விட்றாத மாறா.. அவமானப்படுத்தப்பட்ட பாகிஸ்தான் வீரர்கள்? இதை மட்டும் சென்னை செஞ்சா.. உலகமே திரும்பும்
சென்னை: இந்தியா பாகிஸ்தான் இடையிலான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் வீரர்கள் இந்திய ரசிகர்களால் அவமானப்படுத்தப்பட்டதாக புகார்கள் வைக்கப்பட்டு வருகின்றன.
இந்தியா பாகிஸ்தான் இடையிலான 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நேற்று ஒருவழியாக நடந்து முடிந்துள்ளது. திருவிழா போல பெரிய கொண்டாட்டங்களுக்கு பின்பாக.. விறுவிறுப்புடன்.. இந்த போட்டியை எளிதாக இந்தியா வென்றுள்ளது. இதன் மூலம் புள்ளிகள் பட்டியலில் இந்தியா 3 போட்டியில் விளையாடி 3 போட்டிகளில் வென்று முதலிடம் பிடித்துள்ளது.
இந்தியா வெற்றி: இந்த மேட்சில் இந்திய அணி டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்தது. முதலில் இறங்கிய பாகிஸ்தான் 191 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. 20 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்த நிலையில் ஷாபிக் விக்கெட்டை சிராஜ் எடுத்தார். பாபர் ஆஸம் 50 ரன்கள் இருக்கும் போது அவரின் விக்கெட்டை சிராஜ் எடுத்தார். அடுத்து ரிஸ்வானும் 49 ரன்னுக்கு அவுட் ஆனார். இதையடுத்து பாகிஸ்தானின் மிடில் ஆர்டர் அப்படியே சீட்டு கட்டு போல சரிந்தது. ஷகீல் 6, இப்திகார் 4, ஷதாப் கான் 2, முகமது நவாஸ் 4 என்று மிடில் ஆர்டர் அப்படியே சரிந்தது. அதன்பின் பவுலர்களும் வரிசையாக விக்கெட்டுகளை இழந்த நிலையில் பாகிஸ்தான் 191 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது.

இதையடுத்து இறங்கிய இந்திய அணியில் ரோஹித் சர்மா அதிரடியாக 86 ரன்கள்.. ஷ்ரேயாஸ் 50 ரன்கள் எடுத்த நிலையில் எளிதாக 30.3 ஓவரில் இந்திய அணி வென்றது.
( ஜெய் ஸ்ரீ ராம்! பாகிஸ்தான் மேட்சில் இந்திய ரசிகர்கள் விடாமல் கோஷம்.. உதயநிதி ஸ்டாலின் சுளீர் அட்டாக் )
அசிங்கப்படுத்தப்பட்ட வீரர்கள்: இந்த மேட்சில் இறங்கிய பாகிஸ்தான் அணி வீரர்கள் இந்திய ரசிகர்களால் அவமானப்படுத்தப்பட்டதாக, கிண்டல் செய்யப்பட்டதாக புகார்கள் வைக்கப்படுகின்றன. பின்வரும் சம்பவங்கள் நேற்று மைதானத்தில் நடந்தது.
1. டாஸ் வென்று பாபர் ஆஸம் பேசிய தொடங்கிய போதே அவரை கடுமையாக பேச விடாமல் கோஷம் எழுப்பி இந்திய ரசிகர்கள் தொந்தரவு செய்தனர்.
2, அதேபோல் பாகிஸ்தான் வீரர்கள் பீல்டிங் செய்யும் போதும் தொடர்ந்து ஊ ஊ ஊ என்று கோஷம் எழுப்பி அவர்களை பீல்டிங் செய்வதில் இருந்து தொந்தரவு செய்தனர். இதெல்லாம் போக.. இன்னொரு பக்கம் பாகிஸ்தான் வீரர்கள் பேட்டிங் செய்துவிட்டு திரும்பும் போது அவர்களை நோக்கி ரசிகர்கள் ஜெய் ஸ்ரீ ராம் என்று கோஷம் எழுப்பினர்.
3, முக்கியமாக பாபர் ஆஸம் மற்றும் ரிஸ்வான் ஆகியோர் அவுட் ஆகி திரும்பும் போது அவர்களை நோக்கி ஜெய் ஸ்ரீ ராம் என்று கோஷம் எழுப்பப்பட்டது. இந்த கோஷம் எழுப்பப்பட்ட வீடியோக்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பாகிஸ்தான் வீரர்களை அவமதிக்கும் விதமாக, அவர்களை வெறுப்பேற்றும் விதமாக அஹமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் இருந்த ரசிகர்கள் நடந்து கொண்ட சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை போட்டி: இந்த நிலையில் பாகிஸ்தானின் அடுத்த இரண்டு போட்டிகள் சென்னையில் நடக்க உள்ளன. இதில் பாகிஸ்தான் வீரர்களை சிறப்பாக உபசரிக்க வேண்டும், அவர்களை ரசிகர்கள் சரியாக நடத்த வேண்டும். சென்னை மக்கள் எவ்வளவு விருந்தோம்பல் கொண்டவர்கள், தன்மையானவர்கள் என்பதை உலகிற்கு காட்ட வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன.
சென்னை மக்கள்.. சென்னை ரசிகர்கள் பொதுவாகவே நல்ல கிரிக்கெட் அறிவு கொண்டவர்கள். மதம், அரசியல் பார்க்காமல் கிரிக்கெட்டை கிரிக்கெட்டாக பார்க்க கூடியவர்கள்., 1997ல் பாகிஸ்தான் வீரர் சயீத் அன்வர் இந்தியாவிற்கு எதிராக 197 அடித்தார். அப்போது சென்னை ரசிகர்கள் அவருக்காக எழுந்து நின்று கைதட்டினார்கள்.
அந்த அளவிற்கு தமிழ்நாடு ரசிகர்கள் தன்மையானவர்கள். இந்த நிலையில்.. அடுத்து பாகிஸ்தான் ஆட உள்ள இரண்டு போட்டியிலும் ரசிகர்கள் அவர்களை சென்னையில் சிறப்பாக நடத்த வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications