இந்திய அணியின் அஸ்திவாரத்தை.. ஆட்டிய 2 "கடிகள்".. ஆடிப்போன ரோஹித் சர்மா.. உலகக் கோப்பையில் ட்விஸ்ட்
சென்னை: 2023 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணிக்கு நடந்த 2 சம்பவங்கள் மொத்த அணிக்கும் எதிராக திரும்பி உள்ளது.
2023 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி அடுத்தடுத்து வெற்றிகளை பதிவு செய்து வருகிறது. இதுவரை 4 போட்டிகளில் இந்தியா வென்றுள்ளது. அதே சமயம் வெற்றிக்கு இடையே இந்திய அணிக்கு சில கெட்ட சம்பவங்கள் நடந்துள்ளன.
உதாரணமாக வங்கதேசம் அணிக்கு எதிரான போட்டியின் போது ஹர்திக் பாண்டியா பவுலிங் செய்த போது அவர் காலால் பந்தை தடுக்க முயன்றார். அப்போது தடுக்கி விழுந்த ஹர்திக் பாண்டியா இன்னொரு கால் மேல் மடங்கி அமர்ந்தார். இதில் அவரின் காலில் பலத்த காயம் ஏற்பட்டது. கீழே விழுந்து துடித்த ஹர்திக் பாண்டியா ஆ.. ஆ என்று கத்தினார். அதன்பின் மைதானத்திற்குள் வேகமாக பிசியோ ஓடி வந்தார். அவருக்கு உடனே சிகிச்சை அளிக்கப்பட்டது. அங்கேயே அவருக்கு காலில் கட்டு போடப்பட்டது. கட்டு மேல் கட்டு போடப்பட்டது.

கடைசியில் அவர் கட்டு போட்டு மீண்டும் பவுலிங் போட வந்தார். அதன்பின் ஓடி போய் பவுலிங் போட ஹர்திக் முயன்றார். ஆனால் அவரால் ஓட முடியவில்லை. இதனால் மீதம் இருந்த பந்துகளை கோலி போட்டார். அதோடு ஹர்திக் பாண்டியா உடனே மைதானத்தை விட்டு வெளியே சென்றார்.
( அடாவடி.. அசிங்கம்.. உலகக் கோப்பையில் தொடர்ந்து அத்துமீறும் இந்திய ரசிகர்கள்.. சிரிக்கும் உலகம்!)
ஹர்திக் பாண்டியா: இதை அனைத்தையும் அதிர்ச்சியோடு ரோஹித் பார்த்துக்கொண்டு இருந்தார். இதையடுத்து ஹர்திக் பாண்டியா தற்போது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். அவரின் காலில் சிகிச்சை செய்யப்பட்டு உள்ளது. அவருக்கு உடனே ஸ்கேன் எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது. அவரின் ஸ்கேன் முடிவுகள் வந்த பின் முடிவு எடுக்கப்படும். அவருக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதனால் அணியில் இருந்து சில போட்டிகளுக்கு ஹர்திக் பாண்டியா வெளியேற வாய்ப்புகள் உள்ளன. அடுத்த போட்டியில் அவர் ஆட மாட்டார் என்பது உறுதியாகி உள்ளது.
அதற்கு அடுத்த போட்டியில் இவருக்கு பதிலாக சூர்ய குமார் யாதவ் அல்லது அஸ்வின் ஆடும் வாய்ப்புகள் உள்ளன. ஷரத்துல் தாக்கூருக்கு பதிலாக ஷமி அணிக்குள் வரும் வாய்ப்புகள் உள்ளன என்றும் கூறப்படுகிறது.
கடிகள்: இது போக இன்னொரு பக்கம் சூர்யா குமார் யாதாவிற்கும் காயம் ஏற்பட்டு உள்ளது. அவருக்கு கையில் பேட்டிங் செய்யும் போது காயம் ஏற்பட்டது. இதனால் அவரும் அணிக்குள் வருவது சிக்கல் ஏற்பட்டு உள்ளது.

இதெல்லாம் போதாது என்று , இஷான் கிஷன் அவரது தலையின் பின்புறத்தில் தேனீயால் கடிக்கப்பட்டு உள்ளார். இஷான் கிஷன் சுமார் 20 நிமிடங்கள் பேட் செய்தார். இதை முடித்து ட்ரெஸ்ஸிங் ரூமுக்குத் திரும்பும்போது கிஷன் தலையின் பின்பகுதியில் அவருக்கு தேனீ கடித்து உள்ளது. சூர்யா குமார், இஷான் கிஷன் இருவரும் ஆடாத பட்சத்தில், அஷ்வின் 7-வது இடத்திலும், ரவீந்திர ஜடேஜா 6-வது இடத்திலும் இருக்க வேண்டிய கட்டாயம் இந்தியாவுக்கு ஏற்படலாம்.
இந்த கடி போதாது என்று ஏற்கனவே இந்திய அணியின் தொடக்க வீரர் கில் கொசு கடி காரணமாக டெங்கு பாதிப்பு ஏற்பட்டு ஆடாமல் போனது குறிப்பிடத்தக்கது. அடுத்தடுத்து வீரர்கள் காயம் காரணமாக இந்திய அணிக்கு பெரிய அழுத்த தற்போது ஏற்பட்டு உள்ளது.
-
இதெல்லாம் ரொம்ப ஓவர் விராட் கோலி.. அரைசதம் அடிக்க 37 பந்துகளா.. பில் சால்ட் அதிரடி வேஸ்ட்! -
குஷ்பு ஜிம்னாஸ்டிக் சாம்பியன்.. சுந்தர் சிக்கு படித்துப் புரிந்து கொள்ளும் அறிவு இல்லை.. பிடிஆர் -
தர்மபுரியில் மருமகள் சௌமியாவுக்கு எதிராக களமிறங்க போகும் மாமனார் ராமதாஸ்.. அன்புமணி ரியாக்ஷ்ன் -
ஜுவல்லரி கடைகளுக்கு விழுந்த அடி! ஒரு ரூபாயில் தங்கம்.. இளைஞர்களின் ஸ்மார்ட் மூவ்! உரிமையாளர்கள் ஷாக் -
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
பெட்ரோல் டூவீலர்களுக்கு மொத்தமாக தடை.. அரசு திட்டவட்டம்! ஏற்கனவே பைக் வைத்திருப்போர் என்ன செய்யணும்? -
இரவிலேயே பாய் விரித்து இடம்.. நெல்லையில் எல்கேஜி அட்மிஷனுக்காக விடிய விடிய காத்திருந்த பெற்றோர்கள் -
மணி பிளான்ட் இனி தேவையில்லை.. காந்தம் போல பணத்தை ஈர்க்கும் 'அந்த' ஒரு செடி! வீட்டில் எங்கே வைக்கலாம் -
6 மாதங்களில் அண்ணாமலைக்கு தமிழக முதல்வர் பதவி! இபிஎஸ் தலையில் இடியை இறக்கிய திருமாவளவன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ்: மயில் கர்ப்பத்தை பற்றி பழனி சொன்ன விஷயம்! கோபத்தில் சரவணன்.. கதிர் செய்த நல்ல விஷயம் -
Gold: பசிபிக் கடலுக்கடியில் குவிந்து கிடக்கும் ”தங்கம்” கண்டுபிடித்த விஞ்ஞானிகள்.. எம்மாடியோவ்!












Click it and Unblock the Notifications