ரஜினி செய்த உதவி! விஜய் to விஜய் சேதுபதி வரை என்ன செய்தார்கள் தெரியுமா? உண்மையை உடைத்த பாவா லட்சுமணன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஒரு காலத்தில் வடிவேலு காமெடி என்றாலே தவறாமல் முகம் காட்டிய நடிகர்களில் ஒருவர் பாவா லட்சுமணன். "வா மா மின்னலு..." என்ற ஒரே வசனத்தில் ரசிகர்களை சிரிக்க வைத்த அந்த நடிகர், இன்று வாழ்க்கையோடு போராடிய நாட்களை நினைத்துப் பேசும்போது பலரும் கண்கலங்கியிருக்கிறார்கள்.

சில ஆண்டுகளுக்கு முன்பு சர்க்கரை நோய் காரணமாக அவரது கால் விரல்கள் அகற்றப்பட்டன. அதன்பிறகு பட வாய்ப்புகளும் குறைந்துவிட்டன. வருமானம் இல்லாமல், தங்க இடம்கூட இல்லாமல் தவித்ததாக அவரே பல பேட்டிகளில் சொல்லியிருக்கிறார்.

அந்த சூழ்நிலையில்தான் பலரும் உதவிக்கரம் நீட்டினார்கள். அந்த உதவிகளைப் பற்றி சமீபத்திய பேட்டியில் பாவா லட்சுமணன் மனம் திறந்து பேசியிருக்கிறார்.

ரஜினி ஒரு லட்சம் கொடுத்தார்

அந்த பேட்டியில் அவர் சொன்ன ஒரு விஷயம் தான் இப்போது சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது. "ரஜினிகாந்த் சார் எனக்கு ஒரு லட்சம் ரூபாய் கொடுத்தார். பிறகு எனக்கு எம்.எல்.ஏ ஹாஸ்டலில் வீடு கிடைத்திருக்கு என்று அவருடைய உதவியாளரிடம் சொன்னேன். அதை கேட்டு ரொம்ப சந்தோஷப்பட்டாங்க. அதுக்குப் பிறகும் 'செலவுக்கு வைத்துக்கோங்க'ன்னு சொல்லி இன்னொரு பத்தாயிரம் ரூபாயையும் என் வங்கி கணக்கில் அனுப்பி வைத்தார்கள். நீங்க வெளியே போவதற்கு பைக்ல அழாதீங்க ஒரு ஆட்டோவில் போயிட்டு வாங்க என்று சொல்லி இருக்காங்க என பாவா லட்சுமணன் நெகிழ்ச்சியுடன் கூறியிருக்கிறார்.

Bava Lakshmanan Rajinikanth Vijay Vijay Sethupathi

ரஜினி பற்றிய விமர்சனம்

ரஜினிகாந்த் பற்றி சமூக வலைதளங்களில் அடிக்கடி ஒரு விமர்சனம் வரும். "ரஜினி யாருக்கும் உதவி செய்ய மாட்டார்... மற்ற நடிகர்கள் மாதிரி வெளியில் தெரியும்படி உதவி செய்வதில்லை" என்று சிலர் தொடர்ந்து பதிவிட்டு வருவார்கள்.

அதே நேரத்தில், ரஜினியிடம் உதவி பெற்றவர்கள் பலரும், அவர் செய்த உதவியை பல மாதங்கள் அல்லது பல ஆண்டுகள் கழித்துத்தான் வெளியில் சொல்லியிருக்கிறார்கள். அதனால்தான் "ரஜினி செய்த உதவிகள் பெரும்பாலும் விளம்பரம் இல்லாமல் நடந்துவிடுகிறது" என்று அவரது ரசிகர்கள் சொல்லி வருகிறார்கள். இப்போது பாவா லட்சுமணன் சொன்ன இந்த தகவலும் அந்த விவாதத்தை மீண்டும் கிளப்பியுள்ளது.

