எமனாக நிற்கும் டிராவிஸ் ஹெட்.. சொதப்பும் முகமது ஷமி.. இந்திய அணி வெற்றிக்கு என்ன செய்ய வேண்டும்?
துபாய்: ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஃபார்மின்றி தவிக்கும் முகமது ஷமியின் பங்களிப்பு மிகவும் அவசியமான ஒன்றாக மாறி இருக்கிறது. வங்கதேச அணிக்கு எதிரான முதல் போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய முகமது ஷமி, அடுத்த 2 போட்டிகளிலும் விக்கெட் வீழ்த்த முடியாமல் திணறி இருக்கிறார்.
2023 உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கு பின் முகமது ஷமி நேரடியாக ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் களமிறங்கி இருக்கிறார். இதற்கு முன் சில தொடர்களில் விளையாடினாலும், அவர் முழுமையாக விளையாடவில்லை. இதனிடையே பும்ராவும் காயம் காரணமாக சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டது.

துபாய் மைதானம்
இதனால் இந்திய பவுலிங் லைன் அப்பை வழிநடத்தும் பொறுப்பு முகமது ஷமிக்கு அளிக்கப்பட்டது. துபாய் மைதானத்தில் மட்டுமே இந்திய அணி விளையாட உள்ளதாக அறிவிக்கப்பட்டது அவருக்கும் சாதகமாக அமைந்தது. ஏனென்றால் என்ன லைன் மற்றும் லெந்தில் வீச வேண்டும் என்பதை எளிதாக கண்டறிந்து அதற்கேற்ப திட்டங்களை செயல்படுத்த முடியும்.
காயத்தில் முகமது ஷமி?
அப்படிதான் வங்கதேச அணிக்கு எதிரான முதல் போட்டியிலேயே 5 விக்கெட்டுகளை வீழ்த்தி முகமது ஷமி அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். ஆனால் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியின் முதல் ஓவரிலேயே 5 ஒய்டுகளை வீசி அதிர்ச்சி கொடுத்தார். அதன்பின் கணுக்கால் வலி காரணமாக சில மணி நேரம் பெவிலியனில் இருந்தார்.
பவர் பிளே சிக்கல்
இதனால் மீண்டும் காயம் ஏற்பட்டதோ என்று ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். இருந்தாலும் நியூசிலாந்து அணிக்கு எதிரான கடைசி லீக் போட்டியில் முகமது ஷமி தனி வேகப்பந்துவீச்சாளராக களமிறங்கினார். என்னதான் முகமது ஷமி சிறப்பாக பவுலிங் செய்தாலும், அவருக்கு கடந்த 2 போட்டிகளாகவே விக்கெட் கிடைக்கவில்லை. இதனால் பவர் பிளே ஓவர்களில் விக்கெட் வீழ்த்த முடியாமல் இந்திய அணி திணறி வருகிறது.
டிராவிஸ் ஹெட் - மெக்கர்க்
கடந்த போட்டியில் கூட ஹர்திக் பாண்டியாவை அட்டாக் செய்ய சென்றுதான் நியூசிலாந்து தொடக்க வீரர்கள் விக்கெட்டை பறிகொடுத்தனர். ஒருவேளை பவர் பிளே ஓவர்களில் டிராவிஸ் ஹெட் விக்கெட்டை வீழ்த்தவில்லை என்றால், இந்திய அணியின் ஸ்பின்னர்களை டிராவிஸ் ஹெட் மைதானத்தின் 4 திசைகளிலும் சிதறடிப்பது நிச்சயம். அதேபோல் ஆஸ்திரேலியா அணி இளம் அதிரடி வீரரான மெக்கர்க் உடன் களமிறங்கவும் வாய்ப்புகள் உள்ளது.
அர்ஷ்தீப் சிங் அல்லது ஹர்சித் ராணா
இதனால் தொடக்க வீரர்களாக டிராவிஸ் ஹெட் - மெக்கர்க் களமிறங்கும் போது எப்படி இந்திய அணியின் முகமது ஷமி இருவரையும் கட்டுப்படுத்த போகிறார் என்று கேள்வியும், அச்சமும் இந்திய ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இதனால் அர்ஷ்தீப் சிங் அல்லது ஹர்சித் ராணா இருவரில் ஒருவரை பிளேயிங் லெவனில் மீண்டும் கொண்டு வர வேண்டும் என்ற குரல்களும் எழுந்துள்ளன. ஏனென்றால் டிராவிஸ் ஹெட்-க்கு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்களை எதிர்கொள்வதில் சிக்கல் உள்ளது.












Click it and Unblock the Notifications