குல்தீப் யாதவை கிரவுண்டில் வைத்து அந்த கத்து கத்திய.. ஹர்திக் பாண்டியா! இதுதான் சொதப்பலுக்கு காரணம்!
கொழும்பு: நேற்று நடந்த டி20 உலக கோப்பை போட்டியில் பாகிஸ்தான் அணியை இந்தியா வீழ்த்தியிருந்தது. ஆனால், இந்த வெற்றி அவ்வளவு எளிதாக நடந்துவிடவில்லை. குறிப்பாக, குல்தீப் சொதப்பியது ஹர்திக் பாண்டியாவை கோபத்தின் உச்சிக்கே கொண்டு சென்றது.
கொழும்பில் நடைபெற்ற பரபரப்பான டி20 உலகக் கோப்பை போட்டியில் பாகிஸ்தானை 61 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்தியா, சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியது. இப்போட்டியில் ஹர்திக் பாண்டியா, குல்தீப் யாதவை கிரவுண்டில் வைத்து கத்தியிருந்தது கவனம் பெற்றிருக்கிறது.

பாகிஸ்தான் இன்னிங்ஸின் 18வது ஓவர். பாண்டியா ஷஹீன் அஃப்ரிடிக்கு பந்துவீச, அவர் அடித்த ஷார்ட் பிட்ச் பந்தை லாங்-ஆன் திசையில் இருந்த குல்தீப் யாதவ் பிடிக்கத் தவறினார், அது சிக்ஸரானது. முன்னதாக இஷான் கிஷனும் ஒரு கேட்சைத் தவறவிட்டிருந்தார்.
கேட்ச் தவறியதால் பாண்டியா கோபமடைந்து, இரு பீல்டர்களையும் சுட்டிக்காட்டி கண்டபடி சாடியிருந்தார். இந்திய அணி வெற்றியின் விளிம்பில் இருந்தது. ஈஸியாக ஜெயித்திருக்கலாம். ஆனால், இந்த கேட்ச் மிஸ்ஸில் ஆட்ட களத்தை பரபரப்பாக்கியது. இந்த சம்பவத்தால் டென்ஷனான பாண்டியா, அதே ஆட்டத்தில் தனது ஆக்ரோஷத்தை திறமையால் பதிலளித்தார்.
அவர் அதே ஓவரில், உஸ்மான் தாரிக்கை வீழ்த்தி தனது டென்ஷனை வெளிப்படுத்தியிருந்தார். பாண்டியா 3 ஓவர்களில் 16 ரன்கள் கொடுத்து 2 விக்கெட் எடுத்து, பாகிஸ்தானை 18 ஓவர்களில் 114 ரன்களுக்குச் சுருட்டுவதில் முக்கியப் பங்கு வகித்தார்.
முன்னதாக, இந்தியா 175/7 ரன் எடுத்தது. இஷான் கிஷனின் 77 ரன்கள் இந்த ரன் உயர்வுக்கு முக்கிய காரணம். சூர்யகுமார் யாதவ், சிவம் தூபேவும் ரன்களைச் சேர்த்தனர்.
பாகிஸ்தான் சேஸிங் ஆரம்பத்திலேயே தடுமாறியது. பும்ரா பவர் பிளேயில் இரண்டு விக்கெட் வீழ்த்தி 13/3 என ஆட்டம் காணச் செய்தார். உஸ்மான் கானின் 44 ரன்கள் மட்டுமே பாகிஸ்தானுக்கு பலமாக இருந்தது. இறுதியில் இந்தியாவின் வேகப்பந்து மற்றும் சுழற்பந்துத் தாக்குதலைச் சமாளிக்க முடியாமல் பாகிஸ்தான் தோல்வியுற்றது.












Click it and Unblock the Notifications