Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

500 ரன்கள் போதாது.. இந்திய அணி வெற்றிபெற இந்த 2 விஷயத்தை செய்ய வேண்டும்.. இல்லனா கஷ்டம்தான்!

Subscribe to Oneindia Tamil

பர்மிங்ஹாம்: இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 2வது இன்னிங்ஸில் 244 ரன்கள் முன்னிலையுடன் களத்தில் இருக்கிறது. கைவசம் 9 விக்கெட்டுகள் இருக்கும் நிலையில், இங்கிலாந்து அணிக்கு மிகப்பெரிய இலக்கு நிர்ணயிப்பதை விடவும், போதுமான ஓவர்கள் மற்றும் நேரத்தை கொடுக்காமல் இருந்தால் மட்டுமே இந்திய அணியால் வெற்றி பெற முடியும் என்று பார்க்கப்படுகிறது.

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி பர்மிங்ஹாம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் கேப்டன் சுப்மன் கில்லின் இரட்டை சதம் காரணமாக 587 ரன்களை குவித்தது. இதன்பின் களமிறங்கிய இங்கிலாந்து அணி ஹாரி ப்ரூக் - ஜேமி ஸ்மித்தின் அதிரடி ஆட்டத்தால் 407 ரன்களை எடுத்து ஆல் அவுட்டாகியது.

IND vs ENG Shubman Gill Jasprit Bumrah

600 ரன்கள்

இதன் மூலமாக 180 ரன்கள் என்ற பெரிய இலக்குடன் இந்திய அணி 2வது இன்னிங்ஸை தொடங்கியது. 3வது நாள் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 64 ரன்கள் எடுத்து களத்தில் உள்ளது. இந்திய அணியின் கைவசம் 9 விக்கெட்டுகள் இருக்கும் நிலையில், பிட்சும் பேட்டிங்கிற்கு சாதகமாகவே இருக்கிறது. இதனால் எளிதாக இந்திய அணியின் முன்னிலையை 600 ரன்களுக்கு மேல் கொண்டு செல்ல வேண்டும்.

ஜோ ரூட் விக்கெட்

ஏனென்றால் இங்கிலாந்து அணிக்கு 500 ரன்களுக்கு மேல் இலக்கு நிர்ணயித்து ஒருநாள் முழுவதும் பேட்டிங் ஆட கொடுத்தாலும், அந்த அணி வெற்றியா, தோல்வியா என்று போட்டு பார்க்கலாம் என்றே களமிறங்குவார்கள். ஓவர்களும், நேரமும் இருக்கும் பட்சத்தில், ஜோ ரூட்டை ஒரு பக்கம் நிறுத்திவிட்டு அனைத்து பேட்ஸ்மேன்களும் டி20 கிரிக்கெட்டை விளையாட முயற்சிப்பார்கள்.

பாகிஸ்தான் சம்பவம்

இதனால் இந்திய அணிக்கு பின் விளைவுகள் கூட ஏற்படலாம். ஏற்கனவே பாகிஸ்தான் மண்ணில் நடந்த டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் அணி 500 ரன்களுக்கு மேல் சேர்க்க, பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து அணி 800 ரன்களுக்கு மேல் குவித்து ஷாக் கொடுத்தது. இதனால் இங்கிலாந்து மண்ணில் உள்ள தார் ரோடு பிட்சை நம்ப முடியாது.

இந்தியா என்ன செய்ய வேண்டும்?

இதனால் இந்திய அணி முதலில் செய்ய வேண்டியது இலக்கை 580 ரன்களுக்கு மேல் கொண்டு செல்வதுதான். இதன்பின் இங்கிலாந்து அணிக்கான நேரத்தை கட்டுக்குள் கொண்டு வருவது. கடைசி நாளில் மட்டுமே பேட்டிங் செய்ய கொடுத்தால், அந்த அணி வீரர்கள் கூடுதல் ஆக்ரோஷத்துடன் விளையாட தொடங்குவார்கள். வெற்றிக்காக செல்லும் போது ரன் ரேட் பிரஷர் இருந்து கொண்டே இருக்கும்.

ரன் ரேட் அழுத்தம்

அந்த ரன் ரேட் அழுத்தத்தை வைத்து மட்டுமே இந்திய அணியால் வெல்ல முடியும். கடந்த போட்டியில் சுமார் 400 ரன்கள் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்ட போது, அவர்கள் நேரடியாக வெற்றிக்கு சென்றதற்கு காரணம் அந்த அணிக்கு கிடைத்த நேரம் தான். அதனால் அவர்களின் உடல்மொழியில் தோல்வியை ஒப்புக்கொள்ளும் வரை, இந்திய அணி பேட்டிங் செய்ய வேண்டும்.

சாதிக்குமா?

பும்ரா இல்லாமல் ஒரு போட்டியில் இந்திய அணி வெல்வது என்பது தங்கத்திற்கு ஈடானது. அப்படி இந்திய அணி 2வது டெஸ்ட் போட்டியில் வென்றுவிட்டால், லார்ட்ஸ் மைதானத்தில் பும்ராவுடன் இந்திய அணி களமிறங்கும். இதனால் இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் தொடரை வெல்லும் வாய்ப்பு சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணிக்கு கிடைக்கும் என்று பார்க்கப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+