இரக்கமே இன்றி அடித்த இந்தியா! களத்தில் கதறிய இலங்கை! தோற்றது எப்படி? மேட்சில் வீழ்ந்த "அந்த" இடம்
சென்னை; இலங்கைக்கு எதிரான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி எளிதாக வென்றுள்ளது.
இந்தியா இலங்கை இடையிலான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது. இதில் இந்திய அணியில் வீரர்கள் மாற்றம் இன்றி ஆடி வருகின்றனர். இந்திய அணியில் ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மான் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல் (வி.கே.), சூர்யகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா, குல்தீப் யாதவ், முகமது சிராஜ் ஆகியோர் ஆடி வருகின்றனர்.
இன்னொரு பக்கம் இலங்கை அணியில் பதும் நிஸ்ஸங்க, திமுத் கருணாரத்ன, குசல் மெண்டிஸ், சதீர சமரவிக்ரம, சரித் அசலங்கா, ஏஞ்சலோ மேத்யூஸ், துஷான் ஹேமந்த, மஹீஷ் தீக்ஷன, கசுன் ராஜித, துஷ்மந்த சமீர, டில்ஷான் மதுஷங்க ஆகியோர் ஆடி வருகின்றனர். இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பவுலிங் தேர்வு செய்து ஆடி வருகிறது.

இந்தியா பேட்டிங்: கடந்த இரண்டு போட்டிகளாக சிறப்பாக ஆடிய ரோஹித்சர்மா வெறும் 2 பந்தில் 4 ரன்கள் மட்டுமே எடுத்து அவுட் ஆனார். இதையடுத்து இறங்கிய கோலி, ரோஹித் சர்மா இருவரும் தொடக்கத்தில் இருந்தே அதிரடியாக ஆடினார்.
தேவையான நேரங்களில் பவுண்டரி, சிக்ஸ் என்று மாறி மாறி அடித்தனர். ஸ்கொயர் லெக்கில் தொடர்ந்து கில் அதிரடியாக ஆடினார். அதேபோல் இந்த போட்டியிலும் கவர் டிரைவ் மூலம் கோலி இலங்கை அணிக்கு பிரஷர் போட்டார்.
( மேட்சுக்கு நடுவே.. அப்படியே ஸ்டன் ஆகி.. சிலையாக நின்ற கோலி.. மிரண்ட மைதானம்.. என்ன நடந்தது?)
கோலி அதிரடி: முக்கியமாக கில் அதிரடியாக ஆடி தொடக்கத்தில் இருந்தே 92 பந்தில் 92 ரன்கள் எடுத்தார். 11 பவுண்டரிகளை அடித்து இலங்கை பவுலர்களை இவர் திணறடித்தார் . அதேபோல் 2 சிக்ஸர்களை அடித்து நம்பிக்கை அளித்தார். ஆனால் தேவையில்லாமல் அப்பர் கட் அடிக்க முயன்று தில்ஷன் பந்தில் அவுட் ஆனார். இன்னொரு பக்கம் கோலி அதிரடியாக ஆடி இதேபோல் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். 94 பந்துகள் பிடித்த அவர் 88 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். தில்ஷன் பந்தில் இவரும் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.
அதன்பின் இறங்கிய ஷ்ரேயாஸ் ஐயரும் 82 ரன்கள் வரை அதிரடியாக ஆடினார். இந்த சீசனில் தொடக்கத்தில் இருந்து சரியாக ஆடாத ஷ்ரேயாஸ் ஐயர் இன்று போட்டியில் பார்மிற்கு திரும்பினார் . 56 பந்தில் 82 ரன்கள் எடுத்தார். முக்கியமாக இன்று ஷார்ட் பந்துகளில் அதிரடியாக ஆடினார். இன்னொரு பக்கம் ஜடேஜா 24 பந்தில் 35 ரன்கள் எடுத்து கடைசி வரை நின்றார். இதனால் 300 ரன்கள் எடுக்க வேண்டிய இந்திய அணி 357-8 ரன்கள் எடுத்தது.

இலங்கை: இதன்பின் இலங்கை அணி வந்த வேகத்தில் விக்கெட்டுகளை வரிசையாக இழந்தது. தொடக்க வீரர்கள் பதும் நிஸ்ஸங்க, திமுத் கருணாரத்ன, அடுத்தடுத்து டக் அவுட் ஆனார்கள். பும்ரா, சிராஜ் ஓவர்களில் அடுத்தடுத்து அவுட் ஆனார்கள்.
அதன்பின் சதீர சமரவிக்ரம, மீண்டும் டக் அவுட் ஆக, குசல் மெண்டிஸ் 1 ரன்னுக்கு அவுட் ஆனார். அதை தொடர்ந்து சரித் அசலங்காவும் டக் அவுட் ஆனார். டாப் ஆர்டரில் 5 பேரில் 3 பேரின் விக்கெட்டை சிராஜ்தான் எடுத்தார். அவரின் விக்கெட் பவுலிங் காரணமாகவே இந்திய அணியின் வெற்றி உறுதி ஆனது. ஆனால் அதன்பின் சிராஜ் மட்டுமின்றி ஷமியும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை வரிசையாக எடுத்தார்.

கடந்த 2 போட்டிகளில் 5 விக்கெட் ஹவுல் 1 , 4 விக்கெட் ஹவுல் 1 எடுத்தவர் இன்று மீண்டும் 5 விக்கெட் எடுத்து அசத்தினார். மிடில் ஆர்டரில் ஆஞ்சலோ மேத்யூஸ் மட்டும் 12 ரன்கள் எடுக்க.. மற்ற வீரர்கள் வரிசையாக விக்கெட்டை இழக்க இந்தியா எளிதாக இன்று வென்றது.கடைசியில் ஜடேஜா ஓவரில் விக்கெட்டி விழ 55 ரன்களுக்கு இலங்கை ஆல் அவுட் ஆனது.
இந்தியா முன்னேற்றம்: கடந்த சில போட்டிகளாக ஆட்டம் விறுவிறுப்பிற்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டு இருக்கிறது. 2023 உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி அடுத்தடுத்து வெற்றிகளை பதிவு செய்து வருகிறது. முதலில் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான மேட்சில் இந்தியா வென்றது. அடுத்து ஆப்கானிஸ்தான் அதை தொடர்ந்து பாகிஸ்தான் கடைசியாக வங்கதேசம் என்று அடுத்தடுத்து வரிசையாக 4 போட்டிகளை இந்தியா வென்றது.
அதன்பின் நியூசிலாந்து, இங்கிலாந்து அணிக்கு எதிராக நடந்த போட்டியிலும் இந்திய வென்றுள்ளது. இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை போட்டி தொடக்கத்தில் இருந்து விறுவிறுப்பாக நடந்தது. இன்று இலங்கை அணிக்கு எதிராகவும் இந்தியா வென்றது. இதன் மூலம் 6 போட்டிகளில் வரிசையாக இந்திய அணி வென்றுள்ளது. இந்த சீசனில் ஒரு போட்டியில் கூட தோல்வி அடையாத ஒரே அணி இந்திய அணிதான்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications