Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கோலி சதத்தை நெருங்கிய போது! வைட் கொடுக்கப்படாதது ஏன்? கெட்டில்பெர்க் முடிவிற்கு பின் உள்ள ஐசிசி விதி

Subscribe to Oneindia Tamil

சென்னை: நேற்று வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் இந்திய வீரர் கோலி பேட்டிங் செய்த போது வங்கதேச பவுலர் நஸூம் வீசிய பந்திற்கு வைடு கொடுக்கப்படாதது பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியா வங்கதேசம் இடையிலான போட்டியில் நேற்று 97 ரன்கள் இருந்த போது நஸூம் வைட் பந்து வீசினார். அவரை சதம் அடிக்க விடக்கூடாது என்பதற்காக வைட் பந்து வீசினார். இது பெரிய அளவில் சர்ச்சையானது. விராட் கோலி கூட கோபமாக நாஸூமை பார்த்தார்.

What does ICC rule say and Why did Umpire Richard Kettleborough not give wide to Kohli?

விவாதம்: ஆனால் நடுவர் கெட்டில்பெர்க் இந்த பந்திற்கு வைட் கொடுக்கவில்லை. அப்படியே முறைத்து பார்த்துவிட்டு அவர் வைட் கொடுக்காமல் சென்றுவிட்டார். ஆனால் அந்த பந்தில் வைட் கொடுத்து இருந்தாலும் கோலி ரன் எடுத்து இருப்பார். அவர் எப்படி இருந்தாலும் கடைசியில் சதம் அடித்த போது சிக்ஸ் அடித்தார். அதனால் இங்கே வைட் கொடுக்கப்பட்டு இருந்தாலும் அதனால் கோலிக்கு எந்த பாதிப்பும் ஏற்பட்டு இருக்காது.

விதி என்ன?: 2022க்கு முன் இருந்த வைட் ரூல் படி ஒரு பேட்ஸ்மேன் லெக் சைடில் பந்து போனால் வைட். பவுலர் பந்து வீச வரும் போது பேட்ஸ்மேன் லெக் சைட் பக்கம் நின்றுவிட்டு அதன்பின் பவுலிங் போடும் நொடியில் ஆப் சைடு பக்கம் நகர்ந்து பந்தை வேண்டும் என்றே மிஸ் செய்தால் அதுவும் வைட்தான். 22.1, 22.2 இரண்டும் இதைத்தான் சொன்னது.

ஆனால் கடந்த வருடம் இந்த விதியில் மாற்றம் செய்யப்பட்டது. அதன்படி பேட்ஸ்மேன் சாதாரணமாக ஒரே இடத்தில் நின்று.. நகராமல் இருக்கிறார்.. அவரின் லெக் சைடில் பந்து செல்கிறது என்றால் அது வைட் . அதே சமயம் அவர் லெக் பக்கம் நின்றுவிட்டு பந்து போடும் நொடியில் ஆப் பக்கம் சென்றால்.. அப்போது பந்து லெக் சைடில் சென்றால் அது வைடு கிடையாது. பேட்ஸ்மேன்கள் அதிகம் நகர்வதால் இந்த விதி கொண்டு வரப்பட்டது.

மாற்றப்பட்ட விதி: சரியாக சொல்ல வேண்டும் என்றால் பவுலர் ஓட தொடங்கிய போது பேட்ஸ்மேன் எந்த இடத்தில் இருக்கிறார்.. அதன்பின் ஆப் சைடு திசையில் அவர் நகர்கிறாரா .. வேண்டுமென்றே வைட் உருவாக்க பார்க்கிறாரா என்பது கணக்கில் கொள்ளப்பட வேண்டும்.

What does ICC rule say and Why did Umpire Richard Kettleborough not give wide to Kohli?

அந்த வகையில் பார்த்தால் நேற்று நஸூம் பவுலிங் செய்த போது கோலி முதலில் லெக் சைடு பக்கம் காலை வைத்துக்கொண்டு அதன்பின் பவுலிங் போட்டதும் காலை ஆப் சைடு பக்கம் நகர்த்துவார். அதன் படி பார்த்தல் புதிய விதி அடிப்படையில்.. அது வைடு என்று கணக்கில் கொள்ளப்படாது. வேண்டும் என்றே கோலி காலை எடுத்து வைடு உருவாக்க முயல்வதால் அது வைடு கிடையாது என்றே வரும்.

அதனால் நேற்று நடுவர் வைடு கொடுக்காமல் போனது சரிதான். அதே ஒருவேளை அவர் வைடு கொடுத்து இருந்தாலும் கடைசி பந்தில் கோலி சிக்ஸ் அடித்து வென்றதால் அவர் என்ன ஆகி இருந்தாலும் நேற்று செஞ்சுரி அடித்து இருப்பார் என்பது உறுதியாகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+