விஜய் சேதுபதி முதல் பாலா வரை

பாவா லட்சுமணனின் வாழ்க்கையில் ரஜினி மட்டும் இல்லை. கஷ்டமான நேரத்தில் பலரும் அவருக்கு துணையாக இருந்திருக்கிறார்கள். சர்க்கரை நோய் காரணமாக கால் விரல்கள் அகற்றப்பட்டபோது நடிகர் விஜய் சேதுபதி பணம் கொடுத்திருந்தாராம். 'கலக்கப்போவது யாரு' பாலாவும் அவருக்கு உதவியவர்களில் ஒருவர்.

சில வாரங்களுக்கு முன்பு தங்க இடமில்லாமல் தவித்தது தெரிந்ததும், அமைச்சர் ராஜ்மோகன் நேரில் சென்று சந்தித்து, சென்னை எம்.எல்.ஏ ஹாஸ்டலில் தங்குவதற்கு வீடு ஏற்பாடு செய்து கொடுத்தார்.

அதேபோல், முதல்வர் விஜய் செய்த உதவியும் தன்னால் மறக்க முடியாது என்று பாவா லட்சுமணன் சொல்லி இருக்கிறார். அதாவது சில மாதங்களுக்கு முன்பு இவர் வாழ்ந்து வந்த வாடகை வீட்டில் வாடகை கொடுக்க முடியாதத அவங்க வெளியே போக சொல்லி விட்டார்களாம். அந்த சமயத்தில் தான் தரையில் படுத்து இருந்த வீடியோவை பார்த்து விஜய் சார் ரொம்பவும் வருத்தப்பட்டாராம். அவர்தான் எனக்கு வீடு கொடுக்க சொல்லி இருக்கிறார், இந்த உதவியை மறக்கவே மாட்டேன் என்று பாவா லட்சுமணன் சொல்லி இருக்கிறார்.

லெஜண்ட் சரவணனும் உதவியிருக்கிறார்

இதில் இன்னொரு விஷயத்தையும் பாவா லட்சுமணன் சொல்லி இருக்கிறார். தொழிலதிபரும் நடிகருமான லெஜண்ட் சரவணனும் தனிப்பட்ட முறையில் நிதியுதவி செய்ததாக அவர் நன்றி தெரிவித்துள்ளார்.

வடிவேலு டீமில் இன்று

ஒரு காலத்தில் வடிவேலுவுடன் சேர்ந்து திரையை கலக்கிய கூட்டம் இன்று பெரும்பாலும் இல்லை. அல்வா வாசு உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். போண்டா மணியும் நம்மை விட்டு பிரிந்துவிட்டார். சிங்கமுத்து தனி பாதையில் சென்று விட்டார். அந்தக் குழுவில் இன்று வாழ்க்கையோடு போராடி மீண்டு நிற்கும் நடிகர்களில் பாவா லட்சுமணனும் ஒருவர். 'வா மா மின்னலு' முதல் 'ஆனந்தம்' வரை... பாவா லட்சுமணனை ரசிகர்கள் இன்னும் மறக்காமல் இருப்பதற்கு காரணம் அவர் நடித்த காமெடி காட்சிகள்தான்.

'மாயி' படத்தில் "வா மா மின்னலு..." என்று பேசும் காட்சி இன்றும் மீம்ஸ்களில் சுற்றிக்கொண்டே இருக்கிறது. 'ஆனந்தம்' படத்தில் அவர் சொல்லும், "அரிசி... நீ என்னை தினமும் தரிசி... பருப்பு... என் மேல காட்டாத வெறுப்பு..." என்ற வசனத்தை இப்போதும் ரசிகர்கள் மறக்கவில்லை.

காமெடியில் சிரிக்க வைத்தவர், வாழ்க்கையில் இவ்வளவு கஷ்டங்களை சந்தித்திருக்கிறார் என்பதை அறிந்த பிறகு, பலரும் அவருக்கு தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+