அடாவடி.. அசிங்கம்.. உலகக் கோப்பையில் தொடர்ந்து அத்துமீறும் இந்திய ரசிகர்கள்.. சிரிக்கும் உலகம்!
சென்னை; 2023 உலகக் கோப்பை தொடரில் இந்திய ரசிகர்கள் தொடர்ந்து அத்துமீறி வருவதாக புகார்கள் வைக்கப்படுகின்றன. இந்திய ரசிகர்கள் நடந்து கொள்ளும் விதம் அருவருப்பாக, அசிங்கமாக இருப்பதாக உலக கிரிக்கெட் ரசிகர்கள் விமர்சனம் வைக்கின்றனர்.
இந்தியாவில் உலகக் கோப்பை 2023 தொடர் போட்டிகள் நடந்து வருகின்றன. இந்த தொடரில் இந்திய ரசிகர்கள் தொடர்ந்து அத்துமீறி பேசுவதாக, அத்துமீறி விமர்சனங்களை வைப்பதாக, கோஷங்களை எழுப்புவதாக புகார்கள் வைக்கப்படுகின்றன. முன்னதாக இந்தியா பாகிஸ்தான் அணியில் வீரர்கள் இந்திய ரசிகர்களால் அவமானப்படுத்தப்பட்டதாக, கிண்டல் செய்யப்பட்டதாக புகார்கள் வைக்கப்படுகின்றன. பின்வரும் சம்பவங்கள் நேற்று மைதானாத்தில் நடந்தது.
( கோலி சதத்தால் இந்தியாவிற்கு வந்த பிரச்சனை! எதிர்கால கிரிக்கெட் போட்டிகளுக்கும் சிக்கல்! ஏன் தெரியுமா)
ஜெய் ஸ்ரீராம்: இதில் டாஸ் வென்று பாபர் ஆஸம் பேசிய தொடங்கிய போதே அவரை கடுமையாக பேச விடாமல் கோஷம் எழுப்பி இந்திய ரசிகர்கள் தொந்தரவு செய்தனர். அதேபோல் பாகிஸ்தான் வீரர்கள் பீல்டிங் செய்யும் போதும் தொடர்ந்தும் ஊ ஊ ஊ என்று கோஷம் எழுப்பி அவர்களை பீல்டிங் செய்வதில் இருந்து தொந்தரவு செய்தனர். இதெல்லாம் போக.. இன்னொரு பக்கம் பாகிஸ்தான் வீரர்கள் பேட்டிங் செய்துவிட்டு திரும்பும் போது அவர்களை நோக்கி ரசிகர்கள் ஜெய் ஸ்ரீ ராம் என்று கோஷம் எழுப்பினர்.

முக்கியமாக பாபர் ஆஸம் மற்றும் ரிஸ்வான் ஆகியோர் அவுட் ஆகி திரும்பும் போது அவர்களை நோக்கி ஜெய் ஸ்ரீ ராம் என்று கோஷம் எழுப்பப்பட்டது. இந்த கோஷம் எழுப்பப்பட்ட வீடியோக்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பாகிஸ்தான் வீரர்களை அவமதிக்கும் விதமாக, அவர்களை வெறுப்பேற்றும் விதமாக அஹமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் இருந்த ரசிகர்கள் நடந்து கொண்ட சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மோசமான செயல்: இந்த நிலையில் இந்தியா - வங்கதேசம் இடையிலான மேட்ச் நடந்தது. இதில் வங்கதேசம் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. இதில் முதலில் பேட்டிங் இறங்கிய வங்கதேசம் நிதானமாக ஆடி கொஞ்சம் கொஞ்சமாக பார்ட்னர்ஷிப் அமைத்தது.. விக்கெட்டை இழக்க கூடாது என்பதற்காக நிதானமாக வங்கதேசம் அணி ஆடிக்கொண்டு இருந்தது
தொடக்கவீரர் டான்சிம் ஹாசன் 51, லிட்டன் தாஸ் 66 ரன்கள் எடுத்தனர். இவர்கள் இருவரும் விக்கெட்டும் போன பின் வங்கதேசத்தின் மிடில் ஆர்டர் வரிசையாக விக்கெட்டுகளை இழந்தது. அதன்பின் முஸ்பிக்கர் ரஹீம் 38, முகமதுல்லா 46 ரன்கள் எடுத்தனர். இதன் மூலம் வங்கதேசம் அணி 256 ரன்கள் எடுத்தது, அதன்பின் கோலி சதம் காரணமாக இந்திய அணி எளிதாக வென்றது.

இந்த போட்டியில் வங்கதேச கிரிக்கெட் ரசிகர் சோயிப் அலியின் புலி சின்னம் அசிங்கப்படுத்தப்பட்டது. அவரின் புலியை வாங்கி அதை இந்திய ரசிகர்கள் தூக்கி எறிந்து அதை கிழித்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவர் ஆசையாக வைத்து இருந்த புலியை பிடுங்கி இந்திய ரசிகர்கள் தூக்கி வீசியது பரபரப்பை ஏற்படுத்தியது.
மோசம்; அதேபோல் வங்கதேசம் ரசிகர் ஒருவர் பேட்டி கொடுத்துக்கொண்டு இருந்த போது அதற்கு அனுமதி அளிக்காமல் இந்திய ரசிகர்கள் கோலி கோலி என்று கோஷம் எழுப்பினார்கள். அவர்களின் இந்த செயல் கடுமையான விமர்சனங்களை பெற்றுள்ளது. உலகக் கோப்பை தொடரில் 2011ல் பாதி இந்தியாவிலும் நடந்தது. ஆனால் அப்போதெல்லாம் இப்படி நடக்கவில்லை. இந்த முறை ரசிகர்கள் தொடர்ந்து அத்துமீறி வருகின்றனர். இந்திய ரசிகர்கள் நடந்து கொள்ளும் விதம் அருவருப்பாக, அசிங்கமாக இருப்பதாக உலக கிரிக்கெட் ரசிகர்கள் விமர்சனம் வைக்கின்றனர்.












Click it and Unblock the Notifications