வருகின்றனர்.
அதில் இந்திய முன்னாள் கேப்டன் அசாருதீன் தனது முதல் மனைவி நவ்ரீனை 1996ஆம் ஆண்டு விவாகரத்து செய்தார். இவர்களுக்கு 2 குழந்தைகள் இருந்த நிலையில், பாலிவுட் நடிகை சங்கீதா பில்ஜானியுடன் காதலில் விழுந்தார். பின்னர் அடுத்த சில ஆண்டுகளில் அவரையும் விவாகரத்து செய்தார். அதேபோல் வினோத் காம்ப்ளி முதலாவதாக நோவெல்லா லூவிஸ் என்பவரை திருமணம் செய்து சில ஆண்டுகளிலேயே விவாகரத்து செய்தார்.
அதன்பின் ஆண்ட்ரியா என்பவரை 2வது திருமணம் செய்து கொண்டார். அதேபோல் முன்னாள் வீரர் மனோஜ் பிரபாகர் தனது முதல் மனைவியான சந்தியாவை பிரிந்து சென்றார். இதன்பின் ஃபர்ஹீன் என்பவரை திருமணம் செய்து குடும்பமாக வாழ்ந்தார். இந்த பட்டியலில் பிரபல வர்ணனையாளர் ரவி சாஸ்திரியின் பெயர் இடம்பெற்றிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
ரவி சாஸ்திரி தனது முதல் திருமணத்தை ரிது சிங் என்பவருடன் செய்து கொண்டார். இவர்களுக்கு 2012ஆம் ஆண்டு விவாகரத்து நடந்தது. அதேபோல் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஜவஹல் ஸ்ரீநாத் - ஜோத்ஸ்னா தம்பதி 2008ல் பிரிந்தனர். அதேபோல் முன்னாள் வீரர் ஷிகர் தவான் - ஆயிஷா முகர்ஜி தம்பதி 9 ஆண்டுகள் திருமணம் செய்து வாழ்ந்து வந்த போது, 2021ஆம் ஆண்டு விவாகரத்து செய்வதாக அறிவித்தனர்.
முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் முதலாவதாக நிகிதா என்பவரை திருமணம் செய்தார். இவர்களின் திருமணம் 2007ஆம் ஆண்டு முடிவுக்கு வந்தது. அண்மையில் நட்சத்திர வீரர் முகமது ஷமி தனது மனைவி ஹசின் ஜஹானை 2018ல் விவாகரத்து செய்தார். இதன்பின் முகமது ஷமி இன்றுவரை சிக்கல்களை எதிர்கொண்டு வருகிறார்.
அதேபோல் கடந்த ஆண்டு நட்சத்திர வீரர் ஹர்திக் பாண்டியா தனது முதல் மனைவியான நடாஷா ஸ்டான்கோவிக்கை விவாகரத்து செய்தார். இருப்பினும் இவர்கள் குழந்தைக்காக நண்பர்களாக நட்பை தொடர்ந்து வருகின்றனர். இந்த பட்டியலில் சாஹல் - தனஸ்ரீ தம்பதி இணைந்துள்ளது.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications