கோலி சதத்தால் இந்தியாவிற்கு வந்த பிரச்சனை! எதிர்கால கிரிக்கெட் போட்டிகளுக்கும் சிக்கல்! ஏன் தெரியுமா
சென்னை: இந்தியா - வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான போட்டியில் நேற்று கடைசி நொடியில் விராட் கோலி செஞ்சுரி அடித்தார். அவர் செஞ்சுரி அடித்த நிலையில் வேறு ஒரு விஷயம் பெரிய சர்ச்சையாகி உள்ளது.
நேற்று வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் இந்திய வீரர் விராட் கோலி பேட்டிங் செய்த போது வங்கதேச பவுலர் நஸூம் வீசிய பணத்திற்கு வைடு கொடுக்கப்படாதது விமர்சனங்களை சந்தித்துள்ளது.
இந்த போட்டியில் நேற்று 97 ரன்கள் இருந்த போது நஸூம் வைட் பந்து வீசினார். அவரை சதம் அடிக்க விடக்கூடாது என்பதற்காக வைட் பந்து வீசினார். இது பெரிய அளவில் சர்ச்சையானது. விராட் கோலி கூட கோபமாக நாஸூமை பார்த்தார்.

என்ன நடந்தது?: நேற்று விராட் கோலி 74 ரன்கள் இருந்த போது இந்தியா வெற்றிபெற 26 ரன்கள் தேவைப்பட்டது. கோலி எல்லா பந்துகளை எதிர்கொண்டு ரன் அடித்து சரியாக 103 ரன்கள் எடுத்தார். நேற்று அப்படிப்பட்ட நிலையில்தான் நஸூம் வைட் பந்தை வீசினார்., ஆனால் நடுவர் கெட்டில்பெர்க் இந்த பந்திற்கு வைட் கொடுக்கவில்லை.
அப்படியே முறைத்து பார்த்துவிட்டு அவர் வைட் கொடுக்காமல் சென்றுவிட்டார். ஆனால் அந்த பந்தில் வைட் கொடுத்து இருந்தாலும் விராட் கோலி ரன் எடுத்து இருப்பார். அவர் எப்படி இருந்தாலும் கடைசியில் சதம் அடித்த போது சிக்ஸ் அடித்தார். அதனால் இங்கே வைட் கொடுக்கப்பட்டு இருந்தாலும் அதனால் விராட் கோலிக்கு எந்த பாதிப்பும் ஏற்பட்டு இருக்காது.
( கோலி சதத்தை நெருங்கிய போது! வைட் கொடுக்கப்படாதது ஏன்? கெட்டில்பெர்க் முடிவிற்கு பின் உள்ள ஐசிசி விதி )
எதிர்காலத்தில் சிக்கல்: புதிய விதிப்படி இந்த வைட் விதி தவறு கிடையாது. அதாவது நடுவர் வைட் கொடுக்காமல் போனது தவறு கிடையாது என்கிறார்கள். ஆனாலும் பின்வரும் விஷயங்கள் இந்திய அணிக்கும், எதிர்கால கிரிக்கெட் போட்டிகளுக்கும் சிக்கலாக மாறும் என்று கிரிக்கெட் வல்லுனர்கள் கணித்து உள்ளனர்.
1. விதிப்படி இந்த வைட் பந்து கொடுக்கப்பட்டு இருக்கலாம் என்று கூறப்பட்டாலும் இன்னும் வைட் சரியானதுதானா என்று உறுதி செய்யப்படவில்லை (கோலி நகர்ந்தாரா இல்லையா என்பது உறுதியாகவில்லை). அப்படி இருக்கும் போது இந்த வைட் கொடுக்கப்படாதது சர்ச்சையாகி உள்ளது.

2. இதேபோல் வேறு போட்டியில் கடைசி பந்தில் 1 ரன் அடிக்க வேண்டிய என்ற நிலையில் வைட் கொடுக்காமல் போனால் என்ன ஆகும்? பந்து வைட் இல்லை என்று நடுவர்கள் மறுத்தால் அணியின் தோல்விக்கே அது காரணம் ஆகுமே.
3. அதேபோல் ஒரு பெரிய வீரர் ஆடுகிறார் என்பதற்காக.. நடுவர்கள் நடுநிலையற்ற முடிவை எடுத்தால் அது எதிர்காலத்தில் மற்ற பெரிய வீரர்களுக்கும் சாதகமாக போகலாம். இந்தியாவிற்கு எதிராக பாபர் ஆடும் போது வேறு நடுவர் இப்படி செய்தால் அதை இந்தியா ஏற்றுக்கொள்ளுமா?
4. இந்திய அணிக்காக ஆடாமல் இன்னொரு பக்கம் கோலி செஞ்சுரி அடிக்க ஆடி உள்ளார். இந்த தொடரில் ரன் ரேட் முக்கியம். கடைசி கட்டத்தில் ரன் ரேட் அவசியம் ஆகும் போது நேற்று போட்டியில் ஓவர்களை வேஸ்ட் செய்தது கூட இந்திய அணிக்கு பிரச்சனையாக மாறும் வாய்ப்புகள் உள்ளன.












Click it and Unblock the Notifications