நீங்க போய் இறங்குங்க.. குளித்துக்கொண்டு இருந்த ஜெமிமாவிடம் சொன்ன கோச்.. இந்தியா வென்றது எப்படி?
மும்பை: மகளிர் உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்திய பிறகு ஜெமிமா ரோட்ரிகஸ் உணர்ச்சிவசப்பட்டார். நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 339 ரன்கள் என்ற இலக்கை இந்தியா சேசிங் செய்து உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
ஜெமிமா ரோட்ரிகஸ் தனது கிரிக்கெட் வரலாற்றில் மிக முக்கியமான ஆட்டத்தை நேற்று ஆடினார். அவரது கிரிக்கெட் வாழ்க்கையின் மறக்க முடியாத ஆட்டங்களில் ஒன்றாக இது அமைந்தது. நவி மும்பையில் உள்ள DY பாட்டீல் மைதானத்தில் நடந்த அரையிறுதிப் போட்டியில், ஆஸ்திரேலியா 338 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

ஜெமிமா ரோட்ரிகஸ் அசத்தல்
இந்தியா 48.3 ஓவர்களில் 341 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஜெமிமா 134 பந்துகளில் 127 ரன்கள் (14 பவுண்டரிகள்) எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். கேப்டன் ஹர்மன்பிரீத் கௌருடன் (89 ரன்கள்) இணைந்து 167 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார்.
ஜெமிமா தனது முதல் உலகக் கோப்பை சதத்தை 115 பந்துகளில் அடித்தார், இதில் 10 பவுண்டரிகள் அடங்கும். முதல் மூன்று ஆட்டங்களில் சரியாக ஆடாமல் ஒரு போட்டியில் நீக்கப்பட்ட ஒரு வீராங்கனைக்கு இது ஒரு சிறப்பான இன்னிங்ஸ் ஆகும். நடப்பு சாம்பியன்களுக்கு எதிராக உலகக் கோப்பையின் அரையிறுதிப் போட்டியில் சதம் அடித்தது அவரது திறமையைப் பறைசாற்றியது.
ஜெமிமா ரோட்ரிகஸ் சொன்ன சீக்ரெட்
வெற்றிக்குப் பிறகு ஜெமிமா பேசுகையில், "நான் இயேசுவுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன், நான் இதை தனியாகச் செய்யவில்லை. எனது அம்மா, அப்பா, பயிற்சியாளர் மற்றும் என்மீது நம்பிக்கை வைத்த அனைவருக்கும் நன்றி. கடந்த மாதம் மிகவும் கடினமாக இருந்தது, இது ஒரு கனவு போல் உள்ளது, இன்னும் என்னால் நம்ப முடியவில்லை," என்றார்.

