வாள் தூக்கி நின்னான் பாரு! நியூசி பவுலிங்கை மிரட்டிய கோலி.. இந்தியா வென்றது எப்படி? சூட்சமமே இதுதான்
சென்னை: இன்று நியூசிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியாவின் மிடில் ஆர்டர் பபெரிதாக நின்று ஆடவில்லை என்றாலும் கோலி கடைசி வரை அதிரடியாக ஆடி இந்திய அணியை வெற்றிபெற வைத்தார்.
2023 உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி அடுத்தடுத்து வெற்றிகளை பதிவு செய்து வருகிறது. முதலில் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான மேட்சில் இந்தியா வென்றது. அடுத்து ஆப்கானிஸ்தான் அதை தொடர்ந்து பாகிஸ்தான் கடைசியாக வங்கதேசம் என்று அடுத்தடுத்து வரிசையாக 4 போட்டிகளை இந்தியா வென்றது.
இந்திய ஆட்டம்: இந்த நிலையில் இன்று நியூசிலாந்து அணிக்கு எதிராக நடந்த போட்டியிலும் இந்திய வென்றுள்ளது. இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை போட்டி தொடக்கத்தில் இருந்து விறுவிறுப்பாக நடந்தது.

இன்று ஆடும் இந்திய அணியில் ஷரத்துல் தாக்கூர் நீக்கப்பட்டு உள்ளார். அவருக்கு பதிலாக சூர்யா குமார் யாதவ் அணிக்குள் வந்துள்ளார். அதேபோல் ஹர்திக் பாண்டியா காயம் காரணமாக ஆடவில்லை.அவருக்கு பதிலாக ஷமி அணிக்குள் வந்துள்ளார். இந்திய அணியில், ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல் (வி.கே), சூர்யகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, முகமது சிராஜ் ஆகியோர் இன்று ஆடினார்கள்.
( கொஞ்சம் மிஸ்ஸான கை கால் உடைஞ்சிடும்.. நடுங்கிய கால்கள்.. அச்சத்தில் இந்திய வீரர்கள்! கவனிச்சீங்களா?)
டெவோன் கான்வே, வில் யங், ரச்சின் ரவீந்திரா, டேரில் மிட்செல், டாம் லாதம் (சி & டபிள்யூ), க்ளென் பிலிப்ஸ், மார்க் சாப்மேன், மிட்செல் சான்ட்னர், மாட் ஹென்றி, லாக்கி பெர்குசன், டிரெண்ட் போல்ட் ஆகியோர் நியூசிலாந்து அணியில் மாற்றம் இன்று ஆடினார்கள்.
தொடக்கம் சூப்பர் ஆனால் மிடில் ஆர்டர்: இன்று 19 ரன்களுக்கே இரண்டு விக்கெட்டுகளை நியூசிலாந்து அணி இழந்தது. ஆனால் அதன்பின் இந்திய அணி அடுத்தடுத்து கேட்சுகளை விட்டதால் நியூசிலாந்து அணி விக்கெட்டுகளை இழக்காமல் நிதானமாக ஆடியது. 20+ ரன்கள் இருந்த போது ரவீந்திர ராச்சின் அடித்த பந்தை எளிதாக கைக்கும் வந்தும் கூட ரவீந்திர ஜடேஜா மிஸ் செய்தார். இந்த கேட்ச் மிஸ் காரணமாக நியூசிலாந்து அணி சரிவில் இருந்து மீண்டு 179 ரன்கள் வரை அடித்தது.
முக்கியமாக ராச்சின் 75 ரன்கள் வரை அடித்தார். அதேபோல் இன்னொரு பக்கம் டெர்லி மிட்சல் 130 ரன்கள் வரை அடித்து இந்திய அணிக்கு பிரஷர் கொடுத்தார்.

பீல்டிங் மோசம்.. ஆனால் பவுலிங்: இந்திய அணி வீரர்கள் இன்று மோசமாக பீல்டிங் செய்ய.. மைதானத்தின் அவுட் பீல்ட் ஒரு காரணம் ஆகும். ஆனால் அதன்பின் இந்திய பவுலிங் சரிவில் இருந்து மீண்டு கடைசி 15 ஓவர்களை மிக சிறப்பாக வீசியது. முக்கியமாக கடைசி கட்டத்தில் ஷமி தொடர்ந்து பிரஷர் கொடுத்து.. அபரா பவுலிங் மூலம் 4 விக்கெட்டுகளை கடைசி ஓவர்களில் எடுத்தார். இந்த மேட்சில் மட்டும் மொத்தம் 5 விக்கெட்டுகளை எடுத்தார்.
ஷமி ஓவர்கள்தான் கடைசி கட்டத்தில் ஆட்டத்தை இந்திய அணி நோக்கி திருப்பியது. இந்திய அணியின் வெற்றிக்கு ஷமி கடைசி கட்டத்தில் மேட்சை மாற்றியது மிகப்பெரிய காரணம். முக்கியமாக 300+ ரன்கள் எடுக்க வேண்டிய நிலையில்.. இருந்து நியூசிலாந்து அணியை பிடித்து இழுத்து ஷமி 273 ரன்களுக்கு நியூஸிலாந்து அணியை சுருட்டினார்.
இந்தியா பேட்டிங்: இதையடுத்து இறங்கிய இந்திய அணி தொடக்கத்தில் இருந்தே அதிரடியாக ஆடியது. இந்த மேட்சிலும் ரோஹித் சர்மா சிக்ஸ், பவுண்டரி என்று ஆட்டத்தை தொடங்கினார். 4 சிக்ஸ் , 4 பவுண்டரி என்று அதிரடியாக தொடக்கம் கொடுத்தவர் 46 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். அதிகம் எதிர்பார்க்கப்பட்ட கில் 5 பவுண்டரி அடித்தும் 31 பந்தில் 26 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.

மிடில் ஆர்டரில் ஷ்ரேயாஸ் ஐயர் 33 ரன்கள் எடுக்க.. இன்னொரு பக்கம் கே எல் ராகுல் 27 ரன்கள் எடுத்து அவுட்டானார். சூர்யா குமார் யாதவ் 2 ரன்களுக்கு ரன் அவுட் ஆக... கோலி மட்டும் விடாமல் அதிரடி காட்டினார். 49வது ஒருநாள் சதத்தை நோக்கி அதிரடி காட்டிய கோலி நியூசிலாந்து பேட்ஸ்மேன்களை புரட்டி எடுத்தார். தேவையான நேரங்களில் சிக்ஸ், பவுண்டரியே என்று ஸ்மார்ட்டாக ஆடினார் கோலி. இன்னொரு பக்கம் ஜடேஜா தொடக்கத்தில் மெதுவாக ஆடி அதன்பின் வேகம் எடுத்து சிக்ஸ், பவுண்டரி என்று ஆடினார்.
இவர்கள் 50 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை கடந்து இந்திய அணியை கடைசிவரை கொண்டு சென்றனர். ஆனால் கடைசியில் கோலி 95 ரன்களுக்கு அவுட் ஆக ஜடேஜா இன்னொரு பக்கம் நின்று இந்திய அணியை வெற்றிபெற வைத்தார்.
-
"பட்டாம்பூச்சி எஃபெக்ட்.." ஈரானில் வீசப்படும் குண்டால்.. மிக பெரிய சிக்கலில் தமிழக விவசாயிகள் -
ஈரானில் விழுந்த குண்டுகளால்.. இந்தியாவில் உயர்ந்த குடிநீர் விலை.. இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ! -
ரெடியா இருங்க மக்களே! சட்டுன்னு ஏறப்போகும் பெட்ரோல், டீசல் விலை! தேதி குறிச்சாச்சு! -
வந்தாச்சு LPG ATM.. இனி காத்திருக்கவே வேண்டாம்! வெறும் 2 நிமிடத்தில் புதிய சிலிண்டர் ஈஸியா வாங்கலாம் -
ஈரான் "அந்த" இடத்தில் அடித்தால் உலகத்திற்கே வலிக்கும்.. இன்டர்நெட் மொத்தமாக முடங்கும் ஆபத்து -
மாஸ் காட்டும் இந்தியா.. கடற்படையின் பலம் டபுளாகுது! உள்ளே வந்த ஐஎன்எஸ் தாராகிரி! -
"பணத்தை கொடுத்துட்டு.. அழுது புலம்புங்க.. நான் கேட்கிறேன்.." வினோத பிஸ்னஸை ஆரம்பித்த இளைஞர் -
2 மாத வாடகை தான் அட்வான்ஸ்.. ஒழுங்கா கட்டலைனா வெளியேற்றலாம்! புதிய வாடகை விதிகள் சொல்வது என்ன -
ஏடிஎமில் கேட்டது ரூ.10,000.. கிடைச்சது ரூ.3 லட்சம்! ஆனாலும் வாடிக்கையாளர் பயங்கர சோகம்! ஏன் தெரியுமா -
பவரை காட்டிய இந்தியா! ஹார்முஸ் நீரிணையை கடந்து வரும் மேலும் 2 எண்ணெய் கப்பல்கள்! -
பேசியது 15 நிமிடம்.. காத்திருந்தது 2 மணி நேரம்! அமித்ஷாவை சந்திக்க ஹோட்டலில் காத்துக்கிடந்த எடப்பாடி -
பாமகவுக்கு 18 தொகுதி, அமமுகவுக்கு 9, பாஜக+ 40.. 167 தொகுதிகளில் அதிமுக போட்டி? இறுதியான சீட் ஷேரிங்?












Click it and Unblock the Notifications