கொஞ்சம் மிஸ்ஸான கை கால் உடைஞ்சிடும்.. நடுங்கிய கால்கள்.. அச்சத்தில் இந்திய வீரர்கள்! கவனிச்சீங்களா?
சென்னை: இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டியில் இந்திய வீரர்கள் பீல்டிங் செய்த விதம் விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை போட்டி விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது. இன்று ஆடும் இந்திய அணியில் ஷரத்துல் தாக்கூர் நீக்கப்பட்டு உள்ளார். அவருக்கு பதிலாக சூர்யா குமார் யாதவ் அணிக்குள் வந்துள்ளார். அதேபோல் ஹர்திக் பாண்டியா காயம் காரணமாக ஆடவில்லை.அவருக்கு பதிலாக ஷமி அணிக்குள் வந்துள்ளார். இந்திய அணியில், ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல் (வி.கே), சூர்யகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, முகமது சிராஜ் ஆகியோர் இன்று ஆடுகிறார்கள்.
டெவோன் கான்வே, வில் யங், ரச்சின் ரவீந்திரா, டேரில் மிட்செல், டாம் லாதம் (சி & டபிள்யூ), க்ளென் பிலிப்ஸ், மார்க் சாப்மேன், மிட்செல் சான்ட்னர், மாட் ஹென்றி, லாக்கி பெர்குசன், டிரெண்ட் போல்ட் ஆகியோர் நியூசிலாந்து அணியில் மாற்றம் இன்றி ஆடுகின்றனர். இந்திய அணியின் மோசமான பீல்டிங் தற்போது இந்திய அணிக்கே எதிராக திரும்பி உள்ளது. எளிதாக விக்கெட் எடுக்க வேண்டிய ஆட்டத்தில் மோசமான பீல்டிங் காரணமாக இந்திய அணி சொதப்பி உள்ளது.

பீல்டிங் சொதப்பல்: இன்று 19 ரன்களுக்கே இரண்டு விக்கெட்டுகளை நியூசிலாந்து அணி இழந்தது. ஆனால் அதன்பின் இந்திய அணி அடுத்தடுத்து கேட்சுகளை விட்டதால் நியூசிலாந்து அணி விக்கெட்டுகளை இழக்காமல் நிதானமாக ஆடியது. 20+ ரன்கள் இருந்த போது ரவீந்திர ராச்சின் அடித்த பந்தை எளிதாக கைக்கும் வந்தும் கூட ரவீந்திர ஜடேஜா மிஸ் செய்தார். இந்த கேட்ச் மிஸ் காரணமாக நியூசிலாந்து அணி சரிவில் இருந்து மீண்டு 179 ரன்கள் வரை அடித்தது.
( என்னங்க இது? ஒரே ஒரு வீரரால்.. மொத்த இந்திய அணிக்கும் எகிறிய பிரஷர்.. மெடல் ஒன்னுதான் குறைச்சல்)
முக்கியமாக ராச்சின் 75 ரன்கள் வரை அடித்தார். அதேபோல் இன்னொரு பக்கம் டெர்லி மிட்சல் 100 ரன்கள் வரை அடித்து ஆடிக்கொண்டு இருக்கிறார். இதுவரை நியூசிலாந்து அணி 223 ரன்கள் வரை எடுத்து ஆடிக்கொண்டு இருக்கிறது. இவர்கள் இருவரும் 140 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைக்க இந்திய அணியின் மோசமான பீல்டிங்கும் ஒரு காரணம் ஆகும்.

நடுக்கம்: இந்திய அணி வீரர்கள் இன்று மோசமாக பீல்டிங் செய்ய.. மைதானத்தின் அவுட் பீல்ட் ஒரு காரணம் ஆகும். அவுட் பீல்ட் மோசமாக இருந்தது. ஏற்கனவே இந்த பிட்சில் ஆடிய இங்கிலாந்து வீரர்கள் கடுமையாக புகார் வைத்தனர். அதேபோல் ஆப்கானிஸ்தான் அணியில் முஜீப் போன்ற வீரர்கள் கடுமையாக காயம் கூட அடைந்தனர்.
இந்த பிட்ச் களிமண் தரையாக இருப்பதால பீல்டிங் செய்வது கடினமாக உள்ளது. இதனால் இந்திய வீரர்கள் இன்று தைரியம் இன்றி பீல்டிங் செய்தனர். திணறியபடி டைவ் அடிக்க பயந்து கொண்டு.. மெதுவாக ஓடி பீல்டிங் செய்தனர். கொஞ்சம் மிஸ்ஸான கை கால் உடைஞ்சிடும் என்ற அச்சத்தில் இவர்கள் பீல்டிங் செய்தனர். இதன் காரணமாகவே இன்று இந்திய அணியின் பீல்டிங் சொதப்பலாக இருந்தது.












Click it and Unblock the Notifications