3வது இடத்தில் பேட்டிங் செய்தது பற்றி கேட்டபோது, "நான் 3வது இடத்தில் பேட்டிங் செய்யப் போகிறேன் என்று எனக்குத் தெரியாது. நான் குளித்துக் கொண்டிருந்தேன், நான் எப்போது ஆட வேண்டுமோ அப்போது சொல்லுங்க.. அப்போது எனக்குத் தெரியப்படுத்தூண்களென்று சொன்னேன். களத்திற்குச் செல்வதற்கு ஐந்து நிமிடங்களுக்கு முன்புதான் நான் 3வது இடத்தில் பேட்டிங் செய்யப் போகிறேன் என்று சொன்னார்கள்.. திடீரென வந்து நீங்கள் களமிறங்குங்கள் என்றார்கள்.. அது எனக்கு சாதகமாக மாறி உள்ளது" என்று ஜெமிமா கூறினார்.
ஜெமிமா ரோட்ரிகஸ்
நான் ஆட்டம் இப்படி செல்லும் என்று நினைக்கவில்லை. 3வது இடத்தில் இறங்கியது ஆட்டத்தை மாற்றி உள்ளது. இது என்னைப் பற்றியது அல்ல-இந்த போட்டியை இந்தியாவுக்காக வெல்ல வேண்டும் என்று நினைத்தேன். முக்கியமான போட்டிகளில் தோற்றிருந்தோம். இன்று எனது அரை சதம் அல்லது சதம் முக்கியம் இல்லை, இந்தியாவை வெற்றி பெற வைப்பதே முக்கியம்.
இதுவரை என் வாழ்க்கையில் நடந்த அனைத்தும் இதற்கான ஒரு ஏற்பாடுதான். மோசமான பல விஷயங்கள் தொடர்ச்சியாக நடந்தன, என்னால் எதையும் கட்டுப்படுத்த முடியவில்லை. இந்தச் சுற்றுப்பயணம் முழுவதும் நான் கிட்டத்தட்ட தினமும் அழுதுகொண்டிருந்தேன். மனரீதியாக நான் நன்றாக இல்லை, பதட்டத்துடன் இருந்தேன்..
கடவுள் எல்லாவற்றையும் கவனித்துக்கொண்டார் என்பதை நான் அறிந்திருந்தேன். முதலில், நான் விளையாடிக் கொண்டிருந்தேன், என்னுடனே பேசிக்கொண்டிருந்தேன். முடிவில், நான் பைபிளில் இருந்து ஒரு வசனத்தை மேற்கோள் காட்டினேன் - அசைக்காமல் நிற்க வேண்டும், கடவுள் எனக்காகப் போராடுவார் என்று. நான் அங்கு நின்றேன், அவர் எனக்காகப் போராடினார்," என்றார்.
இந்தியா வென்றது எப்படி?
அதிகபட்ச ரன் சேஸிங்
டாக்டர் டி.ஒய். பாட்டீல் ஸ்போர்ட்ஸ் அகாடமியில் வியாழக்கிழமை நடந்த இப்போட்டியில், ஆஸ்திரேலியா நிர்ணயித்த 338 ரன்கள் என்ற இலக்கை இந்திய மகளிர் அணி, 9 பந்துகள் மீதம் இருக்கும் நிலையில் எட்டியது. உலகக் கோப்பை வரலாற்றில் இதுவே அதிகபட்ச ரன் சேஸிங்காகப் பதிவாகியுள்ளது. இறுதிப் போட்டியில் இந்திய அணி தென் ஆப்பிரிக்காவை எதிர்கொள்ளவுள்ளது. இந்த ஆட்டம் அதே மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.
339 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணிக்கு, ஷஃபாலி வர்மா (10 ரன்கள்) சீக்கிரமே அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். கிம் கார்த் வீசிய பந்தில் வெளியேறிய ஷஃபாலியைத் தொடர்ந்து, 13/1 என்ற நிலையில் ஜெமிமா ரோட்ரிக்ஸ் களமிறங்கினார்.
இந்திய அணி வெற்றி
ஜெமிமா ரோட்ரிக்ஸுடன் இணைந்த ஸ்மிருதி மந்தனா, அணியின் ஸ்கோரை வேகமாக உயர்த்தினார். எனினும், 24 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஸ்மிருதி மந்தனா விக்கெட்டை கார்த் கைப்பற்றினார். இதனால், 9.2 ஓவர்களில் 59/2 என்ற நிலைக்கு இந்தியா தள்ளப்பட்டது. கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் கவனமாக ஆடினார். மறுமுனையில் ஜெமிமா ரோட்ரிக்ஸ் அதிரடியாக ஆடி ரன்களைக் குவித்தார். இருவரும் இணைந்து 53 பந்துகளில் 50 ரன்கள் சேர்த்தனர். ஜெமிமா 57 பந்துகளில் 8 பவுண்டரிகளுடன் தனது அரை சதத்தைப் பூர்த்தி செய்தார்.

ஜெமிமா ரோட்ரிக்ஸ்
ஹர்மன்பிரீத் தனது பொறுப்பான ஆட்டத்தைத் தொடர்ந்தார். இந்தப் பார்ட்னர்ஷிப் 99 பந்துகளில் 100 ரன்களையும், 140 பந்துகளில் 150 ரன்களையும் கடந்தது. ஹர்மன்பிரீத் தனது 65 பந்துகளில் அரை சதம் அடித்தார், இது உலகக் கோப்பை நாக் அவுட் போட்டிகளில் அவரது மூன்றாவது அரை சதமாகும். 31.2 ஓவர்களில் இந்திய அணி 200 ரன்களை எட்டியது.
ஆஸ்திரேலிய அணியின் ஃபீல்டிங்கில் ஏற்பட்ட தவறுகளும், நெருக்கடியும் அதிகரிக்கவே, அன்னபெல் சதர்லேண்ட் வீசிய பந்தில் ஹர்மன்பிரீத் கவுர் (89 ரன்கள்) ஆட்டமிழந்தார். 35.3 ஓவர்களில் இந்திய அணி 226/3 என்ற நிலையில் இருந்தது. ஹர்மன்பிரீத் - ஜெமிமா ஜோடி 167 ரன்கள் சேர்த்து புதிய உலகக் கோப்பை நாக் அவுட் சாதனை படைத்தது.
-
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications