என்னங்க இது? ஒரே ஒரு வீரரால்.. மொத்த இந்திய அணிக்கும் எகிறிய பிரஷர்.. மெடல் ஒன்னுதான் குறைச்சல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இன்று நியூசிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியாவின் பீல்டிங் மோசமாக உள்ளது. இந்திய அணி அடுத்தடுத்து பல கேட்ச்களை மிஸ் செய்துள்ளது,

இந்திய அணியின் டிரெஸ்ஸிங் ரூமில் தற்போது புதிய சம்பிரதாயம் ஒன்று கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி அணியில் நன்றாக ஆடும் வீரர்களில் சிறப்பாக பீல்டிங் செய்யும் வீரர்களுக்கு மெடல் வழங்கப்படுகிறது.

ஒவ்வொரு மேட்ச்சிற்கு பின்பும் இந்த மெடல் மாற்றி மாற்றி வழங்கப்படுகிறது. ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு இந்த மெடல் செல்லும். அதன்படி ஆஸ்திரேலியா ஆட்டத்தில் விராட் கோலிக்கு இந்த மெடல் வழங்கப்பட்டது. அடுத்ததாக ஷரத்துல் தாக்கூர் இந்த விருதை பெற்றார். மீண்டும் கோலிக்கு விருது வழங்கப்பட்டது. அவரிடம் இருந்து காந்த் போட்டியில் நன்றாக ஆடிய ஜடேஜாவிற்கு இந்த மெடல் சென்றுள்ளார்.

Why Team India players are losing catches one by one against New Zealand World Cup 2023?

அவர் பிடித்த கேட்ச் மற்றும் பீல்டிங்கை பாராட்ட வேண்டும் என்பதற்காக இந்த அவார்ட் வழங்கப்பட்டது. இந்திய அணியின் டிரெஸ்ஸிங் ரூமில் நடக்கும் இந்த வழக்கம் காரணமாக அணிக்குள் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. கெட்ட விதத்தில் இல்லாமல் நல்ல விதத்தில் இந்த பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது . அதன்படி அணி வீரர்கள் சிறப்பாக கேட்ச் பிடிக்க வேண்டும். இன்னும் சிறப்பாக ஆட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளனர்.

முக்கியமாக பீல்டிங் செய்வதில் இந்திய வீரர்கள் அதிக ஊக்கத்துடன் உள்ளனர். இதனால் இந்திய அணியிடம் சமீபமாக இருந்த மிஸ் பீல்டிங் வெகுவாக குறைந்து உள்ளது.

இன்று மோசம்: ஆனால் இன்று நியூசிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியாவின் பீல்டிங் மோசமாக உள்ளது. தொடக்கத்திலேயே ஷ்ரேயாஸ் ஒரு கேட்சை பிடித்தாலும் இன்னொரு கேட்சை மிஸ் செய்தார். அதேபோல் குல்தீப் யாதவ் ஒரு கேட்சை மிஸ் செய்தார். இதெல்லாம் போக எளிதாக கைக்கு வந்த கேட்சை ரவீந்திர ஜடேஜா மிஸ் செய்தார்.

( இந்திய அணியின் அஸ்திவாரத்தை.. ஆட்டிய 2 "கடிகள்".. ஆடிப்போன ரோஹித் சர்மா.. உலகக் கோப்பையில் ட்விஸ்ட் )

20+ ரன்கள் இருந்த போது ரவீந்திர ராச்சின் அடித்த பந்தை எளிதாக கைக்கும் வந்தும் கூட ரவீந்திர ஜடேஜா மிஸ் செய்தார். இந்த கேட்ச் மிஸ் காரணமாக நியூசிலாந்து அணி சரிவில் இருந்து மீண்டு 179 ரன்கள் வரை அடித்தது. முக்கியமாக ராச்சின் 75 ரன்கள் வரை அடித்தார். அதேபோல் இன்னொரு பக்கம் டெர்லி மிட்சல் 75 ரன்கள் வரை அடித்து ஆடிக்கொண்டு இருக்கிறார்.

மோசமான பீல்டிங்: இந்திய அணியின் மோசமான பீல்டிங் தற்போது இந்திய அணிக்கே எதிராக திரும்பி உள்ளது. எளிதாக விக்கெட் எடுக்க வேண்டிய ஆட்டத்தில் மோசமான பீல்டிங் காரணமாக இந்திய அணி சொதப்பி உள்ளது.

Why Team India players are losing catches one by one against New Zealand World Cup 2023?

இன்று ஆடும் இந்திய அணியில் ஷரத்துல் தாக்கூர் நீக்கப்பட்டு உள்ளார். அவருக்கு பதிலாக சூர்யா குமார் யாதவ் அணிக்குள் வந்துள்ளார். அதேபோல் ஹர்திக் பாண்டியா காயம் காரணமாக ஆடவில்லை.அவருக்கு பதிலாக ஷமி அணிக்குள் வந்துள்ளார். இந்திய அணியில், ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல் (வி.கே), சூர்யகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, முகமது சிராஜ் ஆகியோர் இன்று ஆடுகிறார்கள்.

டெவோன் கான்வே, வில் யங், ரச்சின் ரவீந்திரா, டேரில் மிட்செல், டாம் லாதம் (சி & டபிள்யூ), க்ளென் பிலிப்ஸ், மார்க் சாப்மேன், மிட்செல் சான்ட்னர், மாட் ஹென்றி, லாக்கி பெர்குசன், டிரெண்ட் போல்ட் ஆகியோர் நியூசிலாந்து அணியில் மாற்றம் இன்றி ஆடுகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+