109 மீட்டர் சிக்ஸ்.. இதுதான்டா பாண்டியா பவர்.. கொஞ்சமும் பாவம் பார்க்காமல் வெளுத்த ஹர்திக்!
டெல்லி: நமீபியா அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் ஹர்திக் பாண்டியா அடித்த சிக்ஸ் 109 மீட்டர் தூரம் பறந்துள்ளது. சிறப்பாக விளையாடிய ஹர்திக் பாண்டியா 27 பந்துகளில் பந்துகளில் அரைதம் கடந்தார். இவரின் அதிரடி காரணமாக இந்திய அணி 18.1 ஓவர்களிலேயே 200 ரன்களை கடந்தது.
டி20 உலகக்கோப்பை தொடரின் லீக் போட்டியில் நமீபியா அணியை எதிர்த்து இந்திய அணி களமிறங்கியது. ஏற்கனவே அமெரிக்கா அணிக்கு எதிரான இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். மும்பை மைதானத்தில் இந்திய அணி சொதப்பியது ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.

இதையடுத்து டெல்லியில் தொடங்கிய இந்த போட்டியில் டாஸ் நமீபியா கேப்டன் எராஸ்மஸ் பவுலிங்கை தேர்வு செய்தார். இதன்பின் சஞ்சு சாம்சன் - இஷான் கிஷன் ஜோடி களமிறங்கியது. அதிரடியாக ஆடிய சஞ்சு சாம்சன் 8 பந்துகளில் 22 ரன்களும், இஷான் கிஷன் 24 பந்துகளில் 61 ரன்களையும், திலக் வர்மா 21 பந்துகளில் 25 ரன்களையும் எடுத்தனர்.
பின்னர் வந்த கேப்டன் சூர்யகுமார் யாதவ் 13 பந்துகளில் 12 ரன்களில் ஆட்டமிழக்க, அதிரடி வீரர்களான ஹர்திக் பாண்டியா - சிவம் துபே ஜோடி இணைந்தது. ஹர்திக் பாண்டியா தாம் சந்தித்த முதல் பந்து முதலே சிக்ஸ் விளாசும் முனைப்பில் இருந்தார். அதற்கேற்ப 15வது ஓவரை வீச பெர்னார்ட் வந்தார். அந்த ஓவரில் 2 சிக்ஸ், ஒரு பவுண்டரி உட்பட 24 ரன்கள குவிக்கப்பட்டது.
15வது ஓவரில் ஹர்திக் பாண்டியா லாங் ஆஃப் திசையில் அடித்த சிக்ஸ் சுமார் 109 மீட்டர் தூரம் பறந்தது. தொடர்ந்து இந்திய அணி 18.1 ஓவர்களில் 200 ரன்களை கடந்தது. சிறப்பாக ஆடிய ஹர்திக் பாண்டியா 27 பந்துகளில் அரைசதம் கடந்தார். அரைசதம் அடித்த அடுத்த பந்திலும் சிக்ஸ் அடிக்க பேட்டிங் ஓங்கிய அவர், 28 பந்திகளில் 4 சிக்ஸ், 4 பவுண்டரி உட்பட 52 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
ஹர்திக் பாண்டியா சாதாரணமாக பேட்டை ஓங்கினாலே, பந்து சுமார் 85 மீட்டர் தூரம் சென்று விழுந்தது. இதனால் ஹர்திக் பாண்டியா பவர் ஹிட்டிங்கில் உச்சக்கட்ட ஃபார்மில் இருப்பதாக ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். இதனை பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியிலும் தொடர வேண்டும் என்று ரசிகர்கள் பலரும் வலியுறுத்த தொடங்கியுள்ளனர்.
-
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி












Click it and Unblock the Notifications