"இனிமே இங்க நான்தான் ரங்கராய சக்திவேல்" இங்கிலாந்தில் முதல் சதம்.. தெறிக்கும் சுப்மன் கில் மீம்ஸ்!
லண்டன்: இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் முடிவில் இந்திய அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 359 ரன்களை குவித்துள்ளது. கேப்டன் சுப்மன் கில் 127 ரன்களையும், யஷஸ்வி ஜெய்ஸ்வால் 101 ரன்களையும், ரிஷப் பண்ட் 65 ரன்களையும் விளாசி இருக்கின்றனர். இதனை வைத்து சோசியல் மீடியாவில் ரசிகர்கள் உருவாக்கிய தரமான மீம்ஸை பார்க்கலாம்.
தக் லைஃப் படத்தில் சிம்பு, "இனிமே இங்க நான்தான் ரங்கராய சக்திவேல்" என்று அனைவரின் முன்பாகவும் பிரகடனப்படுத்தி கொள்வார். அதில் வரும் சிம்புவாக சுப்மன் கில்லை மாற்றி, சுனில் கவாஸ்கர், விராட் கோலி வரிசையில் கேப்டனான முதல் இன்னிங்ஸில் சதமடித்த "நான்தான் இங்க இனிமே ரங்கராய சக்திவேல்" என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் பட்டாசு ரகம்.

ராஜா ராணி படத்தில் ஜெய், "அய்யோ எனக்கு எங்க அப்பானா மட்டும் தாங்க பயம்.. மற்றபடி ஐ லவ் யூங்க" என்று சொல்வார். அதில் வரும் ஜெய்யாக ரிஷப் பண்டை மாற்றி, "ஒயிட் பால்னா மட்டும் தாங்க எனக்கு பயம்.. மற்றபடி ரெட் பால்னா நல்லா ஆடுவேங்க" என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் ஸ்பைடியோட வரலாற்றை கொஞ்சம் பாருங்க பாஸ் ரகம்.

பரிதாபங்கள் வீடியோவில் பழைய கார் வைத்து சீன் போடும் கோபி, அவரின் தாத்தா முன்பாக கார் ஸ்டார்ட் ஆகாமல் மாட்டிக் கொள்வார். அப்போது சுதாகர், "சிக்கிட்ட.. வெளியே வா" என்று கிண்டல் செய்வார். அதில் வரும் கோபியாக இங்கிலாந்து பவுலர்களையும், சுதாகராக இந்திய பேட்ஸ்மேன்களையும் மாற்றி, "சிக்கிட்ட.. வெளிய வா" என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் அவனை அப்படியே முடிச்சி விட்ருங்க.. விடாதீங்க ரகம்.

வடசென்னை படத்தில் ஆண்ட்ரியாவிடம் சமுத்திரக்கனி, "சண்டை செய்றதுனு ஆகிருச்சுனா.. எவனாலையும் என்னைய ஒன்னும் பண்ண முடியாது" என்று சொல்வார். அதில் வரும் சமுத்திரக்கனியாக ரிஷப் பண்டை மாற்றி, "டெஸ்ட் கிரிக்கெட்னு வந்துட்டா.. எவனாலயும் என்னைய ஒன்னும் செய்ய முடியாது" என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் திரை தீ பிடிக்கும், ஒருத்தன் வந்தால் படை நடுங்கும் ரகம்.

விஐபி படத்தில் தனுஷ், "அமுல் பேபி.. இந்த ரகுவரனை வில்லனா தான் பார்த்திருக்கிற.. ஹீரோவா பார்த்தது இல்லையே.. இனிமே பாப்ப" என்று சொல்வார். அதில் வரும் தனுஷாக சுப்மன் கில்லை மாற்றி, "அமுல் பேபி.. என்னைய பிளேயரா தான பார்த்திருக்க.. கேப்டன் பண்ணி பார்த்தது இல்லையே.. இனிமே பார்ப்ப" என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் தடை அதை உடை.. புது சரித்திரம் படை ரகம்.














Click it and Unblock the Notifications