ஹர்திக் விக்கெட்.. ஆக்ரோஷமாக கொண்டாடிய க்ருணால் பாண்டியா.. கோபத்துடன் நடந்து சென்ற மும்பை கேப்டன்!
மும்பை: மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியாவின் விக்கெட்டை வீழ்த்திய போது, ஆர்சிபி அணியின் நட்சத்திர ஸ்பின்னரான க்ருணால் பாண்டியா ஆக்ரோஷமாக கொண்டாடியது பேசுபொருளாகியது. க்ருணால் பாண்டியாவின் கொண்டாட்டத்தை பார்த்த ஹர்திக் பாண்டியா, சிறிது கோபத்துடன் பெவிலியன் சென்றார். இதனால் சகோதரர்களுக்கு இடையிலான பிரச்சனை குறித்த விவாதம் ரசிகர்களிடையே தொடங்கியுள்ளது.
ஐபிஎல் தொடரில் மும்பை அணியை எதிர்த்து ஆர்சிபி அணி விளையாடி வருகிறது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ஆர்சிபி அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 240 ரன்களை சேர்த்தது. சிறப்பாக ஆடிய பில் சால்ட் 36 பந்துகளுக்கு 78 ரன்களையும், ரஜத் பட்டிதார் 20 பந்துகளில் 53 ரன்களையும் குவித்தனர்.

இதையடுத்து களமிறங்கிய மும்பை அணி 74 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதேபோல் ரோகித் சர்மாவும் 19 ரன்களில் ரிட்டையர்ட் ஹர்ட்டாகி வெளியேறினார். இதனால் மொத்த பொறுப்பும் ஹர்திக் பாண்டியா தலையில் விழுந்தது. ஹர்திக் பாண்டியாவும் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தார். பவுண்டரிகளாக விளாசி தள்ளினார்.
ஆனால் ஜேக்கப் டஃபி வீசிய 15வது ஓவரில் சிக்ஸ் அடிக்க முயற்சித்து ஹர்திக் பாண்டியா 22 பந்துகளில் 40 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். டீப் பாய்ண்ட் திசையில் ஃபீல்டிங் நின்றிருந்த ரொமாரியோ ஷெப்பர்ட் கைகளிலேயே சென்று பந்து விழுந்தது. அப்போது கவர்ஸ் திசையில் ஃபீல்டிங் நின்றிருந்த க்ருணால் பாண்டியா, ஷெப்பர்ட் அருகில் வந்து ஆக்ரோஷமாக கொண்டாடினார்.
அதேபோல் விக்கெட்டை கைப்பற்றி ஜேக்கப் டஃபியிடமும் கட்டிப்பிடித்து கத்தி கொண்டாட்டத்தில் ஈடுபட்டார். இதனை பார்த்த ஹர்திக் பாண்டியா கோபமாக பெவிலியன் நோக்கி நடந்து சென்றார். டி20 உலகக்கோப்பை தொடருக்கு முன்பு இருந்தே சகோதரர்களான ஹர்திக் மற்றும் க்ருணால் பாண்டியா இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக டி20 உலகக்கோப்பையை வென்ற பின் க்ருணால் பாண்டியாவை பார்க்க ஹர்திக் பாண்டியா செல்லவில்லை. குஜராத் மைதானத்தில் நடந்த போது க்ருணால் பாண்டியாவும் டி20 உலகக்கோப்பை போட்டியை காண நேரில் வரவில்லை. இதன் பின்னணியில் ஹர்திக் பாண்டியா - மஹிகா சர்மா இடையிலான உறவே காரணமாக சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications