இந்தியாவுடன் தோற்றதும்.. மொத்த பாகிஸ்தான் டீம் உள்ளேயே பெரிய குழப்பம்! அடித்துக்கொள்ளும் வீரர்கள்
சென்னை: உலகக் கோப்பை 2023 தொடரில் இந்திய அணிக்கு எதிரான போட்டியில் தோல்வி அடைந்த நிலையில் பாகிஸ்தான் அணியில் ஆடிய, ஆடிக்கொண்டு இருக்கும் வீரர்களுக்கு இடையில் பெரிய மோதல் ஏற்பட்டு உள்ளது. மாறி மாறி வார்த்தைகளால் வீரர்கள் தாக்கிக்கொள்ளும் நிலைமை ஏற்பட்டு உள்ளது.
8-0.. உலகக் கோப்பை வரலாற்றில் இதுவரை 8 முறை பாகிஸ்தானை வீழ்த்தி.. ஒரு முறை கூட பாகிஸ்தானிடம் வீழாமல் இந்தியா சாதனை பெற்றுள்ளது. புதிய வலிமையாக பாபர் தலைமையிலான படையையும் கூட வீழ்த்தி ரோஹித் படை இந்த சாதனையை தக்க வைத்துள்ளது. இந்த மேட்சில் இந்திய அணி டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்தது. முதலில் இறங்கிய பாகிஸ்தான் 191 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது.
பாபர் ஆஸம் 50 ரன்கள் இருக்கும் போது அவரின் விக்கெட்டை சிராஜ் எடுத்தார். அடுத்து ரிஸ்வானும் 49 ரன்னுக்கு அவுட் ஆனார். இதையடுத்து பாகிஸ்தானின் மிடில் ஆர்டர் அப்படியே சீட்டு கட்டு போல சரிந்தது. இதையடுத்து இறங்கிய இந்திய அணியில் ரோஹித் சர்மா 86 ரன்கள், ஷ்ரேயாஸ் ஐயர் அரைசதம் எடுக்க இந்திய அணி எளிதாக வென்றது.

சண்டை: இந்த போட்டியில் நடந்த சில சம்பவங்களால் பாகிஸ்தான் அணி வீரர்கள், முன்னாள் வீரர்களுக்கு இடையிலேயே மோதல் வந்துள்ளது. உதாரணமாக பாகிஸ்தான் வீரர்களை முன்னாள் வீரர் அக்தர் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். அவர் செய்துள்ள விமர்சனத்தில், ரோஹித் சர்மா விளையாடிய இன்னிங்ஸ், பாகிஸ்தானின் பந்துவீச்சை அவமானப்படுத்தியது போல இருந்தது. கடந்த இரண்டு ஆண்டுகளாக அதிக ரன்கள் எடுக்காததால் அவர் பாகிஸ்தான் அணியை பழிவாங்கினார். ரோஹித் ஷர்மா மீண்டும் களமிறங்கியது நன்றாக இருந்தது, பாகிஸ்தான் பந்து வீச்சாளர்களை சரியாக அடித்து நொறுக்கினார். கடைசி ஓவர் வரை ஆட்டத்தை கொண்டு செல்ல வேண்டியது இல்லை என்று சொல்லும் அளவிற்கு அவர் பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களை அடித்து சுழற்றினார்.
( அந்த குரல் கேட்கலையே.. அசிங்கப்படுத்தப்பட்ட பாகிஸ்தான் அணி! தோனி சொன்ன அந்த வார்த்தை.. டிரெண்டாகுதே)
பாபர் அணியிடம் நம்பிக்கையேஇல்லை இல்லை. ரோஹித் சர்மா தனி ஆளாக பாகிஸ்தான் அணியை துவம்சம் செய்துவிட்டார் என்று அக்தர் கூறினார். இவர் ஒரு பக்கம் பாபர் அணியை திட்ட இன்னொரு பக்கம் டானிஷ் கனேரியா அதேபோல் பாகிஸ்தான் அணியை விமர்சனம் செய்துள்ளார்.
ஜெய் ஸ்ரீ ராம்; டானிஷ் கனேரியா பாகிஸ்தான் அணியில் இருந்த போது தான் மத ரீதியாக எதிர்கொண்ட பிரச்சனைகளை குறிப்பிட்டு உள்ளார். ஜெய் ஸ்ரீராம் விவகாரம் உச்சத்தில் இருக்கும் நேரத்தில் அவர் இதை குறிப்பிட்டு உள்ளார். அதன்படி இலங்கை அணியின் தில்ஷானிடம் பாகிஸ்தான் வீரர் அஹமது ஷேஷாத் மத ரீதியாக நடந்து கொண்ட வீடியோவை பகிர்ந்து உள்ளார். அதில் ஷேஷாத்.. தில்ஷனிடம்.. நீ முஸ்லீம் இல்லை. நீ முஸ்லீமாக மாறும். நீ என்ன செய்தாலும்.. நேரடியாக சொர்க்கத்திற்குத்தான் செல்வாய் என்று கூறி உள்ளார். அப்போது இந்த சம்பவம் பெரிய வைரலாகி கடுமையான சர்ச்சைகளை ஏற்படுத்தியது.
இந்த வீடியோவைத்தான் டானிஷ் கனேரியா பகிர்ந்து உள்ளார். அதில், டிரஸ்ஸிங் ரூமோ, விளையாட்டு மைதானமோ, சாப்பாட்டு மேசையோ, இந்த கொடுமை எனக்கு தினமும் நடந்தது என்று கூறியுள்ளார். அதாவது பாகிஸ்தான் வீரர்கள் தன்னை மதமாற்ற பிரஷர் கொடுத்ததாக கூறியுள்ளார். அவரின் கமெண்ட் செக்சனில்.. இந்தியர்கள் பலர் அவருக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளனர். இதுதான் பாகிஸ்தான் அணியின் உண்மையான முகம் என்று குரல் கொடுத்துள்ளனர். பாகிஸ்தான் வீரர்களிடம் இந்திய ரசிகர்கள் ஜெய் ஸ்ரீ ராம் என்று சொன்னதற்கு இந்த பதிலை அவர் கூறியுள்ளார்.

வாசிம் அக்ரம்; இது போக வாசிம் அக்ரமும் பாபர் ஆசமை கிண்டல் செய்துள்ளார். அதில், களத்தில் கோலியிடம் இருந்து பாபர் டி-ஷர்ட்களை பெற்ற கேமராக்களுக்கு முன்னால் நடந்தது. இதனால் அந்த காட்சி உலகம் முழுவதும் உள்ள தொலைக்காட்சிப் பெட்டிகளில் காட்சி மீண்டும் மீண்டும் ஒளிபரப்பப்பட்டது. பாபர் கோலியிடம் சட்டைகளைக் கேட்டாலும், அதை கேமராக்களின் முன் இப்படி கேட்டிருக்க கூடாது. தனியாக டிரஸ்ஸிங் அறையில் செய்திருக்க வேண்டும் என்று அக்ரம் விமர்சனம் செய்துள்ளார்.
பாபர் இப்படி பொதுவில் சட்டையை வாங்கியது தவறு. அதிலும் மேட்சை மோசமாக தோற்றுவிட்டு.. மோசமான சூழ்நிலையில் அந்த சட்டையை வாங்கியிருக்க கூடாது என்று பாபர் ஆசமை கிண்டல் செய்துள்ளார். இந்தியாவுடன் ஒரு மேட்ச் தோற்ற நிலையில் பாகிஸ்தான் அணியே தற்போது விமர்சனங்களுக்குள் சிக்கி உள்ளது.












Click it and Unblock the Notifications