Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அந்த குரல் கேட்கலையே.. அசிங்கப்படுத்தப்பட்ட பாகிஸ்தான் அணி! தோனி சொன்ன அந்த வார்த்தை.. டிரெண்டாகுதே

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்தியா பாகிஸ்தான் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் நடைபெற்ற சில கசப்பான சம்பவங்களுக்கு இடையில் தோனியின் இரண்டு முக்கியமான வீடியோக்கள் டிரெண்டாகி வருகிறது.

கடந்த சனிக்கிழமை இந்தியா பாகிஸ்தான் மேட்சில் முதலில் பேட்டிங் இறங்கிய பாகிஸ்தான் அணியின் வீரர்கள் இந்திய ரசிகர்களால் அவமானப்படுத்தப்பட்டதாக, கிண்டல் செய்யப்பட்டதாக புகார்கள் வைக்கப்படுகின்றன. பின்வரும் சம்பவங்கள் நேற்று மைதானத்தில் நடந்தது.

டாஸ் வென்று பாபர் ஆஸம் பேச தொடங்கிய போதே அவரை கடுமையாக பேச விடாமல் கோஷம் எழுப்பி இந்திய ரசிகர்கள் தொந்தரவு செய்தனர். அதேபோல் பாகிஸ்தான் வீரர்கள் பீல்டிங் செய்யும் போதும் தொடர்ந்தும் ஊ ஊ ஊ என்று கோஷம் எழுப்பி அவர்களை பீல்டிங் செய்வதில் இருந்து தொந்தரவு செய்தனர். இதெல்லாம் போக.. இன்னொரு பக்கம் பாகிஸ்தான் வீரர்கள் பேட்டிங் செய்துவிட்டு திரும்பும் போது அவர்களை நோக்கி ரசிகர்கள் ஜெய் ஸ்ரீ ராம் என்று கோஷம் எழுப்பினர்.

Jai Sree Ram: Why Two old videos of Dhoni is trending in Social Media after India Pakistan World Cup Match?

முக்கியமாக பாபர் ஆஸம் மற்றும் ரிஸ்வான் ஆகியோர் அவுட் ஆகி திரும்பும் போது அவர்களை நோக்கி ஜெய் ஸ்ரீ ராம் என்று கோஷம் எழுப்பப்பட்டது. இந்த கோஷம் எழுப்பப்பட்ட வீடியோக்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பாகிஸ்தான் வீரர்களை அவமதிக்கும் விதமாக, அவர்களை வெறுப்பேற்றும் விதமாக அஹமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் இருந்த ரசிகர்கள் நடந்து கொண்ட சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

( விட்றாத மாறா.. அவமானப்படுத்தப்பட்ட பாகிஸ்தான் வீரர்கள்? இதை மட்டும் சென்னை செஞ்சா.. உலகமே திரும்பும்)

தோனி வீடியோ டிரெண்ட்: இந்த நிலையில்தான் தோனியின் இரண்டு வீடியோக்கள் டிரெண்டாகி வருகின்றன. அதில் ஒன்றில்.. உலகக் கோப்பை 2011யை வென்ற போது.. நீங்கள் சிறப்பாக உணர்ந்த விஷயம் எது என்று கேள்வி எழுப்பி இருப்பார்கள். அதற்கு பதில் அளித்த தோனி கோப்பையை வென்றதை விட அதுக்கு 10, 15 நிமிடம் முன்பு 40,50 ஆயிரம் மக்கள் வந்தே மாதரம் என்று எழுப்பிய கோஷத்தை கிரவுண்டில் கேட்டது இன்னும் சிறப்பாக உணர வைத்தது.

அதுதான் எனக்கு மிகப்பெரிய சந்தோசத்தை.. உணர்ச்சி பெருக்கை கொடுத்தது என்று தோனி குறிப்பிட்டு இருப்பார். அதை இப்போது நெட்டிசன்கள் குறிப்பிட்டு.. பாருங்க அப்போது எல்லாம் வந்தே மாதரம் என்ற வார்த்தைதான் இருந்தது. இப்போது அதை தூக்கி வீசிவிட்டு மதரீதியாக ஜெய் ஸ்ரீ ராம் என்று சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள் என்று நெட்டிசன்கள் விமர்சனம் செய்துள்ளனர்.,

Jai Sree Ram: Why Two old videos of Dhoni is trending in Social Media after India Pakistan World Cup Match?

இன்னொரு பேட்டியில்.. தோனி , சென்னை எனக்கு கிரிக்கெட்டை பற்றி கற்றுக்கொடுத்தது. அதை எப்படி அணுக வேண்டும் என்று கற்றுக்கொடுத்தது. சென்னை மக்கள் எதிரணியை கூட கொண்டாடுவார்கள். எதிரணி சிறப்பாக ஆடினாலும் கைதட்டுவார்கள் . அந்த குணம் எனக்கு நிறைய கற்றுக்கொடுத்தது என்று தோனி கூறினார். அதை நெட்டிசன்கள் குறிப்பிட்டு சென்னை ரசிகர்கள் பற்றி பாராட்டி வருகின்றனர். பாகிஸ்தானின் அடுத்த இரண்டு போட்டிகளில் சென்னையில் நடக்க உள்ளன. இதில் பாகிஸ்தான் வீரர்களை சிறப்பாக உபசரிக்க வேண்டும், அவர்களை ரசிகர்கள் சரியாக நடத்த வேண்டும். சென்னை மக்கள் எவ்வளவு விருந்தோம்பல் கொண்டவர்கள், தன்மையானவர்கள் என்பதை உலகிற்கு காட்ட வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன.

சென்னை மக்கள்.. சென்னை ரசிகர்கள் பொதுவாகவே நல்ல கிரிக்கெட் அறிவு கொண்டவர்கள். மதம், அரசியல் பார்க்காமல் கிரிக்கெட்டை கிரிக்கெட்டாக பார்க்க கூடியவர்கள்., 1997ல் பாகிஸ்தான் வீரர் சயீத் அன்வர் இந்தியாவிற்கு எதிராக 197 அடித்தார். அப்போது சென்னை ரசிகர்கள் அவருக்காக எழுந்து நின்று கைதட்டினார்கள்.அந்த அளவிற்கு தமிழ்நாடு ரசிகர்கள் தன்மையானவர்கள். இந்த நிலையில்.. அடுத்து பாகிஸ்தான் ஆட உள்ள இரண்டு போட்டியிலும் ரசிகர்கள் அவர்களை சென்னையில் சிறப்பாக நடத்த வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+