சூப்பர், சூப்பர், சூப்பர்.. ரிஷப் பண்ட்-ஐ புகழ்ந்து தள்ளிய சுனில் கவாஸ்கர்.. நிஜமான சச்சின் வார்த்தை
லண்டன்: இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட் சதம் விளாசியதை பார்த்து இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சூப்பர், சூப்பர், சூப்பர்.. என்று பாராட்டி இருப்பது ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ஆஸ்திரேலியா மண்ணில் ரிஷப் பண்டின் ஆட்டத்தை பார்த்து ஸ்டுபிட், ஸ்டுபிட், ஸ்டுபிட் என்று சுனில் கவாஸ்கர் விமர்சித்திருந்தார்.
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ரிஷப் பண்ட் ஆட்டம் கடுமையான விமர்சனத்தை பெற்றது. ஒரு போட்டியில் ரிஷப் பண்ட் தேவையில்லாத ஷாட்டை விளையாடி ஆட்டமிழந்த போது வர்ணனையில் இருந்த சுனில் கவாஸ்கர், ஸ்டுபிட், ஸ்டுபிட், ஸ்டுபிட் என்று கடுமையாக விமர்சித்திருந்தார். சுனில் கவாஸ்கரின் இந்த விமர்சனம் உலகம் முழுவதும் கவனம் பெற்றது.

ரிஷப் பண்ட் ஆட்டம்
இந்த நிலையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ரிஷப் பண்ட் ஆட்டம் ரசிகர்களிடையே மிகப்பெரிய பாராட்டுகளை பெற்று வருகிறது. ஏனென்றால் களமிறங்கிய 2வது பந்திலேயே பென் ஸ்டோக்ஸ் பந்தை டவுன் தி டிராக் இறங்கி வந்து பவுண்டரிக்கு அனுப்பினார். இதனை பார்த்து பென் ஸ்டோக்ஸே மிரண்டுபோனார்.
அரைசதம் அடித்த பண்ட்
இதன்பின் ரிஷப் பண்ட் நிதானமாக டிஃபென்சிவாக விளையாடி ரன்களை சேர்த்த போது, ஒரு கட்டத்தில் அதிரடிக்கு திரும்பினார். முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ரிஷப் பண்ட் 65 ரன்களை சேர்த்திருந்த நிலையில், 2வது நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. எந்தவித பதற்றமும் இல்லாமல் ரிஷப் பண்ட் பவுண்டரிகளாக விளாசி ரன்களை சேர்த்து வந்தார்.
7வது சதம்
அதில் பஷீர் பவுலிங்கில் 4, 6 என்று விளாசி 90 ரன்களுக்குள் வந்தார். அதன்பின் 99 ரன்களை எட்டிய போது, இங்கிலாந்து வீரர்கள் மற்றும் ரசிகர்கள் ஒரு ரன் எடுப்பார் என்று எதிர்பார்த்திருந்தனர். ஆனால் ரிஷப் பண்ட் அசால்ட்டாக பஷீர் பந்தை சிக்சருக்கு அனுப்பி தனது 7வது சததை விளாசி தள்ளினார். இதன் மூலமாக இங்கிலாந்து மண்ணில் 2வது சதத்தையும் ரிஷப் பண்ட் அடித்திருக்கிறார்.
சுனில் கவாஸ்கர் பாராட்டு
ரிஷப் பண்ட் சதம் விளாசிய போது வர்ணனையில் இருந்த சுனில் கவாஸ்கர், சூப்பர்.. சூப்பர்.. சூப்பர் என்று பாராட்டினார். அப்போது சரியாக ரிஷப் பண்ட் பல்டி அடித்து கொண்டாட, ரசிகர்கள் நெகிழ்ச்சி அடைந்தனர். அதுமட்டுமல்லாமல் நேற்றே சச்சின் டெண்டுல்கர் 3வது சதத்தை எந்த வீரர் அடிக்கப் போகிறார் என்ற கேள்வியை எழுப்பி இருந்தார்.
சச்சின் வார்த்தை
ஏனென்றால் 2002ஆம் ஆண்டில் இங்கிலாந்து அணிக்கு எதிராக ஹெடிங்லே மைதானத்தில் நடந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் கங்குலி, ராகுல் டிராவிட் மற்றும் நான் ஆகிய மூவரும் சதத்தை விளாசினோம். இதனால் ஜெய்ஸ்வால், கில்லை தொடர்ந்து 3வது சதத்தை யார் அடிக்க போகிறார்கள் என்று எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தார். அதற்கேற்ப ரிஷப் பண்ட் சதம் விளாசி அசத்தியுள்ளார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications